தமிழ்நாடு தள்ளாட்ட‌ நாடாக வெகுகாலம் இல்லை

 தீமையை செய்பவர்களால் இந்த உலகம் அழிவதில்லை, ஆனால் அதை குறித்து எதுவுமே செய்யாமல் பார்த்துக் கொண்டிருப்பவர்களால் இந்த உலகம் அழிகிறது. – ஐன்ஸ்டியன்.

சசி பெருமாள் என்பவர், பல நாட்களாய் பூரண மதுவிலக்கு கோரி உண்ணா நோண்பு இருக்கிறார். இப்போது யார் அந்த சசி பெருமாள் என்பதைவிட, மதுவிலக்கு தேவையா என்பதுதான் கேள்வி.

குடி குடியை கெடுக்கும் என்று தெரிந்தே கோடிக்கணக்கான மக்கள் நம் நாட்டில் குடித்துக் கொண்டிருக்கிறார்கள். குறிப்பாக தமிழ் நாட்டில் இது மிக மோசமாகி வருகிறது. குளிர் காலத்தில் வெள்ளைக்காரன் வாழ்ந்ததால், அவனுக்கு அது மிகவும் அவசியப்பட்டது. அதுவும் அவன் அதை மிக சொற்பமாகவே அதை பயன்படுத்தினான். நம் மக்களோ
அதை காணாத கண்டவன் போல் கொதிக்கும் வெய்யிலிலும், மழையிலும், குளிரிலும் என எல்லா காலங்களிலும் குடிக்க தொடங்கிவிட்டனர்.

குடிப்பது என்பது ஒரு ஆண்தன்மையை உயர்த்துவது போல காட்டப் படுவதால், தன்னை ஒரு பெரிய மணிதனாக நினைக்க துவங்கும் உயர்நிலை பள்ளி மாணவர்களும், கல்லூரி மாணவர்களும் குடியென்ற இந்த அரக்கனிடத்தில் விளையாட்டாய் தலையை நுழைக்கிறார்கள். திரைப்படங்களில் சகட்டு மேனிக்கு குடித்து விட்டு பாடும் பாடல்கள் எடுக்கப்படுவது, ஒரு சில மக்கள் மத்தியில் வரவேற்பை பெறுவதும் மிக பெரும் சமுதாய சீர்கேட்டின் அறிகுறி. சோகத்தை மறக்க குடி, சந்தோஷத்தை வெளிப்படுத்த குடி என எல்லாவிதமான உணர்ச்சி வெளிப்பாடுகளுக்கும் குடிப்பது வழக்கமாகி விட்டது.குடி என்பது விளையாட்டாய்தான் தொடங்குகிறது. இப்படி விளையாட்டாய் துவங்கும் மாணவர்களும், இளைஞர்களும் பிற்காலத்தில் பத்தில் நாண்கு பேர் நிரந்தர  குடிகாரர்களாக மாறுகிறார்கள் என்கிறது புள்ளி விவரம். குடித்து பழகியபின் அந்த பழக்கம் ஒரு வியாதியாக மாறுகிறது. அவனுக்கே தெரியாமல் கொஞ்சம் கொஞ்சமாய் அடிமையாகி, அந்த நேரத்தில் அதற்காக எதையும் இழக்க தயாராகிறான் ஒருவன். குடி பழக்கத்தால் உடலில் ஏற்படும் சீர்கேடுகள் கொஞ்ச நஞ்சமல்ல. மாரடைப்பு, புற்றுநோய், ஈரல் மற்றும் சிறுநீரகம் சீர்கெடுதல், இரத்த கொதிப்பு, மனநோய் என பலவிதமான சீர்கேடுகள் ஏற்படுகின்றன. குடியால் உடல் மட்டும் கெடுவதில்லை, குடித்து விட்டு வாகணம் ஒட்டி விபத்துக்கள் ஏற்பட்டு பலர் இறக்கின்றனர். சாலையில் போகும் குடிக்காதவர்களும் இறக்கின்றனர்.

இதில் உச்ச கொடுமை என்னவென்றால் குடிபோதையால் உணர்ச்சி வயப்பட்டு குடும்பத்துக்குள் நடக்கும் வண்முறைகள்தான். குடித்து விட்டு பாலியல் பலாத்காரம் செய்பவர்கள், மனைவியை பனம் கேட்டு அடிப்பவர்கள், குடி போதையால் சுற்றி உள்ள சமூகத்தில் வன்முறை செய்பவர்கள் என்று இந்த பட்டியல் நீண்டு கொண்டே போகிறது.

இன்று தமிழ்நாட்டில் வேறு எந்த பிரச்சினையை காட்டிலும், குடிதான் பலரை பாதிக்கிறது என்று சொன்னால் அது மிகையாகாது. இன்று தமிழ் கலாச்சாரத்தோடு பின்னி பினைந்த பழக்கமாய் குடிப்பழக்கம் மாறி வருகிறது. அரசாங்கத்துக்கு மிகப்பெரும் வருவாயை அது ஈட்டுகிறது என்ற காரணத்தினால் அதை விட்டு வைப்பது எந்த விதத்திலும் நியாயம் இல்லை. இன்னும் பல தாலிகளை அறுப்பதற்கு முன்னால், இன்னும் பல குழந்தைகள் தங்கள் தகப்பன்களை இழப்பதற்கு முன்னால், இதற்கு ஒரு தீர்வு கண்டாக வேண்டும்.

