நாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ் கட்சி சுய நலத்துக்காக பயன் படுத்துகிறது

 அரசியல் லாபத்திற்காக நாடாளுமன்ற அமைப்புகளை காங்கிரஸ்கட்சி சுய நலத்துடன் பயன் படுத்துகிறது என்று பா.ஜ.க., தலைவர் வெங்கய்யநாயுடு குற்றம் சுமத்தியுள்ளார்.

இதுகுறித்து செய்தியாளர்களிடம் வெள்ளிக் கிழமை அவர் மேலும் பேசியதாவது:

நாடாளுமன்ற கூட்டுக்குழு (ஜேபிசி.) வரைவு அறிக்கைமூலம் தொலைத் தொடர்பு துறையில் நடைபெற்ற ஊழலை காங்கிரஸ்கட்சி ஒட்டு மொத்தமாக மறைக்க பார்க்கிறது. இந்தவிவகாரத்தில் ஜேபிசி. தலைவர் பிசி.சாக்கோ ஒரு தலைப்பட்சமாக நடந்து கொண்டுள்ளார்.

இந்தவழக்கில் குற்றம் சாட்டப்பட்ட முன்னாள் அமைச்சர் ஆ.ராசா, ஜேபிசி. கூட்டத்தில் தானாகமுன்வந்து ஆஜராகி உண்மையை விளக்குவதாக சொல்வதை ஜே.பி.சி. ஏன் ஏற்கமறுக்கிறது.

மொத்தமுள்ள 30 ஜேபிசி. உறுப்பினர்களில் 15பேர் ஜேபிசி. தலைவரின் நடவடிக்கைகளில் நம்பிக்கையிழந்து அவர்மீது எதிர்ப்பு தெரிவித்துள்ளனர்.

மேலும் 2ஜி விவகாரத்தில் முன்னாள் பிரதமர் வாஜ்பாயின் மீது களங்கம் சுமத்த அவருடைய பெயரை ஜேபிசி. அறிக்கையில் சேர்க்க துடிக்கிறார்கள்.

ஊழல் குற்றச் சாட்டிலிருந்து தங்களை காத்துகொள்ள சிபிஐ, நுண்ணறிவுப்பிரிவு, அமலாக்க துறை, ஜேபிசி. உள்ளிட்ட நாடாளுமன்ற அமைப்புகளை சுய நலத்துடன் காங்கிரஸ் அரசு பயன் படுத்துகிறது.

நிலக்கரிசுரங்க ஒதுக்கீட்டில் நடைபெற்ற முறைகேடுகளை மூடிமறைத்து பிரதமரை காப்பாற்ற சி.பி.ஐ அறிக்கையில் சட்டத் துறை அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம்செய்கிறார். இதுபோன்ற நடவடிக்கைகளால் காங்கிரஸ் தலைமையிலான கூட்டணி அரசு, மத்தியில் ஆட்சியைத்தொடரும் உரிமையை தார்மீக ரீதியாக இழந்து விட்டது என்றார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள � ...

வலிமையான கட்டமைப்பை கொண்டுள்ள பாஜக சொல்கிறார் ப . சிதம்பரம் இண்டி கூட்டணி பலவீனமாக இருப்பதாகக் கூறிய முன்னாள் மத்திய ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்� ...

பாகிஸ்தானின் அணு ஆயுதங்களை சர்வதேச பாதுகாப்பில் விடவேண்டும்’ அமைச்சர் ராஜ்நாத் சிங் வலியுறுத்தல் ஜம்மு - காஷ்மீரில் உள்ள பாதுகாப்பு நிலவரம் தொடர்பாக, ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித� ...

பாகிஸ்தான் முயற்சியை முறியடித்த இந்திய வீரர்கள் பாகிஸ்தானின் முயற்சிகளை முறியடித்து இந்திய விமானப்படை மற்றும் ராணுவ ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் வி� ...

சந்திரயான்-5 திட்டம்: ஜப்பான் விஞ்ஞானிகளுடன் இஸ்ரோ தொழில்நுட்ப ஆலோசனை சந்தரயான் -5 திட்டத்தின் கூட்டு முயற்சிகள் குறித்து, இஸ்ரோ ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ� ...

பதற்றத்தை தணிக்க இந்தியா பாகிஸ்தான் முடிவு இந்தியா பாகிஸ்தான் எல்லையில் நிலவும் பதற்றத்தை குறைக்கும் வகையில், ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பா� ...

இந்தியாவிடம் பயங்கரவாதிகளை பாகிஸ்தான் ஒப்படைக்க வேண்டும்: ஜெய்சங்கர் இந்தியாவிடம் ஒப்படைக்க வேண்டிய பயங்கரவாதிகள் பட்டியல் பாகிஸ்தானிடம் உள்ளது, ...

மருத்துவ செய்திகள்

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

கருந்துளசியின் மருத்துவ குணம்

நஞ்சை முறிப்பவையாகவும், சீரணத்தைத் தூண்டுபவையாகவும் செயல்படுகிறது.

திருமணத்திற்கு முன்பு ஆணும் பெண்ணும் Rh சோதனை செய்ய வேண்டுமா?

Rh சோதனை செய்வது நல்லது. Rh ல் இருவகை உள்ளது. ஒன்று +ve (positive) ...