புதுடில்லி மர் கட்வாலா பாபா எனும் ஆஞ்சனேயர

 புதுடில் லி மர் கட்வாலா பாபா  எனும்  ஆஞ்சனேயரபுதுடில்லில் உள்ள செங்கோட்டைக்குப் பின்புறம் அதாவது சதாரா என்ற ஊருக்கு செல்லும் வழியில் உள்ள நெடும்சாலையில் அமைந்து உள்ளது பழுதடைந்த கட்டிடத்தில் உள்ள புகழ் பெற்ற அந்த அனுமான் ஆலயம் மிக மிகப் பழமையானது என்பதை ஆலயத் தோற்றமே தெரிவிக்கின்றது. அதை மர்கட்வாலா ஆலயம் என்றும் கூறுகின்றனர்.

புது டில்லியில் இருந்து வெளி ஊர்களுக்குச் செல்லும் பஸ்கள் புறப்படும் இடத்தில் இருந்து நொயிடா (ழேனைய) மற்றும் சஹாரா விகாரில் இருந்து விமான நிலையம் செல்லும் நெடும் பாதையில் நேராகச் சென்றால், செங்கோட்டையின் பின்புறம் அதை ஒட்டிச் செல்லும் அதே பாதையில் ஒரு நெடிய பாலம் வரும். அந்த இடத்தை ஜமுனா பஜார் எனக் கூறுகின்றனர். ஆந்த பாலத்தின் அடியிலேயே சாலையைத் தள்ளி இடப்புறம் இந்த ஆலயம் இருப்பதை சாலையில் இருந்தே பார்க்க முடியும். அந்த ஆலயம் 200 ஆண்டுகளுக்கு முற்பட்டது என சிலரும், இல்லை ஆயிரம் ஆண்டுகளுக்கு முற்பட்டது என ஆலயத்தில் உள்ள பண்டிதர்களும் கூறுகின்றனர் . ஆனால் அந்த ஆலயத்தில் எந்த கல்வெட்டும் இல்லை என்றாலும், ஆராய்சியாளர்களின் கூற்றின்படி அந்த சிலையின் அமைப்பும், ஆலய அமைப்பும் பல்லவர்கள் ஆட்சி காலத்தை ஒட்டி இருப்பதினால் அது பல்லவர்கள் காலத்தை சார்ந்து இருக்கும் எனக் கூறுகின்றனர்.

இந்த ஆலயத்தில் சனிக் கிழமைகளிலும், செவ்வாய் கிழமைகளிலும் கூட்டம் அலை மோதுகின்றது. சிலசமயங்களில் நெடும் தொலைவுக்கு மக்கள் வரிசையில் நிற்கின்றனர். இந்த ஆலயத்தில் சென்று வணங்கினால் கோரிக்கைகள் நிறைவேறும், தோஷங்கள் விலகும் எனவும் நம்புகின்றனர். புகைப்படம் எடுக்க அனுமதிப்பது இல்லை. ஆலயத்தில் நுழைந்தால் வெளிச்சம் அற்ற பெரிய அறை உள்ளது. அந்த அறையின் ஒரு மூலையில் புமிக்கு இருபது அடிகள் கீழ் கட்டப்பட்டு உள்ள அறையில் அனுமான் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டு புஜிக்கப்பட்டுவருகின்றது.

மர் கட்வாலா பாபா ஆலயம் எழுந்த கதை

ஆந்த ஆலயம் எழும்பிய காலம் தெரியவில்லை என்றாலும், அதன் பெருமையை கூறுகையில் அந்த சிலை யமுனை நதியில் இருந்து கிடைத்தது, அதாவது இப்பொழுது உள்ள இடத்தில் நதிக்குள் அது புதைந்து கிடந்தது என்கின்றனர். அதை ஒரு "சிலை என்று கூறுவதை விட ஒரு பாறையில் செதுக்கப்பட்டுள்ள அனுமான் உருவச் சிலை என்றே கூறவேண்டும்". முன் ஒருகாலத்தில் யமுனை நதி இப்பொழுது ஆலயம் உள்ள இடம்வரை ஓடிக் கொண்டு இருந்ததாம். பின்னர் காலப் போக்கில் அந்த நதி மெல்ல மெல்ல திசைமாறி இந்த ஆலயம் உள்ள இடத்தில் இருந்து பதினைந்து கல் தொலைவில் சென்று விட்டதாம். அதனால் யமுனை நதி நகர்ந்து சென்றுவிட்ட இடங்களில் நகரம் விரிவாக்கப்பட்டு கட்டிடங்களும், பாலங்களும் வந்துவிட்டன. அப்பொழுது தான் தரைமட்டத்திற்கு அடியில் சுமார் இருபது அடி ஆழத்தில் இருந்த இந்த சிலை தெரிய வந்ததாம். முதலில் ஆலயம் என்று அமைக்கப்பட்டு இருக்காவிடிலும், அந்த அனுமான் சிலை அது தற்போது உள்ள இடத்தில் பூஜிக்கப்பட்டு வந்திருக்க வேண்டும் என்றும்; பல காலத்திற்குப் பிறகு எவரோ அதை ஆலயமாக கட்டி உள்ளனர் எனவும் தெரிகின்றது.

