நவீன கால போர்களுக்கு தயாராக இருக்க வேண்டும் -ராஜ் நாத் சிங்

 ‘பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இப்படி புதிய களத்தில் நடக்கும் போர் பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது’ என பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.

தேசிய பாதுகாப்பு கல்லூரியின் பட்டமளிப்பு விழாவில், பாரம்பரிய போர் முறை மற்றும் தற்காலிக போர் முறை குறித்து, ராஜ்நாத் சிங் விளக்கம் அளித்தார். அவர் கூறியதாவது:

சர்வதேச புவி அரசியல் சூழல்களில் ஏற்படும் மாற்றங்களால் எதிர்காலத்தில் ஏற்பட உள்ள சிக்கல்கள் குறித்து ராணுவ அதிகாரிகள் சிந்திக்க வேண்டும். சர்வதேச உறவுகளில் எடுக்கப்படும் முடிவுகளை அதிகாரிகள் கூர்ந்து கவனிக்க வேண்டும். போர்க்களத்தை தாண்டி அதன் தாக்கம் தூதரக, பொருளாதார உறவுகளில் எதிரொலிக்க வாய்ப்புள்ளது.

ஏ.ஐ., மற்றும் ட்ரோன் உள்ளிட்ட தொழில்நுட்ப ரீதியான நவீனகால போர் முறைகளை எதிர்கொள்ள ராணுவ அதிகாரிகள் தயாராக இருக்க வேண்டும். பாரம்பரிய போர் முறைகளுக்கு பதிலாக, சைபர், விண்வெளி மற்றும் பொருளாதாரம் மற்றும் தகவல்கள் வாயிலாக தற்கால போர் நடக்கிறது. இத்தகைய போர், பாரம்பரிய போர் முறைகளை விஞ்சிவிட்டது.

இது போன்ற பிரச்னைகளுக்கு தீர்வு காணும் வழிகளை அதிகாரிகள் கண்டறிந்து செயல்பட வேண்டும். இது தொடர்புடைய படிப்புகளை தேசிய பாதுகாப்பு கல்லூரி தங்கள் பாடத்திட்டத்தில் இணைத்து பயற்சி அளிப்பது அவசியமாகும். இந்த பயிற்சி பிராந்திய பாதுகாப்பு மற்றும் வளமையை மேம்படுத்த உதவும். இவ்வாறு அவர் பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள� ...

இந்தியாவிற்கு தேவை கூட்டாளிகள் – ஜெய்சங்கர் ''இந்தியா உடன் ஆழமான உறவை பேணுவதற்கான தங்கள் விருப்பத்தையும், ...

பகல்காம் விவகாரத்தில் நீங்கள் � ...

பகல்காம் விவகாரத்தில் நீங்கள் நினைப்பது நிச்சயம் நடக்கும் – ராஜ்நாத் சிங் உறுதி பஹல்காம் விவகாரத்தில் நீங்கள் எதிர்பார்த்தபடி பிரதமர் மோடியின் நடவடிக்கை ...

பிரதமர் மோடியுடன் விமானப்படை த� ...

பிரதமர் மோடியுடன் விமானப்படை தளபதி ஆலோசனை இந்தியா - பாகிஸ்தான் இடையே போர் பதற்றம் உச்சத்தில் ...

சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் � ...

சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்குக்கு பிரதமர் மோடி வாழ்த்து சிங்கப்பூர் பிரதமர் தேர்தலில் வெற்றி பெற்ற லாரன்ஸ் வாங்குக்கு ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – � ...

பிரதமர் மோடிக்கு முழு ஆதரவு – அமெரிக்கா பஹல்காம் தாக்குதலுக்குப் பிறகு இந்தியா-பாகிஸ்தான் பதட்டங்கள் அதிகரித்து வரும் ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இண� ...

ஆன்மிகமும், தொழில்நுட்பமும் இணைந்து செயல்பட முடியும்: ஜேபி நட்டா சமூகத்தின் முன்னேற்றத்திற்காக, ஆன்மிகமும் தொழில்நுட்பமும் எவ்வாறு இணைந்து செயலாற்ற ...

மருத்துவ செய்திகள்

மிளகாயின் மருத்துவக் குணம்

பசி தூண்டியாகவும், குடல் வாயு அகற்றியாகவும் செயல்படுகிறது.

பள்ளி செல்லுகின்ற குழந்தைகளுக்கான உணவு

பள்ளிக்குச் செல்லுகின்ற குழந்தைகளுக்கு நல்ல சத்தான ஆரோக்கியமான உணவு கிடைத்தால்தான் அந்தக் குழந்தைகள் ...

வயிற்றுப்போக்குக்கான உணவுமுறைகள்

பல்வேறு வயிற்றுப்போக்கு, பேதி, காலரா, வயிற்றுக்கடுப்பு போன்றவற்றில் பல முறை தொடர்ந்து வயிற்றுப்போக்கு ...