இன்று குஜராத் நாளை டெல்லி !

இன்று குஜராத்  நாளை டெல்லி ! நரேந்திர மோடி குஜராத்தில் 4 வது முறையாக முதல்வராகி உள்ளார் .இலவசங்களை அள்ளித் தருவோம் என்று எந்த விதமான வாக்குறுதியும் கொடுக்காமல் 'முனேற்றம் 'என்ற தாரக மந்திரத்தின் மூலமாகவே வெற்றிக் கொடி நாட்டியுள்ளார் .

மோடி போட்டியிட்ட மணிநகர் தொகுதியில் அவரை எதிர்த்துப் போட்டியிட காங்கிரசில் ஒரு ஆம்பிளை கூட முன் வரவில்லை என்பது வெட்கக்கேடானது .சஸ்பென்ட் செய்யப்பட்ட ஐ .பி .எஸ் .அதிகாரி சஞ்சீவ் பட்டின் மனைவி சுவேதாவை களத்தில் இறக்கினார்கள். ஐயோ பாவம் அந்த அம்மையார் .மோடியிடம் 86,373 வாக்குகள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றார் .

மகாத்மா கந்திஜியின் வாரிசுகள் நாங்கள் தாங்கள் தான் என்று ஜம்பம் அடித்தவர்கள் ,காந்திஜி பிறந்த போர்பந்தர் தொகுதியிலேயே ,குஜராத் மாநில காங்கிரஸ் தலைவர் அர்ஜுன் மோத் வாடியா போட்டியிட்டு மண்ணைக் கவ்வினார் .

கோத்திர கலவரத்திற்கு பிறகு கடந்த 10 ஆண்டு காலமாக குஜராத்தில் மதக்கலவரங்கள் நடைபெறவில்லை .எனவே மோடி முஸ்லிம்களுக்கு எதிரானவர் என்ற பிரச்சா ரத்தை புறக்கணித்துவிட்டு  முஸ்லிம்களும் பெருமளவில் மோடிக்கு வாக்களித்து உள்ளனர்.

கேசுபாய் படேல் தனிக்கட்சி துவங்கியவுடன் 'அவ்வளவுதான் …படேல் சமுதாய ஓட்டெல்லாம் போச்சு …'என்றெல்லம் ஊடகங்கள் செய்திகளை வெயிளிட்டனர். ஆனால் குஜராத் மக்கள் ஜாதி அரசியலுக்கு சாவுமணி அடித்து விட்டனர் .

மோடி வெற்றிபெற்ற உடனேயே தன்னை எதித்து தனிக்கட்சி துவங்கி போட்டி போட்ட கேசுபாய் படேல் வீட்டுக்குச் சென்று , அவரிடம் ஆசி பெற்று , அவருக்கு இனிப்பு வழங்கியது மோடியின் பெருந்தன்மையைக் காட்டுகிறது .

சாராயம் இல்லை …. பிரியாணி இல்லை … ஓட்டுக்குப் பணம் இல்லை …. பொய்யான வாக்குறுதிகள் இல்லை ….ஜாதி இல்லை …மதம் இல்லை .. இந்த வகையறாக்கள் எதுவுமே இல்லாமல் மோடி எப்படி வற்றி பெற்றார் என்பது அரசியல் தலைவர்களுக்கு ஒரு புரியாத புதிர்ராகத்தான் இருக்கும் .எது எப்படியோ இன்று குஜராத் ….. நாளை டெல்லி என்ற முழக்கம் நாடு முழுவதும் எதிரொலிக்கத் துவக்கி விட்டது .

Tags; நரேந்திர மோடி , gujarat development

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அதிமதுரத்தின் மருத்துவக் குணம்

இதன் வேர், இலை, பால், விதை, வெப்பமும் இனிப்பும் கைப்பும் உள்ள சுவகைகளை ...

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

தரைப்பசலையின் மருத்துவக் குணம்

தரைப்பசலைக் கீரையை அரைத்து, கொட்டைப் பாக்களவு எடுத்து, மறுபடி அதே அளவு சீரகத்தையும் ...