மர் கட்வாலா பாபா ஆலய அதிசயம்

அந்த அனுமான் ஆலயத்தைப் பற்றி கூறுகையில் அது அந்த ஊரைக்காக்கும் தெய்வம் என்றும், அங்கிருந்து பதினைந்து கல் தொலைவில் ஓடும் யமுனை நதியில் எப்பொழுதெல்லாம் வெள்ளம் பெருக்கெடுத்து ஓடுகின்றதோ அப்பொழுதெல்லாம், அந்த சிலையின் கீழ் நீர் ஊற ஆரம்பிக்குமாம். ஆனால் எத்தனைப் பெரிய வெள்ளத்திலும் சிலைக்கு அடியில் ஊறும் நீர் அந்த அனுமானின் மூக்குப் பகுதிக்கு மேல் உயர்வது இல்லையாம். என்று அந்த சிலையின் மூக்குப் பகுதிக்கு மேல் தண்ணீர் மட்டம் உயருமோ அன்று அந்த ஊர் அழிந்து விடும்.இப்படி நம்பப்படுவதின் காரணம் எதோ புராணம் ஒன்றில் அந்த செய்தி உள்ளதாகவும் அது எந்த புராணம் என அவர்களுக்கும் தெரியவில்லை எனவும், காலம் காலமாக வாய் மொழியாக கூறப்பட்டு வரும் செய்திகள் தான் அதன் ஆதாரம் எனறும் அங்குள்ள பண்டிதர்கள் கூறுகின்றனர்.

அது உண்மையாகவே இருக்க வேண்டும் என நம்ப வைக்கும் வியப்பான செய்தி என்ன எனில் இன்றுவரை யமுனையில் வந்துள்ள எந்த ஒரு வெள்ளத்திலும் சிலைக்கு அடியில் ஊறிய நீர் அனுமானின் மூக்குப் பகுதிக்கு மேல் உயர்ந்ததில்லை. யமுனையில் வெள்ளம் இல்லாத நாட்களில் சிலையின் அடியில் பொட்டு நீர் கூட காணப்படுவது இல்லை. மேலும் ஆலயத்தை ஒட்டிய ஒரு இடத்தில் சுடுகாடு அமைந்து இருப்பதினால் அதை சுடுகாட்டு பாபா என்ற அர்த்தம் தரும் வகைக்கு மர்கட்வாலா பாபா எனவே அழைக்கின்றனர். சாதாரணமாகவே பேய் பிசாசு களினால் ஏற்படும் பயத்தைப் போக்க அனுமானை வணங்கினால் அநத பயம் ஓடி விடும் எனவும், தீய ஆவிகள் பிடித்தவர்கள் அனுமானை வணங்கினால் அவை விலகி விடும் எனவும் வடநாட்டில் பரவலாக நம்பப்படுகின்றது. அப்படிப்பட்ட ஆலயம் இராஜஸ்தான் போன்ற இடங்களிலும் உள்ளன.

நன்றி சாந்திப்பிரியா

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு ...

நீர் சேமிப்பில் மக்களின் பங்கு திட்டத்தை பிரதமர் தொடங்கி வைத்தார் குஜராத் மாநிலம் சூரத்தில் இன்று 'நீர் சேமிப்பில் மக்கள் பங்கேற்பு' திட்டத்தைத் ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற ...

தேசிய நாலாசிரியர் விருது பெற்ற நல்லாசிரியர்களுடன் பிரதமர் கலந்துரையாடினார் தேசிய நல்லாசிரியர் விருது பெற்றஆசிரியர்களுடன் பிரதமர் நரேந்திர மோடி ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கல ...

சிங்கப்பூரில் திருவள்ளுவர் கலாச்சார மையம் பிரதமர் அறிவிப்புக்கு வரவேற்பு முதலாவது திருவள்ளுவர் கலாசார மையம் சிங்கப்பூரில் அமைக்கப்படும் என்று ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தட ...

பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகள் அகற்றம் – நிர்மலா சீதாராமன் பெருமிதம் ''பெண்கள் முன்னேற்றத்திற்கான தடைகளை, பிரதமர் மோடி தலைமையிலான பா.ஜ., ...

மருத்துவ செய்திகள்

முகத்தில் எண்ணெய் வழிவதை தடுக்க

வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ...

கல்யாண முருங்கை

முள்முருக்கு, முள்முருங்கை என அழைக்கப்படும் கல்யாண முருங்கை முழுவதும் முட்களைக் கொண்ட மென்மையான ...

கொய்யாவின் மருத்துவ குணம்

கொய்யா மரத்தின் இலைகளைக் கொண்டு வந்து லேசாக வதக்கி ஒரு டம்ளர் தண்ணீர் ...