கோயபெல்ஸ் மறுபிறவியெடுத்தால் நிச்சயம் ஆம் ஆத்மியில் சேர்வார்

 ஹிட்லரின் மூன்றாவது ரெய்க் அமைச்சரவையில் (1933-1945) மனிதவள மேம்பாடு மற்றும் கொள்கை பரப்புத்துறையின் அமைச்சராக இருந்தவர்தான் ஜோசப் கோயபெல்ஸ். அப்பதவியால் வானொலி, பத்திரிக்கை, புத்தக வெளியீடு, திரைப்படம் போன்ற பல்வேறு ஊடகங்கள் அவரின் முழுக்கட்டுப்பாட்டில் இருந்தது. அவருடைய புகழ்பெற்ற பிரசார வியூகத்தால் வரலாற்றில் நினைவுகூறப்படுகிறார்.

அதன் காரணத்தை அவரின் இந்தப்பேச்சின் மூலம் உணரலாம்:

"எவ்வளவு பெரிய பொய்யானாலும் திரும்பத்திரும்ப சொல்வதன் மூலம் மக்கள் நாளடைவில் நம்பத்தொடங்கி விடுவார்கள். அரசியல், பொருளாதார, மற்றும் ராணுவ விளைவுகளை மக்களிடமிருந்து அரசாங்கம் மறைப்பதன் மூலம், பொய்யை குறிப்பிட்ட காலம் வரை காப்பாற்றலாம். உண்மைதான் பொய்க்கு எதிரி, அதே போல, உண்மைதான் அரசாங்கத்தின் மிகப்பெரிய எதிரி என்பதால், அதிருப்தியை அடக்க எல்லா அதிகாரங்களையும் பிரயோகிப்பது அரசாங்கத்திற்கு மிகவும் அவசியமாகிறது."

முன்னர் நடந்தவை பற்றி இன்று அக்கறை இல்லை. இந்திய அரசியலில் சாதாரண தொண்டனின் மனவோட்டம் இது. ஆம் ஆத்மி கட்சியின் தலைவர் அர்விந்த் கேஜ்ரிவாள் கைது செய்யப்படவோ, தடுத்து நிறுத்தப்படவோ இல்லை. தேர்தல் காலத்தில், நடத்தை விதிகளை அமல்படுத்தும் பொறுப்பில் இருக்கும் காவல் துறையோ அல்லது மாவட்ட நிர்வாகமோ, அப்படி அமல்படுத்தும்போது தேர்த்தெடுக்கப்பட்ட அரசிற்கு தெரிவிப்பதில்லை. தேர்தல் ஆணையத்தின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுவார்கள். தேர்தல் காலங்களில் நாம் கூட தடுத்து நிறுத்தப்பட்டு சோதனை செய்யப்பட்டிருப்போம். பணம் ஏதேனும் கொண்டு போகிறோமா என நம் உடமைகளை சோதனை செய்திருப்பார்கள். நியாயமான நேர்மையான தேர்தலை நடத்த ஆணையத்தின் முயற்சியின் ஒரு பகுதியாகத்தான் நாம் எடுத்துக்கொள்வோம். ஆனால் கேஜ்ரிவாளோ தன் ஒத்துழையாமையை தேசிய சிக்கலாக மாற்றுகிறார்.

எஸ்எம்எஸ் மூலம் தொண்டர் கட்டமைப்பை தொடர்பு கொள்வதும், குறிப்பிட்ட இடத்தில் கூட்டுவதும், அரசியல் நாடகம் போடுவதுதான் ஆம் ஆத்மி கட்சியின் வழக்கமான  நடைமுறை. இப்படிதான் ரயில் பவன் எதிரிலும், என் வீட்டு முன்பும், இம்முறை பாஜக அலுவலகம் முன்பும் செய்தனர். இதேபோல்தான் நாடெங்கிலுமுள்ள மற்ற பாஜக அலுவலகங்கள் முன்பாகவும். எங்கள் தலைமை அலுவலகத்தில் கற்கள் எரியப்பட்டது, அறிவிப்புப்பலகைகள் உடைக்கப்பட்டன, ஒரு முக்கியஸ்தர் சுவர் தாண்டி அலுவலகத்திற்குள் அத்துமீறி நுழைய பார்க்கிறார்.

