சிபிஐ ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளி

சிபிஐ ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளி நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணை அறிக்கையை திருத்திய விவகாரத்தில் மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்துள்ளது.

நிலக்கரி ஊழல் வழக்கு விசாரணையை உச்ச நீதிமன்றத்தில் சிபிஐ தாக்கல் செய்வதற்கு முன்பாக சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார், பிரதமர் அலுவலக அதிகாரிகள், தலைமை வழக்கறிஞர் ஆகியோர் சில திருத்தங்களை செய்த விவகாரம் நாடாளுமன்றத்தை முடக்கி வைத்திருக்கிறது. இந்த நிலையில் மத்திய சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் திருத்தம் செய்தார் என்பதை ஒப்புக் கொண்டு சிபிஐ இயக்குனர் மன்னிப்பு கோரி தாக்கல் செய்திருந்த அறிக்கை மீது இன்று உச்சநீதிமன்றத்தில் விசாரணை நடைபெற்றது.

இந்த விசாரணையின் போது மத்திய அரசுக்கும் சிபிஐக்கும் உச்சநீதிமன்றம் கடும் கண்டனம் தெரிவித்தது. “சிபிஐ என்ற அமைப்பின் வேலை விசாரணை நடத்துவதுதானே தவிர மத்திய அரசு அதிகாரிகளுடன் விவாதித்துக் கொண்டிருப்பது அல்ல…மத்திய அமைச்சர்கள் தங்களது துறை தொடர்பான சிபிஐயின் விசாரணை அறிக்கையைப் பார்வையிடலாம்.. ஆனால் அந்த அறிக்கையில் சொல்லப்பட்டிருக்கும் விவகாரங்களில் தலையிடக் கூடாது.

விசாரணை வளையத்தில் இருக்கும் அதிகாரிகள் எப்படி சிபிஐ விசாரணையில் தலையிட முடியும்? கடந்த மார்ச் 7-ந் தேதியன்று இரவு சிபிஐ அலுவலகத்தில் நிலக்கரி துறையின் இணை செயலர், பிரதமர் அலுவலகத்தின் இணை செயலர் ஆகியோருக்கு என்ன வேலை? சிபிஐ ஒரு கூண்டில் அடைக்கப்பட்ட கிளியாக இருக்கு..

சிபிஐ அமைப்புக்கு நிறைய எஜமானர்கள் இருக்கிறார்கள்… அவர்கள் பேச்சைக் கேட்டு நடக்கும் கிளிப்பிள்ளையாக சிபிஐ இருக்கிறது…. சிபிஐ சுதந்திரமாக செயல்படும் என்பதை மத்திய அரசு உறுதி செய்தால் நாங்கள் எந்த ஒரு உத்தரவும் பிறப்பிக்கமாட்டோம். அப்படி இல்லை எனில் நாங்கள் நடவடிக்கை எடுப்போம் .” என்று உச்சநீதிமன்றம் கடுமையாக சாடியது.

ஆனால் சட்ட அமைச்சர் அஸ்வனிகுமார் சிபிஐயுடனான கூட்டத்துக்கு அழைப்புவிடுத்தார். நான் சிபிஐயிடம் வரைவு அறிக்கையைக் கேட்கவில்லை என்று அட்டர்னி ஜெனரல் வாகன்வதி உச்சநீதிமன்றத்தில் மறுப்பு தெரிவித்தார்.ஆனால் இதை நிராகரித்த உச்சநீதிமன்றம் அட்டர்னி ஜெனரல் வாகன்வதி மற்றும் கூடுதல் சொலிசிட்டர் ஜெனரல் ஹரீன் ராவல் ஆகியோரையும் இந்த விவகாரத்தில் கடுமையாக விமர்சித்திருக்கிறது. மத்திய அரசை உச்சநீதிமன்றம் அண்மைக்காலத்தில் தற்போதுதான் இவ்வளவு கடுமையாக கண்டனம் தெரிவித்திருக்கிறது என்பது குறிப்பிடத்தக்கது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

தியானமும், பிரார்த்தனையும்

தியானம் வேறு. பிரார்த்தனை வேறு. மனம் தன்னிடம் எழும் விருப்பத்தை நிறைவேற்றும்படி, இறைவனை ...

முருங்கைப் பட்டை | முருங்கை பட்டை மருத்துவ குணம்

முருங்கை பட்டையை நன்றாக சிதைத்து அதனுடன் சிறிது உப்பு சேர்த்து வீக்கங்களின் மீது-வைத்து ...