அதிமுக குறித்து பாஜக சட்டப் பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன் தெரிவித்த கருத்துக்கு அதிமுக தலைமையிடம் பாஜக மாநிலத்தலைவர் அண்ணாமலை வருத்தம் தெரிவித்துள்ளார்.
தஞ்சை மாவட்ட பள்ளிமாணவி தற்கொலை செய்துகொண்ட விவகாரத்தை சிபிஐ விசாரிக்கக் கோரி தமிழ்நாடு பாஜகவினர் சென்னை வள்ளுவர்கோட்டத்தில் செவ்வாய்க்கிழமை உண்ணாவிரதப் போராட்டத்தில்ஈடுபட்டனர்.
இந்நிலையில் இந்த உண்ணாவிரத போராட்டத்தில் கலந்து கொண்டு பேசிய பாஜக சட்டப்பேரவை உறுப்பினர் நயினார் நாகேந்திரன்,“சட்டப்பேரவையில் தைரியமாக முதுகெலும்புடனும், ஆண்மையுடனும் பேசக்கூடிய கட்சியாக அதிமுகவை நான் பார்க்கவில்லை. 4 சட்டப்பேரவை உறுப்பினர்களுடன் மட்டுமே இருக்கும் நம்மால் பலத்தகுரலை எழுப்ப முடிவதில்லை” எனத் தெரிவித்தார்.
அதனைத்தொடர்ந்து அதிமுகவினர் பலரும் அவரதுகருத்துக்கு கண்டனம் தெரிவித்தனர்.
இந்நிலையில் பாஜக மாநிலத் தலைவர் அண்ணாமலை அதிமுக இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி கே.பழனிசாமியிடம் வருத்தம்தெரிவித்துள்ளார். அதிமுக- பாஜக இடையே உள்ள அரசியல்உறவு சுமூகமாக உள்ளதாகத் தெரிவித்துள்ள அவர் இது குறித்து எந்தவித சர்ச்சையும் எழாமல் இருக்க கவனமுடன் செயல் படுவதாகக் குறிப்பிட்டுள்ளார்.
முன்னதாக இது குறித்து விளக்கமளித்த நயினார் நாகேந்திரன், “அஇஅதிமுக பற்றிய என்னுடைய கருத்துக்கள் தவறுதலாக புரிந்துகொள்ளப் பட்டுள்ளது. நான் கூறியகருத்துக்கு எந்தவித உள்நோக்கமும் இல்லை. போராட்டத்தின் மூலம் நீதிகிடைக்க வேண்டும் என்பதே எங்கள் ஒரேஎண்ணம்” என தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ... |
தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும். மனம் ஒரே பொருளின் மேலேயே ... |