பார்லிமென்ட் கூட்டுக் குழு விசாரணை அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு பார்லிமென்ட் கூட்டுக்குழு என்று அடிக்கடி சொல்றாங்களே அப்படினா என்ன ?

பார்லிமென்ட் கூட்டுக்குழு என அழைக்கப்படும் ஜே.பி.சி நாட்டில் ஏற்ப்படும் மிக முக்கியமான பிரச்னை குறித்து விரிவாக விசாரணையை நடத்த அமைக்கப்படுகிறது , குறிப்பாக நாட்டில் உருவாகும் மிகப்பெரிய ஊழல் மற்றும்

முறைகேடுகள், இந்த ஊழல் மற்றும் முறைகேடுகள் பொதுமக்கள்மத்தியில் பெரும் அதிருப்தி மற்றும் கொந்தளிப்பை ஏற்படுத்தினால் ஜே.பி.சி அமைக்கப்படுவது பார்லிமென்ட்-நடைமுறையில் வழக்கமானதாக இருந்து வந்துள்ளத,

பார்லிமென்ட்டில் அங்கம் வகிக்கும் கட்சிகளின் எம்.பி.க்களை கொண்டு அமைக்கப்படுவது பார்லிமென்ட் கூட்டுக்குழு ஆகும் . பார்லிமென்ட்டில் ஒவ்வொரு கட்சிக்கும் உள்ள பலத்தின் அடிப்படையில் , விகிதாசாரத்தின்படி ஒவ்வொரு கட்சியிலிருந்தும் பார்லிமென்ட் கூட்டுக்குழுவில் எம்.பி.,க்கள் இடம்பெறுவர். லோக்சபாவிலிருந்து 30 எம்.பி.களும், ராஜ்யசபாவிலிருந்து `10 எம்.பி.,க்களும் இதில் இடம்பெற முடியும். மேலும் பார்லிமென்ட் கூட்டுக்குழு அமைக்க வேண்டும் என்றால் , அதற்கு ஆளும் கட்சி மற்றும் எதிர் கட்சி ஆகிய இரண்டு தரப்புமே ஒப்பு கொள்ள வேண்டும் ,

இதுவரை இந்தியாவில் அமைக்கப்பட்ட பார்லிமென்ட் கூட்டுக் குழுக்கள் (ஜே.பி.சி)

நம் நாட்டில் முதல் முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு நாட்டின் மிக பெரிய ஊழலாக joint parliamentary committee tamilகருதப்பட்ட போபர்ஸ் பீரங்கி ஊழல் குறித்து விசாரணை நடத்த 1987 ம் ஆண்டு அமைக்கப்பட்டது. 1987ம் ஆண்டு போபர்ஸ் பீரங்கி ஊழல் தொடர்பாக ஜே பி சி. விசாரணை நடத்த எதிர்க்கட்சிகள் பார்லிமென்ட் அலுவல்களை பலநாட்கள் ஸ்தம்பிக்க செய்தன போர் கொடி தூக்கின. மேலும், அப்போதைய மத்தியநிதி அமைச்சரக இருந்த வி.பி.சிங், ஜே பி சி., அமைக்க வலியுறுத்தி எதிர் கட்சிகளுக்கு ஆதரவாக களம் இறங்கினார். இதனால், விழிபிதுங்கிய மத்திய அரசு வேறு வழியின்றி, ஜே.பி.சி., அமைக்க ஒப்பு கொண்டது தனிக்கதை .

1992ம் ஆண்டு, ஹர்ஷத் மேத்தாவின் 1,000 கோடிரூபாய் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த இரண்டாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

1999 முதல் 2001 ம் ஆண்டு வரை பங்கு சந்தையில் பல நூறுகோடி ஊழல் செய்த கேதன் பரேக்கின் பங்கு சந்தைஊழல் குறித்து விசாரணை நடத்த முன்றாவது முறையாக பார்லிமென்ட் கூட்டு குழு அமைக்கப்பட்டது ,

2003ம் ஆண்டு குளிர்பானங்களில் உடலுக்கு தீங்கு விளைவிக்கும் நச்சுத்தன்மை வாயந்த ரசாயனங்கள் கலக்கப்படுவதாக எழுந்த புகார் குறித்து, விசாரணை நடத்த நான்காவது முறையாக ஜே.பி.சி., அமைக்கப்பட்டது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

தியானம் செய்யத் தேவையானவை

நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ...

சிறுநீரகக் கோளாறுகள்

உடலின் நலத்தைக் காப்பதில் சிறுநீரகங்கள் மிகவும் சிறப்பு வாய்ந்தவை. சிறுநீரகம் சரியாக செயல்படவில்லை ...

நந்தியாவட்டையின் மருத்துவ குணம்

ஒரு சுத்தமான கண்ணாடி டம்ளரை எடுத்து, அதில் முக்கால் அளவு சுத்தமான தண்ணீரை ...