நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்

 நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம்நீங்கள் உண்மையான சீர்திருதக்காரர்களாக விரும்பினால் மூன்று விஷயங்கள் அவசியம். முதலாவது உணர்ச்சி, உங்கள் சகோதர்களுக்காக உண்மையிலேயே நீங்கள் இரங்குகிறீர்களா ? இவ்வுலகில் இவ்வளவு துயரமும், அறியாமையும், மூட நம்பிக்கையும் இருந்து வருவது கண்டு

உண்மையிலேயே மனவேதனை அடைகீறிர்களா? இந்நாட்டில் வாழும் மனிதர்கள் எல்லாம் உங்கள் சொந்த சகோதர்களே என உணர்கீறிர்களா? இவ்வுணர்ச்சி உங்கள் உடம்பு முழுவதிலும் ஊறிப் போயிருக்கிறதா? அது உங்கள் குருதியில் கலந்து ஓடுகிறதா?உங்கள் நரம்புகளில் அது துடிக்கிறதா? உங்கள் உடம்பின் ஒவ்வொரு தசை நாரிலும் அது ஊடுருவி நிற்கிறதா? அந்த அனுதாப உணர்ச்சி உங்களுக்குள்ளே பொங்கித் ததும்புகின்றதா? அவ்வாறாயின் முதற்படி எறிவிட்டிர்கள். அடுத்தாற்போல் பரிகாரம் ஏதேனும் கண்டு பிடித்திர்களா என்று சிந்திக்க வேண்டும். பழைய கொள்கைகள் மூடக்கொள்கையாக இருக்கலாம். ஆனால் அந்த மூடக்கொள்கைத்திரளின் உள்ளே சத்தியம் என்னும் தங்கக்கட்டிகள் புதைந்து கிடக்கின்றன. குப்பையைப் போக்கி விட்டுத் தங்கத்தை மட்டும் வைத்துக்கொள்ள நீங்கள் வழி கண்டுபிடித்திருக்கீறிர்களா? மூன்றாவது இன்னும் ஒன்று அவசியம். உங்கள் நோக்கம் என்ன? பொன்னாசை, புகழாசை, அதிகார ஆசை என்னும் இவை உங்களிடம் அறவே இல்லையென்று நிச்சியமாக சொல்ல முடியுமா?

ஆயிரக்கணக்கான மனிதர்களால் மேடைப் பிரசங்கங்கள் செய்யப்பட்டு விட்டன. இந்து சமூகத்தின் மீதும், இந்து நாகரிகத்தின் மீதும் கணக்கில்லாத கண்டங்களை சொரிந்தாகிவிட்டது.எனினும் செயல்முறையில் நற்பயன் எதுவும் விளையக்காணோம். இதன் காரணம் என்ன? காரணம் கண்டுபிடிக்க அதிக சிரமப்படவேண்டியதில்லை. கண்டனத்தில் தான் காரணம் இருக்கிறது. நன்மை புரிவதற்கு வழி கண்டனம் செய்தல் அன்று.

எனக்குச் சீர்திருத்தத்தில் நம்பிக்கை இல்லை, வளர்ச்சியிலேயே நம்பிக்கை உண்டு. நானே கடவுளின் இடத்தில இருப்பதாக எண்ணிக்கொண்டு, ‘இவ்வழிதான் போக வேண்டும்; அவ்வழி நோக்கக்கூடாது’ என்று சமூகத்துக்கு கட்டளைகள் பிறப்பிக்க எனக்கு துணிவு இல்லை.

என்னுடைய இலட்சியம், தேசிய வழிகளில் வளர்ச்சிப் பெருக்கம், முன்னேற்றம் என்னும் இவைகளாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியா ...

“பழனிசாமியை முதல்வராக்க பணியாற்றுமாறு பாஜகவினருக்கு மோடி கட்டளை” – அண்ணாமலை “தமிழக முதல்வராக எடப்பாடி பழனிசாமி வர வேண்டும் என்று ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான ந ...

மகளிர் இடஒதுக்கீடு.. உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்த வேண்டிய நேரம் வந்துவிட்டது – மோடி மகளிர் இடஒதுக்கீட்டை, அதன் உண்மையான நோக்கத்துடன் அமல்படுத்தப்பட வேண்டிய ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழா ...

இந்தியாவின் ஜனநாயகத் திருவிழாவை உலகம் உற்று நோக்குகிறது தேர்தல் ஆணையத்தின் சர்வதேச தேர்தல் பார்வையாளர்கள் திட்டமான (IEVP) ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறி ...

“திரிணமூல் அரசின் ஊழல்கள் குறித்து வெள்ளை அறிக்கை வெளியிடப்படும்” – பிரதமர் மோடி திரிணமூல் காங்கிரஸ் அரசின் ஊழல்கள் மீது நடவடிக்கை எடுப்பதை ...

தொரிய அணுமின் நிலையம்

தொரிய அணுமின் நிலையம் இன்று உலகம் முழுவதும் அமெரிக்க-ஈரான் யுத்த நிறுத்த செய்திக்கு ...

மருத்துவ செய்திகள்

வாய் துர்நாற்றம் நீங்க

ஒரு சிலர் வாயை திறந்தாலே நமக்கு தலை சுற்றி மயக்கமே வந்துவிடும் . ...

குடல்வால் (அப்பெண்டிக்ஸ்) நோய்

நம்முடைய சிறுகுடலும் , பெருங்குடலும் சேர்கிற பகுதியில் இருக்கும் ஒரு சிறிய வால் ...

காரட்டின் மருத்துவ குணம்

காரட்டிலுள்ள கால்சியம் எளிதில் செரிமானம் ஆகக்கூடியது. தினமும் கொஞ்சம் காரட் சாப்பிட்டாலே ஒரு ...