மக்களின் வாழ்க்கை நிலை குறித்து காங்கிரசுக்கு சிறிதும் கவலையில்லை

 மக்களின் வாழ்க்கை நிலை குறித்து காங்கிரசுக்கு சிறிதும் கவலையில்லை மன்னராட்சியை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் கட்சி காங்கிரஸ். அதனால் தான் டெல்லி மக்களைவிட மகன் சந்தீப்தீட்சித் மீதுதான் ஷீலா தீட்சித்துக்கு அதிக அக்கறை என நிதின்கட்கரி குற்றம் சுமத்தியுள்ளார்

பா.ஜ.க முன்னாள் தலைவரும் டெல்லிமாநில தேர்தல் பொறுப்பாளருமான நிதின் கட்கரி, மெஹ்ருலியில் நடந்த தேர்தல்பிரசார கூட்டத்தில் பேசியதாவது: நாட்டை 60 ஆண்டுகளுக்குமேல் ஆண்டுள்ள காங்கிரசுக்கு மக்களின் வாழ்க்கைநிலை குறித்து தெரியாது. அதுபற்றி அந்தகட்சிக்கு கவலை இல்லை. அதேபோல், நாட்டில் நடந்துள்ள எல்லா ஊழல்களுக்கும் காங்கிரஸ் தான் காரணம். காற்றில்- 2ஜி , நிலத்தில்-காமன்வெல்த் விளையாட்டு போட்டி, பூமிக்கடியில் – நிலக்கரி சுரங்கம் என எல்லாவற்றிலும் ஊழல்செய்து சாதனை படைத்துள்ள ஒரேகட்சி காங்கிரஸ்தான்.

மன்னராட்சியை தொடர்ந்து கடைப்பிடித்துவரும் கட்சி காங்கிரஸ். அதனால் தான் டெல்லி மக்களைவிட மகன் சந்தீப்தீட்சித் மீதுதான் ஷீலா தீட்சித்துக்கு அதிக அக்கறை. அவரது தலைவர் சோனியாவுக்கோ ராகுல் நலனில் தான் அக்கறை. ராகுல்காந்தியை பிரதமராக்குவது தான் காங்கிரசுக்கு இப்போதுள்ள ஒரேபணி. அந்த பதவியைவகிக்க ராகுலுக்கு எந்ததகுதி உள்ளது? எந்த தகுதியை அவர் வளர்த்துகொண்டுள்ளார்? ராகுல் பிரசாரம்செய்த இடங்களில் காங்கிரஸ் தோற்றது தான் அவரது ஒரேசாதனை. மெஹ்ருலியில் ராகுல்காந்தி பிரசாரம் செய்தால், பாஜக. வேட்பாளர் பர்வேஷ் சாகிப்சிங்கின் வெற்றி உறுதியாகிவிடும்.

பா.ஜ. ஆட்சிக்கு வந்தால், பிறப்பிக்கப்படும் முதல் உத்தரவு மின்கட்டணத்தை 30 சதவீதம் குறைப்பதுதான். ஒவ்வொரு வீடுகளில் சூரியமின்சக்தி கருவி பொருத்தப்படும். அதன் மூலம் வீடுகள்தோறும் மின் உற்பத்தி செய்யமுடியும். இவ்வாறு நிதின்கட்கரி பேசினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

அமுக்கிரா கிழங்கு

இதன் இலையை உண்டால், உடல் வெப்பம் நீங்கும், காய் உண்டால் சிறு நீர் ...

மனதை ஒருமைப்படுத்துதல்

தியானத்திற்கு மன ஒருமைப்பாடு நிலை மிகவும் முதன்மையானது. மனம் அலைபாயாது ஒரு பொருளில் ...

இலவங்கப் பத்திரி மூலம் நாம் பெறும் மருத்துவம்

இலவங்கப்பத்திரி மூலம் பிரமேகம், கடுமையான காய்ச்சல், குளிர்சுரம், ஆஷ்துமா போன்றவைகளைக் குணப்படுத்தலாம். பெண்களுக்கு ...