பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1

 பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1 ஒரு மதத்தை தினிப்பதால் எப்படி ஆளுமை உண்டாகும் ? மதம் என்பது வெறும் நம்பிக்கை அல்ல ? அது ஒருவர் தன் மண்ணின் மீதும், தன் வேர்கள் மீதும் கொண்ட பற்று. ஒருவரை ஆப்ரகாமிய மதங்கள் பற்றுகையில் அவர்கள் தங்கள் வழிபாட்டு முறையை மட்டும் மாற்றிக் கொள்வதில்லை, தங்கள் வேர்களை விட்டு விலகுகிறார்கள். தங்கள் மூதாதையர்களை முட்டாள்கள் என நினைக்கிறார்கள். தங்கள்

மண்ணையே இரண்டாம் பட்சமாக நினைக்கத் தொடங்குகிறார்கள். அவர்களின் புனித நகரங்கள் திடீரென எங்கோ எல்லைதாண்டி இடம்பெயர்கின்றன. எங்கோ இருக்கும் பழக்க வழக்கங்களை உள்வாங்குகிறார்கள். சுருக்கமாய் சொன்னால், உங்கள் மூளையில் உள்ள பதிவுகளை அழித்துவிட்டு புதிய பதிவுகளை இடுவதற்கு அது சமமாகிறது.

வெள்ளைக்காரன் இந்தியாவை ஆட்சி செய்தாலும், மக்கள் அதை கண்டு கொள்ளவே இல்லை. வெளையனால் இந்தியர்களின் நிலத்தை பிடிக்க முடிந்ததே தவிர அவர்களின் மனதை பிடிக்க முடியவில்லை. இது பிரிட்டீஷ் பாராளுமன்றத்திலும் எதிரொளித்தது. கலாச்சார ரீதியாக நாம் என்று இந்தியாவை ஆளுமை செலுத்த தொடங்குகிறோமோ, அன்றுதான் இந்தியாவை ஆள்கிறோம் என்று சொல்லிக் கொள்ளலாம் என்று பலர் உரக்க சொன்னார்கள். அதை எப்படி செய்யலாம் என்று ஆராயப்பட்டது.

ஐரோப்பியர்கள் ஒரு நாட்டை காலணியாக்கி கொள்வதற்கு இரண்டு படிகளில் செய்வார்கள். முதல் படி, ஆயுதங்களை கொண்டும், அங்குள்ள அரசர்களையோ, குழுக்களையோ ஒருவொருக்கு ஒருவர் மோத வைத்து, ஒருவருக்கு ஆயுதம் வழங்கி மற்றவரை ஒழித்து, பின்னர் உதவிய முதலாமவ‌ரையும் ஒழித்து காலணியை பெருக்குவார்கள். மக்களில் தங்களை ஏற்றுக் கொள்பவர்களுக்கு வசதிகளை செய்துக் கொடுப்பார்கள். ஏற்காதவர்களை வறுமையில் திண்டாட வைப்பார்கள்.

இரண்டாவது கட்டத்தில் ஐரோப்பியாவிலிருந்து "மிஷநரி" குழுக்கள் பிடிப்பட்ட நாட்டை நோக்கி செல்ல தொடங்கும். கிறிஸ்துவ பிரச்சாரத்தை பெரும் பொருட்செல்வோடு செய்யத் தொடங்கும். ஏற்கனவே வறுமையின் பிடியால் செய்வது அறியாது துடிக்கும் மக்களை இவர்கள் அனுகுவார்கள். "யேசுவை வணங்கத் தொடங்கினால் உங்கள் வறுமை விலகும்" என்று சொல்லி அவர்களுக்கு உதவி புரிய தொடங்குவார்கள். எதை தின்னால் பித்தம் தெளியும் என்று இருக்கும் மக்களுக்கு வேறு வழி இல்லையே ? தங்களின் ஆயிரக்கணக்கான வருட வேர்களை அழித்துக் கொண்டு, கிறிஸ்துவத்துக்கு மாறுவார்கள். இப்படித்தான் தென் அமேரிக்க நாடுகள், தெற்கு ஆப்ரிக்க நாடுகள், பிலிப்பைன்ஸ், கிழக்கு ஐரோப்பியா, மற்றும் பல சின்னச்சிறிய நாடுகள் மற்றும் தீவுகளில் இவர்கள் முழு ஆளுமையை உண்டாக்கினர்.

