நல்லாட்சி என்பது பாஜக வின் அடையாளம் – பிரதமர் மோடி பெருமிதம்

‘இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு, அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம்’ என பிரதமர் மோடி பெருமிதம் தெரிவித்துள்ளார்.

முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் பிறந்த நாளையொட்டி, மத்திய பிரதேசம் மாநிலம் சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோ என்ற இடத்தில் பல்வேறு திட்டங்களுக்கு பிரதமர் மோடி அடிக்கல் நாட்டினார். அவரது பிறந்தநாளை முன்னிட்டு, நினைவு நாணயம் மற்றும் தபால் தலையை பிரதமர் மோடி வெளியிட்டார். நிகழ்ச்சியில், அவர் பேசியதாவது: கடந்த காலங்களில் காங்கிரஸ் அரசு அறிவிப்புகளை வெளியிடுவதில் நிபுணத்துவம் பெற்றதாக இருந்த போதிலும், அதன் பலன் மக்களுக்கு கிடைக்கவில்லை. பிரதமரான பிறகு, பழைய திட்டங்கள் குறித்து ஆய்வு செய்தேன்.

40 ஆண்டுகளுக்கு முன்பு அடிக்கல் நாட்டப்பட்டு, சில திட்டங்கள் ஒரு வேலை கூட நடைபெறவில்லை என்பது வியப்பளிக்கிறது.சுதந்திரம் அடைந்து 75 ஆண்டுகள் நிறைவடைந்துள்ள நிலையில், ஒருமுறை பரிணாம வளர்ச்சியை மேற்கொள்ள வேண்டும். நாட்டில் பா.ஜ.,வுக்கு எங்கு பணியாற்ற வாய்ப்பு கிடைத்ததோ, அங்கெல்லாம் பழைய சாதனைகளை முறியடித்து, மக்கள் நலன் மற்றும் வளர்ச்சிப் பணிகளில் வெற்றி பெற்றுள்ளோம் என்று நம்பிக்கையுடன் கூறுகிறேன். சாமானியர்களுக்காக நாங்கள் எவ்வளவு அர்ப்பணிப்புடன் இருக்கிறோம் என்பது மக்களுக்கு தெரியும். சுதந்திரப் போராட்ட வீரர்களின் கனவுகளை நனவாக்க இரவு பகலாக உழைக்கிறோம்.

கடந்த 1 வருடத்தில் வளர்ச்சி புதிய வேகம் பெற்றுள்ளது. இன்று பல கோடி ரூபாய் மதிப்பிலான வளர்ச்சித் திட்டங்கள் தொடங்கப்பட்டு அடிக்கல் நாட்டப்பட்டுள்ளன. நல்லாட்சி என்பது பா.ஜ.,வின் அடையாளம். இன்று உலகம் முழுவதும் கிறிஸ்துமஸ் பண்டிகை கொண்டாடப்படுகிறது. நாட்டிலும், உலகிலும் உள்ள கிறிஸ்தவ சமூகத்தைச் சேர்ந்த மக்களுக்கு எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். முதல்வர் மோகன் யாதவ் தலைமையிலான பா.ஜ., அரசு ஓராண்டு நிறைவடைந்துள்ளது. அவருக்கும், பா.ஜ., தொண்டர்களுக்கும், மாநில மக்களுக்கும் எனது வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன். இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடி ...

உலகளாவிய நெருக்கடிகளை முறியடித்து இந்தியா முன்னேறி வருகிறது: மத்திய அமைச்சர் ஜெய்சங்கர் மகிழ்ச்சி உல​களா​விய நெருக்​கடிகளை முறியடித்து இந்தியா முன்​னேறி வரு​கிறது என்று ...

மருத்துவ செய்திகள்

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.