முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசம் அடைவதை தடுக்கலாம்

 முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசம் அடைவதை தடுக்கலாம் லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்த பிரதமர் மன்மோகன் சிங்கை வலியுறுத்த வேண்டும் என ஜனாதிபதி பிரணாப் முகர்ஜியை சுப்பிரமணிய சாமி கேட்டுக் கொண்டுள்ளார்.

லோக்சபைக்கு அடுத்தாண்டு மேமாதம் தேர்தல் நடக்க உள்ளது. அரசியல்கட்சிகள் கூட்டணி அமைப்பதில் தீவிரமாக உள்ளன. இந்நிலையில் லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல்நடத்த பிரதமரை ஜனாதிபதி கேட்டுக்கொள்ள வேண்டும் என்றார். பிரதமர் மன்மோகன்சிங் ஒரு நியமன பிரதமர். அவர், வெளிநாடுகளுக்குசென்று பல்வேறு ஒப்பந்தங்களில் கையெழுத்துப் போட மட்டும் உள்ளார். இதனால் நாட்டிற்கு அதிகபலன் ஏற்படப்போவதில்லை என்று சுப்பிரிமணிய சாமி கூறினார்.

நாட்டில் அத்தியாவசிய பொருள்களின் விலை உயர்ந்துவிட்டது . ஒருகிலோ வெங்காய விலை மீண்டும் ரூ.100ஐ தாண்டும் அளவுக்கு உள்ளது. இதர அத்தியாவசியபொருட்கள் விலையும் உயர்ந்து விட்டது. அதனால் லோக்சபையை கலைத்து விட்டு விரைவில் தேர்தல்நடத்த மன்மோகன்சிங்கை ஜனாதிபதி பிரணாப் முகர்ஜி வலியுறுத்தவேண்டும் என்று சுப்பிரமணிய சாமி மேலும் கூறினார். லோக்சபைக்கு முன்கூட்டியே தேர்தல் நடத்தினால் நாட்டின் பொருளாதாரம் மேலும் மோசம் அடைவதை தடுத்துநிறுத்தலாம். ரூபாய் மதிப்பு அடியோடு சரிந்து விட்டது. இதற்கும் விலைவாசி உயர்வுக்கும் மத்திய அரசின் தவறான பொருளாதாரகொள்கைகளும் எங்கும் இல்லாத ஊழல்களும் தான் முக்கிய காரணமாகும் என்று சுப்பிரமணிய சாமி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

குடிமயக்கம் தெளிய

குடிமயக்கத்தைத் தெளிய வைக்க அவர்கள் வாயில் தாராளமாகத் தேனை ஊற்றலாம். சிறிது சிறிதாக ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...

அகத்திக் கீரையீன் சிறப்பு

அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ...