வழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்பும் நாள் வரும்

 வழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்பும் நாள்  வரும் சென்ற வாரம் உ.பி.,யில் எட்டு கிராமங்களை சேர்ந்த, 36 குடும்பங்களாக உள்ள 180 பேர் தங்களை பிற்போக்கு மதங்களிலிருந்து விடுவித்துக் கொண்டு, சுதந்திர சிந்தனையையும், மெய்ஞானத்தையும் போதித்து, உலகுக்கே விளக்காய் திகழும் தர்ம வழியாம் ஹிந்து மதத்திற்கு திரும்பினர்.

நம் தமிழ்நாட்டிலும் சமீப காலங்களில் தாய் மதம் திரும்புவோரின் எண்ணிக்கை அதிகரிப்பது குறிப்படத்தக்கது. விவரங்களை வெளியிட்டால் சம்பந்தப்பட்டவர்களை பாதிக்கும் என்பதால் வெளியிடாமல் இருக்கிறோம்.

கோடிக்கனக்கான டாலர்களை இரைத்து பிரச்சாரம் செய்து மதமாற்றப்பட்ட மக்கள், ஆரம்பத்தில் "புது மாப்பிள்ளைகளாய்" உணர்ந்தாலும், ஒரு கட்டத்தில் அதை வெறுக்க தொடங்கி விடுகிறார்கள். கட்டத்தில் ஆயிரமாயிரம் குருமார்களும், ஞானிகளும் போதித்த, அனுபவித்த, ஞானக்கடலாம் ஹிந்து தர்மத்திற்கு திரும்பவும் விளம்பரம் இல்லாமல் வந்து சேர்ந்து விடுகிறார்கள்.

ஒரே ஒரு புத்தகத்துக்குள் புதைந்து போகும் அடிமை சித்தாந்தங்களை உதறி தள்ளி விட்டு, நம் தத்துவ கடலாம் ஹிந்து மஹா சமுத்திரத்தில் மீண்டும் ஐக்கியமாகின்றனர். பல ஆயிரம் வருட பாரம்பரியம் உள்ள எகிப்தியர்களை சில நூறு ஆண்டுகளில் மதமாற்றம் செய்ய முடிந்தவர்களால், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேலாகியும் நம்மில் பெரும் பான்மையினரை ஒன்றும் செய்ய முடியவில்லை.

பல தேசங்களை கிறிஸ்துவத்தின் பக்கம் இழுத்து காட்டிய, ஆங்கிலேயர்களும், போர்ச்சுகீயர்களும் நம் நாட்டின் தர்மத்தை ஒன்றும் செய்ய முடியவில்லை.

நம‌க்கு எல்லாம் பின்புலமாய் இருக்கும் இந்த புனித பூமியும், அதில் அவதரித்த‌ குருமார்களும், ரிஷிகளும், நாம் வழிபடும் இறைவனும் நம் தர்மத்திற்கு ஆதாரமாய் இருக்கையில் நம்மை யார் என்ன செய்ய முடியும் ?

என்னதான் மூளைச் சலவை செய்யப்பட்டாலும் மனிதன் ஒரு கட்டத்தில் சுயமாய் சிந்திக்க தொடங்குகிறான். அது இந்த தலைமுறையில் இல்லாவிட்டாலும், அடுத்த தலைமுறையில் நடக்கலாம். இதனால்தான் வெளிநாடுகளில் பலர் நம் உபநிடந்தங்களையும், கீதையும் படித்துவிட்டு ஞான விளக்காம் ஹிந்து தர்மத்தை சுயமாக எந்த மூளைச் சலவையும் இல்லாமல் தழுவி வருகிறார்கள்.

ஆகையால் நண்பர்களே, வேற்று மதத்தவரை நாம் வெறுக்க வேண்டாம். அவர்கள்  வழி மாறி சென்றவர்கள் தாய் மதம் திரும்பும் நாள்  வரும்சூழ்நிலைக் கைதிகள். நம் மூதாதையர்கள் கத்தி முனையிலும், ஏழ்மையை வைத்தும், யாராவது மாற்றி இருந்தால் நாமும் அவர்கள் போல அல்லவா பேசிக் கொண்டிருப்போம் ? ஆகையால் அவர்களை நாம் அரவனைத்து செல்வோம். அவர்களுக்கு முடிந்தவரை நாம் நம் தர்மம் குறித்து எடுத்துச் சொல்லுவோம். வழி மாறி சென்ற அவர்கள் தாய் மதம் திரும்பும் நாளும் வரும். எல்லாம் வல்ல இறைவன் மற்றதை பார்த்துக் கொள்வான்.

"தர்மோ ரக்ஷ்தி ரக்ஷிதஹ" (தர்மத்தை காபாற்றுபவனை, தர்மம் காப்பாற்றும்) எனும் வேத வாக்கிற்கு இணங்க நாம் வெறும் கருவியாய் இருந்து நம் தர்மத்தை காப்பாற்றுவோம். அது நம்மை காப்பாற்றும். இது சத்திய வாக்கு.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சையின் மருத்துவக் குணம்

பேரீச்சை ஊட்டச்சத்து நிரம்பியது. 'டானிக்'காக செயல்படும். சிறந்த மலமிலக்கியும் கூட. அதிகாலையில் பாலுடன் ...

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...