நம்பிக்கை துரோகி என்றால் அது அதிமுக பொது செயலாளர் இ.பி.எஸ்.,க்கே பொருந்தும் -தமிழக ப.ஜ.க.,தலைவர் அண்ணாமலை

”நம்பிக்கை துரோகி என்றால் அது அதிமுக பொதுச்செயலாளர் இ.பி.எஸ்.,க்கே பொருந்தும் என தமிழக பா.ஜ.க., தலைவர் அண்ணாமலை கடுமையாக விமர்சித்துள்ளார்.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் பாமக வேட்பாளர் அன்புமணியை ஆதரித்து தமிழக பா.ஜ.க  தலைவர் அண்ணாமலை பிரச்சாரம் செய்தார். அதற்கிடையே செய்தியாளர்களிடம் அண்ணாமலை கூறியதாவது: கர்நாடகா, பீஹார் உள்ளிட்ட மாநிலங்களில் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த அதிகாரம் இருக்கும்போது, தமிழகத்திற்கு மட்டும் அதிகாரம் இல்லையா? முதல்வர் ஸ்டாலின் ஜாதிவாரி கணக்கெடுப்பு நடத்த தயாராக இல்லை; அதிகாரமில்லை என பச்சைப்பொய் சொல்கிறார். அந்தந்த மாநில அரசுகள் கணக்கெடுப்பு நடத்தும்போது மத்திய அரசு தடுப்பதில்லை.

அதிமுக அழிவு

அதிமுக.,வின் தொண்டர்கள் எல்லாம் பா.ஜ., உள்ளிட்ட மாற்றுக்கட்சியை நோக்கி படையெடுத்து வருகின்றனர். அதன் தாக்கத்தை 2024 லோக்சபா தேர்தலில் பா.ஜ.,வின் ஓட்டு சதவீதத்தில் பார்க்கலாம். நம்பிக்கை துரோகி என்ற பெயர் இ.பி.எஸ்.,க்கு பொருந்தும். சிலரின் சுயலாபத்திற்காக அதிகார வெறிக்காக, கண்முன்னால் அதிமுக அழித்துக்கொண்டிருக்கிறார். லோக்சபா தேர்தலில் 134 வாக்குறுதிகளை வழங்கிய இ.பி.எஸ் எப்போது நிறைவேற்றுவார்? எம்பி.,க்களே இல்லாமல் எப்படி நிறைவேற்றுவார்?

சீக்ரெட்

கோவையில் 9ல் 7 எம்எல்ஏ.,க்களை வைத்துள்ள அதிமுக, கோவை எங்கள் கோட்டை எனக்கூறிவிட்டு ஏன் தோற்றது? வெறும் டெபாசிட் வாங்கியும் வீர வசனம் பேசுகிறார் இபிஎஸ். இந்த சூழலில் எனக்கு அவர் அறிவுரை சொல்கிறார். அதிமுக கரையான் போல கரைகிறது. ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலின் சீக்ரெட் அண்ணாமலைக்கு தெரியும் என இபிஎஸ் சொல்கிறார்.
அந்த சீக்ரெட் என்னவென்றால், ‘நாங்கள் (அதிமுக) மட்டும் நிற்க வேண்டும், ஓபிஎஸ் தரப்பில் வேட்பாளரை நிறுத்த வேண்டாம், நாங்கள் ஒன்றரை லட்சம் ஓட்டு வித்தியாசத்தில் வெல்ல வேண்டும்’ என தொலைப்பேசியில் பேசினார். இபிஎஸ் கேட்டுக்கொண்டதால் ஜென்டில்மேனாக ஓபிஎஸ் விலகிக்கொண்டார்.

