”நாட்டின் நீர்வள மேம்பாட்டில், அம்பேத்கரின் பங்களிப்பை காங்., முற்றிலும் புறக்கணித்தது,” என, பிரதமர் நரேந்திர மோடி குற்றஞ்சாட்டினார்.
மத்திய பிரதேசத்தில் முதல்வர் மோகன் யாதவ் தலைமையில் பா.ஜ., ஆட்சி நடக்கிறது. இங்கு சத்தர்பூர் மாவட்டத்தில் உள்ள கஜுராஹோவில் நேற்று நடந்த நிகழ்ச்சியில் பங்கேற்ற பிரதமர் மோடி, கென் – -பெட்வா நதிகளை இணைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்டினார்.
மொத்தம் 44,605 கோடி ரூபாய் மதிப்பீட்டில் மேற்கொள்ளப்படும் இத்திட்டத்தால், ம.பி.,யின் 10 மாவட்டங்களில் உள்ள 44 லட்சம் மக்களும், உ.பி.,யில் 21 லட்சம் மக்களும் குடிநீர் பெறுவர்.
மேலும், 103 மெகாவாட் நீர் மின்சாரம் மற்றும் 27 மெகாவாட் சூரிய சக்தியும் இத்திட்டத்தால் உற்பத்தி செய்யப்படும். தொடர்ந்து, கந்த்வா மாவட்டத்தில் ஓம்காரேஷ்வர் மிதக்கும் சூரிய சக்தி திட்டத்தை, வீடியோ கான்பரன்ஸ் வாயிலாக துவக்கி வைத்த பிரதமர் மோடி, மறைந்த முன்னாள் பிரதமர் வாஜ்பாயியின் 100வது பிறந்த நாளையொட்டி, அவரது நினைவு தபால் தலை மற்றும் நாணயத்தையும் வெளியிட்டார்.
இதன்பின், பிரதமர் மோடி பேசியதாவது:
அம்பேத்கரின் தொலைநோக்கு பார்வை, நாட்டின் நீர்வளத்தை வலுப்படுத்துதல், அவற்றின் மேலாண்மை மற்றும் அணை கட்டுதல் போன்றவற்றில் குறிப்பிடத்தக்க பங்களிப்பை அளித்தது.
முக்கிய நதி பள்ளத்தாக்கு திட்டங்களின் வளர்ச்சியிலும், மத்திய நீர் ஆணையம் அமைப்பதிலும் அம்பேத்கர் முக்கிய பங்கு வகித்தார்.
மத்தியில் பல ஆண்டுகள் ஆட்சியில் இருந்த காங்., நாட்டின் நீர் பாதுகாப்பின் தேவையை ஒருபோதும் உணரவில்லை. மேலும், நீர்வள மேம்பாட்டில் அம்பேத்கரின் முயற்சிகளை அக்கட்சி அங்கீகரிக்கவில்லை. அவரது பேச்சையும் கேட்கவில்லை.
அம்பேத்கருக்கு உரிய மரியாதை அளிக்காமல், காங்., தலைவர்கள் புறக்கணித்தனர். 21ம் நுாற்றாண்டின் முக்கிய சவால் நீர் பாதுகாப்பு. இந்த நுாற்றாண்டில் சரியான நிர்வாகத்துடன் போதுமான நீர் வளம் உள்ள நாடுகள் மட்டுமே முன்னேற முடியும். கென்- – பெட்வா நதிகள் இணைப்பு திட்டம், புந்தேல்கண்ட் பகுதியில் செழிப்பு மற்றும் மகிழ்ச்சியின் புதிய கதவுகளை திறக்கும்.
இவ்வாறு அவர் பேசினார்.
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |