வங்கம் தந்த சிங்கம் டாக்டர். சியாம பிரசாத் முகர்ஜி

வங்கம் தந்த சிங்கம் தன் 33வது வயதில் கல்கத்தா பல்கலைக் கழகத்தின் துணைவேந்தரானவர். சுதந்திர போராட்ட வீரர்.

காங்கிரஸ் கட்சி பாரதத்தை பிளந்து பாக்கிஸ்தான் உருவாக ஆதரவளித்தது. இவரோ பாக்கிஸ்தானை பிளந்து பஞ்சாப்பும்வங்கமும் பாரதத்துடன் இருக்கச்செய்தார்.

நேரு தலைமையிலான இடைக்கால மந்திரி சபையில் தொழில்துறை அமைச்சராக பொறுப்பேற்றார். காஷ்மீருக்குத் தனி அந்தஸ்து வழங்கப்பட்டதை எதிர்த்தார்.

ஒரு தேசத்திற்குள் இரண்டுகொடி இரண்டு சட்டமா? கூடாது கூடாது என்றார். காஷ்மீர் பாரதத்தின் பிரிக்கமுடியாத அங்கம் என்பதை உலகுக்குணர்த்திட போராடினார். நேரு – லியாகத் ஒப்பந்தத்தை எதிர்த்தார்.

பாராளுமன்ற விவாதத்தின் போது உன்னை ஒழித்துவிடுவேன் என்ற பிரதமர் நேருவைப்பார்த்து ஒழிப்பேன் என்ற உங்கள் எண்ணத்தை ஒழிப்பேன் என்று பதிலுரைத்த அஞ்சாநெஞ்சன்.

கட்டுக்கடங்காத காங்கிரஸ்க்கு கடிவாளமிட ஜனசங்கம் கண்டார்.

காஷ்மீரின் சிறப்புசட்டத்தை எதிர்த்து பெர்மிட் இன்றி காஷ்மீருக்குள் செல்வேன் என்று அறிவித்து காஷ்மீருக்குள் சிங்கமென சென்ற தேசியத்தலைவன்.

அந்தோ! நேரு-ஷேக் அப்துல்லா கூட்டு சதியால் அநியாயமாக மர்மமான முறையில் கொல்லப்பட்டார். இதுவரை அவர் எப்படி  கொல்லப்பட்டார் என்பதை யாராலும் கண்டுபிடிக்க முடியவில்லை.

காஷ்மீர் காக்க பலிதானமான முதல் அரசியல் தலைவர். காங்கிரஸ் நடத்திய அப்பட்டமான அரசியல் படுகொலை.

 

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கி ...

அசாமில் அமைதி ஏற்படுவதை காங்கிரஸ் விரும்பவில்லை – அமித்ஷா '' அசாமில் அமைதி ஏற்பட்டு வளர்ச்சி ஏற்படுவதை காங்கிரஸ் ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4 ...

ஒரே நாடு ஒரே தேர்தல் திட்டம் ரூ 4.50 லட்சம் கோடியை சேமிக்க முடியும் – அண்ணாமலை ''ஒரே நாடு, ஒரே தேர்தல் நடத்துவதால் பணத்தை சேமித்து, ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத் ...

சத்திஷ்கரை காட்டிலும் தமிழகத்தில் மிகப்பெரிய ஊழல் – அண்ணாமலை '' சத்தீஸ்கரில் நடந்த மதுபான ஊழலை விட தமிழகத்தில் ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதம ...

போர் நிறுத்த முயற்சிக்கு பிரதமர் மோடிக்கு நன்றி- புதின் கிழக்கு ஐரோப்பிய நாடுகளான ரஷ்யா - உக்ரைன் இடையே ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட் ...

ரூ 1000 கோடி ஊழலை எதிர்த்து போராட்டம் – அண்ணாமலை 'சென்னை டாஸ்மாக் அலுவலகத்தை, முற்றுகையிடும் போராட்டம் நடத்தப்படும்' என, ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்தி ...

கிரியேட்இன் இந்தியா திட்டத்திற்கு 8,600 கோடி நிதி – அஷ்வினி வைஷ்ணவ் கிரியேட் இன் இந்தியா திட்டத்திற்கு ரூ.8,600 கோடி நிதி ...

மருத்துவ செய்திகள்

புளிப்பு

உணவைச் சீரணிக்க புளிப்புச்சுவை உதவுகிறது. புளிப்புச் சுவை அரிக்கும் தன்மையுள்ளது. இரத்தத்தில் உள்ள ...

வெள்ளைப்பாடு நிற்பதற்கான வழிமுறைகள்

சோற்றுக்கற்றாழை – மடல்களைக் கொண்டு வந்து, மேல் தோலை நீக்கி, நன்கு கழுவி ...

குழந்தைகளின் மேனி பட்டுப்போல் இருக்க

பிறந்த குழந்தைக்கு தலையில் நல்லெண்ணை தேய்க்கக் கூடாது. தேங்காயெண்ணையைக் காய்ச்சித்; தேய்க்கணும். குழந்தை ...