டாஸ்மாக் கடையை மூடினால், மற்ற மாநிலத்துக்கு சென்று குடிப்பார்கள், கள்ளச் சாராயம் காய்ச்சுவார்கள் என்பதெல்லாம் நொண்டி சாக்குகள்தான். அப்படியென்றால், கஞ்சா, அபின், விலைமாதர்கள் என எல்லாவற்றையும் எல்லோருக்கும் கிடைக்கும் படி செய்து விடலாமே ? கஞ்சா பழக்கம் சமூகத்தை அழித்துவிடும் என்றால் குடிப்பழக்கம் மட்டும் என்ன அவர்கள் அரியனையிலா ஏற்றி விடும் ? ஒரு நல்ல நிர்வாகத் திறமை வாய்ந்த அரசு இவ்வாறு நொண்டி சாக்குகள் சொல்லக்கூடாது.

நல்ல ஆரோக்கியமான மக்கள்தான் ஒரு நாட்டின் அஸ்திவாரம். குடித்து விட்டு பல குடிமகன்கள் அரசாங்க மருத்துவமனைகளில் அடைக்கலமாகி கோடிக்கணக்கில் நஷ்டத்தை அரசாங்கத்திற்கு ஏற்படுத்துகிறார்கள். ஆகையால் குடிப்பழக்கத்தை எதிர்த்து யார் போராடினாலும் நாம் நமது ஆதரவை அவர்களுக்கு தருவது முக்கியம். இன்னும் இதை எதிர்த்து போராடாமல் காலம் தாழ்த்தினால், குடிமகன்கள் பெருபாண்மையாகும் வாய்ப்பு அதிகம். பிறகு மதுவிலக்கை யாராலும் அமல் படுத்த முடியாது. குஜராத்தை போல நாமும் நல்ல ஆரோக்கியமான, போதைக்கு ஆளாகாத மக்களை உருவாக்கினால்தான் தமிழ் கலாச்சாரத்தை பற்றி பேசுவதற்கு நமக்கு உரிமை உள்ளது. இல்லையென்றால் இது தமிழ்நாடு அல்ல, தள்ளாட்ட‌ நாடுதான்.

தயவுசெய்து இந்த பதிவை குறித்து விளையாட்டாகவோ, நகைச்சுவையாகவோ எதுவும் பதியாதீர்கள்

Thanks; Enlightened Master

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முட ...

2026-ம் ஆண்டிற்குள் நக்சலிசம் முடிவுக்கு வரும் அமித் ஷா உறுதி வரும் 2026ம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் நக்சலிசம் முடிவுக்கு ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் க ...

ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் கற்களுக்கு பதிலாக பேனாவும் புத்தகமும்  இருப்பதாக மோடி நெகிழ்ச்சி ஜம்மு காஷ்மீர் குழந்தைகளிடம் தற்போது கற்களுக்குப் பதிலாக பேனாவும், ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடு ...

அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை நடக்கிறது -நிதின் கட்கரி '' அரசு அலுவலகங்களில் லஞ்சம் கொடுத்தால் தான் வேலை ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட் ...

காஷ்மீரை அழிக்க காங்கிரஸ் திட்டம் அமித் ஷா குற்றச்சாட்டு ஸ்ரீநகர்: ''காங்கிரஸ் கட்சியும், ராகுலும், ஜம்மு காஷ்மீரை மீண்டும் ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீ ...

NPS வாத்சலயா திட்டத்தை நிர்மலா சீதாராமன் தொடங்கி வைத்தார் மத்திய பட்ஜெட் 2024-25 அறிவிப்பைத்தொடர்ந்து, மத்திய நிதி பெருநிறுவனங்கள் ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியல ...

ஜார்கண்டில் ஒட்டு வங்கி அரசியலால் பழங்குடியினருக்கு அச்சுறுத்தல் -மோடி  பேச்சு ஜாம்ஷெட்பூர்: ''ஜார்க்கண்டில் ஓட்டு வங்கி அரசியலுக்காக, வங்கதேசம் மற்றும் ...

மருத்துவ செய்திகள்

Down Syndrome என்றால் என்ன? அதைப் பற்றிய விழிப்புணர்வு எல்லோருக்கும் தேவையா ?

கண்டிப்பாக Down Syndrome பற்றி எல்லோரும் தெரிந்து கொள்ள வேண்டும். ஒரு ...

எலும்பு மஜ்ஜை குறைபாடு நீங்க

நோய் எதிர்ப்புச்  சக்தியை அளிக்கும் வெள்ளை அணுக்கள் இரத்தத்தில் குறையும்போது  எலும்பு மஜ்ஜை ...

முசுமுசுக்கையின் மருத்துவக் குணம்

வேலியோரங்களில் வளர்ந்து பக்கத்திலுள்ள செடி கொடிகளின் மீது படர்ந்து காணப்படும் சுசுக்கையை வைத்துக் ...