தேர்தலை புறக்கணிப்பாரா

ஆனால், ஈரோடு கிழக்கு இடைத்தேர்தலில் பல ஆயிரம் ஓட்டு வித்தியாசத்தில் தோற்றார். விக்கிரவாண்டி இடைத்தேர்தலில் போட்டியிடாததற்கு புதுப்புது காரணங்களை கூறிவருகிறார். இப்போது சட்டம் ஒழுங்கு சரியில்லை அதனால் இடைத்தேர்தலை புறக்கணித்ததாக கூறும் இபிஎஸ், 2026லும் சட்டம் ஒழுங்கு சரியில்லை எனில், 2026 சட்டசபை தேர்தலையும் புறக்கணிப்பாரா?


முதுகில் குத்திய துரோகி

பா.ஜ., உங்களுக்கு அடிமையாக இருப்பதற்கு இல்லை; தமிழகத்திற்கு நல்லாட்சி கொடுக்கவே பா.ஜ., இருக்கிறது. தனது அருகில் நிற்கவைத்து அங்கீகாரம் கொடுத்த பிரதமர் மோடியின் முதுகில் குத்திய துரோகி இபிஎஸ். அவர் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்டு முதல்வரானாரா? தலைமை சரியில்லாததால் அதிமுக.,வுக்கு மக்கள் தண்டனை கொடுத்திருக்கிறார்கள்; லோக்சபா தேர்தலில் அதிமுக பல இடங்களில் டெபாசிட் இழந்துள்ளது. தன் கட்சியை காப்பாற்ற முடியாத இபிஎஸ் எனக்கு அறிவுரை கூற வேண்டியதில்லை. இவ்வாறு அண்ணாமலை கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமு ...

மே 2-ல் விழிஞ்சம் சர்வதேச துறைமுகத்தை திறந்து வைக்கிறார் பிரதமர் மோடி கேரளமாநிலம் திருவனந்தபுரம் விழிஞ்சத்தில் பொது-தனியார் கூட்டாண்மைமாதிரியின் கீழ் ரூ.8 ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை ந ...

இயேசு கிறிஸ்துவின் தியாகத்தை நினைவு கூறுகிறோம் புனித வெள்ளி குறித்து மோடியின் பதிவு கிறிஸ்தவ மக்களின் புனித நாள்களில் ஒன்றாக கருதப்படும் புனித ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து ...

தொழில்நுட்பத்துறையில் இணைந்து செயலாற்ற எலான் மஸ்குடன் பிரதமர் மோடி பேச்சு மேம்படுத்தப்பட்ட தொழில்நுட்பத்தில் அமெரிக்காவுடன் இணைந்து செயல்படுவதில் இந்தியா உறுதியாக ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீ ...

தேவைற்ற கருத்துக்களை சொல்லாதீர்கள் – வங்க தேசத்திற்கு இந்தியா கண்டனம் மேற்குவங்கத்தில் வக்ப் திருத்த சட்டத்திற்கு எதிராக நடந்த வன்முறை ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் ம ...

வக்ப் திருத்த சட்டம் : பிரதமர் மோடிக்கு  நன்றி தெரிவித்த தாவூதி போஹ்ரா சமூகத்தினர் வக்ப் திருத்தச் சட்டத்திற்கு நன்றி தெரிவிக்க தாவூதி போஹ்ரா ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந் ...

பாகிஸ்தான் ராணுவ தளபதிக்கு இந்தியா கண்டனம் காஷ்மீர் குறித்து பேசிய பாகிஸ்தான் ராணுவ தளபதி அசிம் ...

மருத்துவ செய்திகள்

அருகம்புல்லின் மருத்துவக் குணம்

காய கல்ப மூலிகைகள் என்று போற்றப்படுபவைகளில் முக்கியமான இடத்தைப் பிடித்திருப்பது அருகம்புல்லாகும். இது ...

உப்பு

'உப்பில்லாப் பண்டம் குப்பையிலே' என்பது பழமொழி. அளவான உப்பு சுவையுள்ளது. அளவுக்கு அதிகமான ...

தொப்புள் கொடி உயிர் அணு (Stem Cord Cells)

Stem Cord Cells (தொப்புள் கொடி உயிர் அணு) சேமிப்பு பற்றி இப்பொழுது ...