நாகர்கோவிலில் பாஜக பிரமுகரை அரிவாளால்வெட்டிய வழக்கில் கைதுசெய்யப்பட்ட 3 பேர் மீதும் தேசிய பாதுகாப்புசட்டம் பாய்ந்தது. அவர்கள் தற்போது சிறையில் அடைக்கப்பட்டனர்.
குமரி மாவட்ட பாஜக மூத்த தலைவர் எம்ஆர் காந்தி கடந்த 21ம்தேதி வாக்கிங் சென்ற போது 4 பேர் கொண்ட மர்மகும்பல் இவரை சராமரியாக வெட்டிவி்ட்டு பைக்கில் தப்பிசென்றது. இது தொடர்பாக நெல்லைமாவட்டம் மேலப்பாளையத்தை சேர்ந்த முகமதுஷாலி, நாகர்கோவில் கோட்டாறு இளங்கலை பகுதியைசேர்ந்த பிரபு என்ற அம்சா, திருவிதாங்கோடு பரக்கத்தெருவை சேர்ந்த அப்துல்சமீம், கோட்டாறை சேர்ந்த ஷாஜி ஆகிய 4 பேரை போலீசார் கைதுசெய்து மதுரை சிறையில் அடைத்தனர்.
கோட்டாறு பகுதியைசேர்ந்த நவாஸ் என்பவரை தேடிவருகின்றனர். இதில் முகமதுஷாலியை பெங்களுரு குண்டுவெடிப்பு தொடர்பாக விசாரிக்க போலீசார் அழைத்துசென்றுள்ளனர். இவர் அல்உம்மா இயக்கத்தில் இருந்தவர் என்பது குறிப்பிடத்தக்கது. இவர்களில் மேற்படி மூன்றுபேரை தேசிய பாதுகாப்பு சட்டத்தில் கைதுசெய்ய எஸ்பி மணிவண்ணன் பரிந்துரைசெய்தார். அதன் பேரில் அவர்கள் 3 பேரையும் தேசிய பாதுகாப்புசட்டத்தில் கைதுசெய்ய கலெக்டர் நாகராஜன் உத்தரவிட்டார். இதையடுத்து அவர்கள் மூன்றுபேரும் தேசிய பாதுகாப்புசட்டத்தில் சிறையில் அடைக்கப்பட்டனர்.
கருஞ்செம்பை இலையை மைபோல அரைத்து கட்டியின் மேல் கனமாகப் பூசி வைத்தால், கட்டி ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |
எளிய முறையில் பிரம்மிக்கத்தக்க ஆரோக்கியம் பெறும் முறை சித்தர்கள் காட்டிய சிறந்த ... |
Leave a Reply
You must be logged in to post a comment.