நீலகிரியின் வியபாரிகளுக்காக வெள்ளையர்களால் உருவாக்கப்பட்ட, ஊட்டி மாநகராட்சி வணிகச்சந்தை குறைந்த வருமானம் கொண்ட விவசாயிகளுக்கு அனைத்து விவசாய பொருட்களை நேரடியாக தங்கள் நுகர்வோருக்கு விற்க உதவுகிறது . நீலகிரியில் இந்த சந்தையில் உள்ள கடைகளை ஒன்பது வருடத்திற்கு ஒருமுறை குத்தகை ஒப்பந்தம் செய்து தர வேண்டும் . மூன்று வருடங்களுக்கு ஒரு முறை தற்போது இருக்கும் வாடகையில் 15 சதவிகிதம் அதிகரித்து உயர்த்தி தர வேண்டும் என்பது உச்ச நீதிமன்ற உத்தரவு .
2016 ஆம் ஆண்டு ஜூன் மாதத்தில் மிக அதிகமான வாடகை உயர்த்தி நகராட்சி அறிவித்தது. இதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கில், வியாபாரிகளின் அடிப்படை கோரிக்கைகளை தனித்தனியாக ஆய்வு செய்து கடை வாடகையை நிர்ணயம் செய்ய வேண்டும் என்றும் நகராட்சி நிர்வாகம் அளித்துள்ள நோட்டிஸ்களை ரத்து செய்தும் சரியான வாடகையை முறைப்படுத்தவும் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
சதுர அடி கணக்கில் அதிகரிக்கப்பட்ட இந்த புதிய வாடகை தொகையினை செலுத்த முடியவில்லை மாறாக சதவீத அடிப்படையில் செலுத்துகிறோம் என்று கேட்டு வியாபாரிகள் அனைவரும் ஒன்று சேர்ந்து போராட்டங்களில் ஈடுபட்டனர் .
2020 ஆம் ஆண்டில் கொரோனாவினால் வியாபாரம் முடங்கியது.. வியாபாரிகள் கடைகளை திறக்க முடியாமல் மிகுந்த சிரமத்திற்கு உள்ளாகினர். இந்நிலையில் ஐந்து வருடங்களாக பாக்கியுள்ள நிலுவைத் தொகையை முழுமையாகச் செலுத்தினால் தான் கடைகளை செயல்பட அனுமதிப்போம் என்று கூறி மாநகராட்சி அதிகாரிகள் ஆகஸ்ட் 25ஆம் தேதி கடைகளை மூடி சீல் வைத்து, வியாபாரிகளையும் கைதும் செய்தனர்.
திராவிட முன்னேற்ற கழகம் அவர்களுடைய தேர்தல் அறிக்கையில் நகராட்சி கடைகளில் வாடகை 10 % மிகாமல் வாடகை நிர்ணயம் செய்து தருவதாக மேட்டுப்பாளையத்தில் நடந்த தேர்தல் கூட்டத்தில் தற்போதைய முதல்வர் திரு.மு.க.ஸ்டாலின் வாக்குறுதி அளித்தார். அந்த வாக்குறுதி திராவிட முன்னேற்றக் கழகத்தின் தேர்தல் அறிக்கை பக்கம் எண் 73 வாக்குறுதி எண் 301 ல் வாக்குறுதி அச்சிட்ப்பட்டுள்ளது.
ஆனால் கடந்த ஒரு வார காலமாக, வியாபாரிகள் அதிகாரிகளை சந்தித்து மன்றாடிய பிறகும், பாரதிய ஜனதா கட்சி உடன் இணைந்து போராட்டம் நடத்திய பிறகும், சீல் வைத்த கடைகள் இன்னும் திறந்தபாடில்லை.
அரசுக்கு சில கேள்விகள்
1. வியாபாரிகளுக்கு உதவி செய்வதற்காக கட்டப்பட்ட அரசு சந்தை கட்டிடங்கள் வியாபாரிகளுக்கு உதவுவதற்கா? கொள்ளை லாபம் ஈட்டுவதற்கா?