நாடெங்கும், பாஜக தொண்டர்களுடனும் போலீசாருடனும் வாக்குவாதத்தில் ஈடுபடும் ஆம் ஆத்மி கட்சியினர் பின்னர் கடைசியில் டி‌வி காமிராக்கள் முன் தஞ்சம் அடைகின்றனர். பாதிக்கப்பட்ட அப்பாவிகள் போல் காட்டிக்கொண்டு, நாங்கள் அமைதியாகத்தான் போராடினோம் ஆனால் உள்ளிருந்துதான் தாக்க்குதல் நடந்தது என்றும் நடிக்கின்றனர். தேர்தல் நடத்தை விதிகளின்படி வழக்கமாக சோதிப்பதை ஒரு தொண்டர், சௌரி-சோரா சம்பவத்துடன் ஒப்பிட்டு பேசுகிறார். துரதிர்ஷ்டமாக, ராஜ்மோகன் காந்தி (காந்தியின் பேரன்) போன்றோரும் இந்த பொய் பிரசாரத்தில் பயன்படுத்த படுகின்றனர். ஆம் ஆத்மியின் இந்த வன்முறை போராட்டம், அமைதியாக நடந்ததாக அவர் குறிப்பிடுகிறார். உண்மையில் அவர்கள் வன்முறை வெறியுடன் காணப்பட்டனர். வன்முறைக்கும், சட்ட மீறலுக்கும் அந்த கட்சியினர் கைது செய்யப்பட்டால் கூடவே அங்கிருந்த பாதிக்கப்பட்டவர்களையும் கைது செய்யுமாறு வலியுறுத்துகின்றனர்.

 கடந்த சில தினங்களாக என் அனுபவத்தில் நான் கண்ட, ஆம் ஆத்மியின் பிரசார உத்தி என்னவென்றால், பொய்யோ நிஜமோ, பிரச்னைகளை தயாரிப்பது, பின்னர் அதையே தொடர்வது. டெல்லியில் தன் 49 நாள் கேவலமான ஆட்சியின் கெட்டபெயரிலிருந்து தற்காத்துக்கொள்ள கண்டு பிடித்ததுதான், முக்கிய கார்பரேட் நிறுவனத்தின் மீது அரசியல் பிரச்னையை எழுப்பிய விவகாரம். ஆம் ஆத்மியின் அரசியல் எதிரிகள் எல்லோரும் கார்பரேட் நிறுவனங்களுக்கு நெருக்கமானவர்கள், தன்னைத்தவிர, மற்ற எல்லோரும் சந்தேகிக்கும்  வகையில் நிதி பெறுகிறார்கள் என்பது அவர்கள் வாதம். இதையெல்லாம் நிரூபிக்க அவர்களிடம் ஆதாரம் உண்டாயென்றால் இல்லை என்பதுதான் பதிலாக இருக்கும். அவர்களுடைய நிதி ஆதாரமே கேள்விக்குரியது.

என் பெயரை சொல்லிக்கொண்டு மதன் லால் எனும் எம்எல்ஏவிற்கு யாரோ லஞ்சம் தர முன்வந்தார்கள் என்று என் வீட்டிற்கெதிரே அவர்கள் தர்ணா செய்ததை நியாயப்படுத்துகிறார்கள். அந்த தர்ணா நடக்கும் வரை, எனக்கு டெல்லியில் மதன் லால் என்றொரு எம்எல்ஏ இருந்தார்  என்பதே தெரியாது. நேற்று நாடு முழுவதும் நடந்த தர்ணா போராட்டங்கள் அனைத்தும் அமைதியான நடவடிக்கைகளாம், சொல்லிக்கொள்கிறார்கள். பாதிப்புக்குள்ளான பாஜகவினர்தான் உண்மையான குற்றவாளிகளாம், உச்ச தொனியில் கத்துகிறார்கள். ஆம், ஜோசப் கோயபெல்ஸ் மறுபிறவியெடுத்தால் நிச்சயம் ஆம் ஆத்மியில் சேர்வார்.

நன்றி ஸ்ரீ அருண் ஜேட்லி

மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவர்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கீழாநெல்லியின் மருத்துவ குணம்

 இது வெப்ப மண்டல பகுதிகளில் வாழும் குற்றுச் செடி இனத்தை சேர்ந்ததாகும். இந்தியாவின் ...

அரிசிப்பானையில் தேவாமிர்தம் எடுக்க கற்றுக் கொடுத்தவர்கள் நம் முன்னோர்கள்

அமெரிக்காவில் உள்ள ஒரு பல்கலைக் கழகத்தில் நம் பண்டைய உணவை வைத்து ஆராய்ச்சி ...

கோவையின் மருத்துவக் குணம்

கோவை இலையை சாறு எடுத்து, நான்கு தேக்கரண்டியளவு சாற்றை ஒரு டம்ளரில் விட்டு ...