இந்தியாவோ மிகப்பெரும் நாகரீகங்களையும், தொண்மையும் தன் வசம் வைத்திருந்தது. ஆனால் எழுநூறு வருட இஸ்லாமிய படையெடுப்பாலும், ஆட்சியாலும் பெரும் பாதிப்புக்கு உள்ளாகி இருந்தது. ஒவ்வொரு குடும்பமும், ஒவ்வொரு ஊரும், தங்கள் மக்களை பாதுகாத்து கொள்ள சிறு குழுக்களாக இயற்கையாக அமைந்தனர். அந்நியர் வசம் தம் மக்களை இழக்க விரும்பாத ஒவ்வொரு குழுவும் ஒரு "நெட்வர்க்கை" போல செயல்பட்டது. ஆட்சி அந்நியர் வசம் இருப்பதாலும், தொடர்பு கொள்ளும் வசதி இன்று போல் இல்லாததாலும் ஒவ்வொரு குழுக்களும் மேலும் உள்முகமாக திருப்பியது. அந்நியனின் ஆக்கிரமிப்பு தங்களை பாதிக்காதவாறு தங்கள் வேர்களை காத்துக்கொள்ள இந்த ஜாதிக் குழுக்கள் மிகவும் பயன்பட்டன. இந்த ஜாதிக்குழுக்கள் மட்டும் இல்லாமல் இருந்திருந்தால் இன்றைய ஹிந்து தர்மமே கேள்வி குறியாக இருந்திருக்கலாம். ஆக இந்த சிறு சிறு ஜாதிக் குழுக்கள் ஹிந்து அல்லது சனாதன தர்மம் என்று சொல்லப்படுகிற ஆலமரத்தின் விழுதுகளாக செயல்பட்டன.

இந்த ஆலமரத்தினை எப்படி சாய்ப்பது என்று யோசித்தார்கள் வெள்ளையர்கள்.

எப்படி அரசர்களை பிரித்து சிறிய படையை கொண்டு நாட்டை பிடித்தார்களோ அதைப் போல மக்களை பிரிக்க வேண்டும். ஒருவருக்கொருவர் விரோதம் கொள்ள செய்ய வேண்டும். ஹிந்துக்களை உடைக்க வேண்டும் என்றால் என்ன செய்யலாம் என்று கோடிக்கணக்கான டாலர்களை இந்தியாவில் முதிலீடு செய்து கடுமையாய் யோசிக்க தொடங்கினர்.

அவர்கள் கண்களுக்கு இந்தியரில் உள்ள நிற வேற்றுமை புலப்பட்டது. சீதோஷ்ண மற்றும் பழக்க வழக்கங்களால் இந்தியர்கள் பல நிறங்களில் இருந்தார்கள். சிலர் வெள்ளையாய் இருப்பதும், சிலர் மாநிறமாய் இருப்பது, சிலர் கறுப்பாக இருப்பதும் தெரிந்தது. வெள்ளையர்களை அந்நியன் என்று இந்தியர்கள் நிராகரிப்பதால், அவர்கள் மதத்தையும் அந்நிய மதம் என்று நிராகரித்தார்கள். தங்கள் வேர்களை விட்டு அசையாமல் இருந்த இந்தியரை, தங்கள் வேர்களையே அந்நியமாக சித்தரித்தால் என்ன என்று யோசித்தார்கள்.

அந்த மிகப்பெரும் சூழ்ச்சியினாலும், நயவஞ்சகத்தாலும் பிறந்ததுதான் "ஆரிய படையெடுப்பு" சித்தாந்தம்.

பாகம் இரண்டில் அதை குறித்து பார்ப்போம்

Thanks; Enlightened Master

One response to “பிளந்து விட்டார்கள் பாரதத்தை, ஆனால், பிள‌க்க முடியுமா நம் தர்மத்தை ? பாகம் 1”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை பிஞ்சு

முருங்கை பிஞ்சை எடுத்து அதை சிறிது சிறிதாக நறுக்கி அதனை நெய்யில் வதக்கி ...

திருமணமான தம்பதியினர் கருத்தரிக்க எவ்வளவு காலம் காத்திருக்கலாம்?

30 வயதிற்குட்பட்ட தம்பதியினர் முறையே தாம்பத்திய உறவு வைத்திருந்தால், 6 மாதம் முதல் ...

வேம்புவின் மருத்துவக் குணம்

நுண்புழுக் கொல்லியாகவும், முறைநோய் வேப்பிலையை நன்றாக அரைத்து, அதன் சாற்றை எடுத்து தினமும் ...