2. சதவீத அடிப்படையில் வாடகையை உயர்த்தி தர வியாபாரிகள் தயாராக இருக்கும்போது சதுர அடி கணக்கில் மிக அதிக வாடகை வசூலிக்க வேண்டிய அவசியம் என்ன?
3. வியாபாரிகளின் சரக்குகள் அதுவும் அழுகிப்போகும் பொருட்கள் உள்ளே வைத்திருக்கும் போது முன்னறிவிப்பு இல்லாமல் காவல்துறை உதவியுடன் அத்தனை கடைகளுக்கும் சீல் வைத்ததால் லட்சக்கணக்கான மதிப்புள்ள பொருட்களும் நாசம் அடைந்துள்ளது. மார்க்கெட் பகுதி அழுகிப்போன பொருட்களால் துர்நாற்றம் வீசுகிறது. யாருக்காக இந்த அவசரம்?
4. ஏற்கனவே கொரோனா நோய் தொற்றினால் பல மாதங்களாக வியாபாரம் இழந்து, வியாபாரிகள் சிரமப்பட்டு கடனுக்கு பொருட்கள் வாங்கி குவித்திருக்கும் போது இப்படி திடீரென்று கடைக்களுக்கு சீல் வைக்க வேண்டிய அவசியம் என்ன?
5. வியாபாரிகளை கைது செய்ய வேண்டிய அவசியம் என்ன?
6. வாடகை கட்டாத வியாபாரிகளை அரசு காவல்துறையை வைத்து மிரட்டியும், கதவுகளுக்கு பூட்டு போட்டும், வாடகை கட்டத் தவறியவர்களை கைது செய்தும், காய்கறிகளை நாசம் செய்தும், எடுக்கும் நடவடிக்கை போல இனி தனியார் கட்டிட உரிமையாளர்களும் வாடகைதாரர்களிடம் இதே போல நடந்து கொள்ளலாமா?
7. ஊட்டியில் விளையும் காய்கறிகளை இதர மாவட்டங்களுக்கும் பிற மாநிலங்களுக்கும் அனுப்பும் சந்தை மூடப்பட்டதால் விவசாயிகளின் வணிகர்களும் பாதிக்கப்பட்டு காய்கறிகளின் விலை ஒட்டுமொத்தமாக அதிகரித்துவிட்டது. இதை கவனித்தீர்களா?
8. பெட்ரோல் / டீசல் விலை குறைப்பு, கேஸ் மானியம் கூடுதலாக, குடும்பத் தலைவிக்கு சம்பளம், கூட்டுறவு நகை கடன் ரத்து, நீட் தேர்வு ரத்து, என தாங்கள் மறந்து போன வாக்குறுதிகளின் வரிசையில் தங்களின் 301வது வாக்குறுதியையும் சேர்த்துக்கொள்ளலாமா?
9. கடந்த ஒரு வார காலமாக மாநகராட்சியின் மார்க்கெட் பகுதி கதவடைத்து சீல் வைக்கப்பட்டு இருப்பதால் விவசாய பொருட்களை சந்தைப்படுத்த முடியாமல் தவிக்கும் விவசாயிகளின், வியாபாரிகளின், துயரத்தை இன்னும் உங்கள் கவனத்திற்கு யாரும் கொண்டு வரவில்லையா?
10. விடியலுக்கு முன்பாக தொடங்கும் காய்கறிகளின் மொத்த வியாபாரிகள் தங்கள் விடியலுக்காக காத்திருக்கிறார்கள்… கவனிக்குமா அரசு
நன்றி அண்ணாமலை
பாஜக மாநில தலைவர்
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
பித்த நீரைச் சேமித்து வைக்கும் பித்தநீர் சேமிப்புப் பையில் தொற்று நோய்களின் பாதிப்பு ... |