விண்கற்கள் தினமும் பூமியை நோக்கி வந்தபடியே இருக்கின்றன. சில விண்கற்கள் பூமியின்மீது விழுந்து வடுக்களையும், சேதங்களையும் ஏற்படுத்துகின்றன, இதய் உன்னிப்பாகக் கவனித்து வரும் விஞ்ஙானிகள் இக்கற்களை பெரும் ஆய்வுக்கு உட்படுத்தி இதன் தொற்றுவாய் என்ன? எங்கிருந்து இக்கற்கள் வருகிறது என்பதில் கவனம் செலுத்தி ஆய்வுகளை முடுக்கிவிட்டிருக்கின்றனர்.
விண்கற்களில் இரண்டு வகையான கற்கள் உள்ளன . மண் பொருளான கற்கள் ஒன்று , மற்றவை உலோகப் பொருள்களால் ஆனவை.
அமெரிக்காவின் அரிசேனா மாகாணத்தில் டெட்ரிஃபைய்ட்ஃபாரஸ்ட் என்னும் பாலைவனத்திற்கு சற்று தொலைவில், பாரிஸ்கர்கிடாரப் பள்ளம் என்ற ஒரு பள்ளம் உள்ளது . அதன் ஆழம் 600 அடி குறுக்களவு முக்கால் மைல் என்ற அளவில் இன்றைக்கும் இருக்கிறது. சுமாராக 2500 ஆண்டுக்கு முன்பு விண்கல் ஒன்று விழுந்த சுவடுதான் அந்த பள்ளம். இது மாதிரி நிறைய பள்ளங்கள் பூமியின் மீது காணப் படுகின்றன,
1908 ஆம் ஆண்டில் மிகப் பெரிய விண் கல் ஒன்று சைபீரியாவில் வந்து விழுந்து மிகப் பெரிய சேதத்தை ஏற்படுத்தியிருக்கிறது.அந்த பகுதியில் நின்று கொண்டிருந்த மிகப்பெரிய மரங்கள் பிடுங்கி எறியப்பட் tana , ரெயின்டியர் எனற மான் மந்தை ஒன்று முழுவதுமாக அழிந்தொழிக்கப்பட்டிருக்கிறது.அந்த வெடிப்பினால் ஏற்பட்ட அழுத்த அலை சுமார் சுமார் 3000 மைல்களுக்கு அப்பால் இருக்கக் கூடிய இங்கிலாந்து நாட்டை அதிர வைத்ததாக சில அறிவியல் நூல்கள் குறிப்பிடுகிறது.
அல்லிப் பூ குளிர்ச்சி உள்ளது. உடலுக்கும் குளிர்ச்சியைத் தரவல்லது. எனவே உடலில் காணும் ... |
இரத்த அழுத்தம் அதிகமுள்ளவர்கள் கீழ்காணும் உணவுகளைக் கண்டிப்பாகத் தவிர்க்க வேண்டும். |
Leave a Reply
You must be logged in to post a comment.