கரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழில்நுட்பம் பெரிதும்உதவியது

கரோனா நெருக்கடியை சமாளிக்க தகவல் தொழில்நுட்பம் பெரிதும்உதவியது என பிரதமர் நரேந்திரமோடி பெருமிதமாக கூறினார்.

ஸ்டார்ட்அப் மற்றும் தொழில்நுட்ப நிறுவனங்களுக்கான டிஜிட்டல்மாநாடு விவாடெக். ஐரோப்பிய நாடுகளில் இது மிகவும் பிரபலம். 2016-ம் ஆண்டிலிருந்து இம்மாநாடு பாரீஸில் நடைபெறுகிறது. இதில் காணொலி முலம் பங்கேற்ற பிரதமர் நரேந்திர மோடி பேசியதாவது:

இந்தியாவும் பிரான்ஸும் பல்வேறு துறைகளில் ஒருங்கிணைந்து செயல்பட்டுவருகின்றன. இவற்றில் முக்கியமானது தொழில்நுட்பம் மற்றும் டிஜிட்டல் நுட்பங்களாகும். இப்போதைய காலகட்டத்தில் இருநாடுகளிடையிலான தொழில்நுட்ப உறவு மேலும் வலுப்படவேண்டியது மிகவும் அவசியம். இது இந்தியா மற்றும் பிரான்ஸுக்கு மட்டும் நன்மை அளிக்கக்கூடியதல்ல. உலகம் முழுவதற்கும் நன்மை அளிப்பதாக இருக்கும். இந்தியாவை சேர்ந்த இன்ஃபோசிஸ் நிறுவனம் தகவல் தொழில்நுட்பத்தை பகிர்கிறது. அதேபோல பிரான்சின் அடோஸ்நிறுவனம் அதிவிரைவான சூப்பர்கம்ப்யூட்டரை இந்தியாவுக்கு அளித்துள்ளது. இதேபோல பிரான்சின்கேப் ஜெமினி, இந்தியாவின் டிசிஎஸ், விப்ரோ உள்ளிட்ட நிறுவனங்கள் ஒருங்கிணைந்து தகவல் தொழில்நுட்ப பகிர்வில் முன்னோடியாக திகழ்கின்றன.

உலக நாடுகளுக்கு இந்த நூற்றாண்டின் மிகப்பெரிய சவாலாக உருவெடுத்தது கரோனாதொற்றுதான். இந்த நெருக்கடியை எதிர்கொள்ள நமக்கு கைகொடுத்தது தகவல் தொழில்நுட்பமும், நவீன மருத்துவமும்தான். கரோனாவுக்கு முந்தையசூழல் மற்றும் கரோனாவுக்கு பிந்தைய சூழலில் புத்தாக்க நடைமுறைகள் எவ்வளவு தூரம் நமக்கு உதவியாக இருந்தன என்பதை நாம் புரிந்துகொள்ள முடியும். தொழில் நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட ஆதார், மக்களுக்கு டிஜிட்டல் மூலமாக நிதி உதவிஅளிக்க பேருதவியாக இருந்தது.

இந்தியாவில் கரோனாதொற்று பரவியகாலத்தில் பல்வேறு மருத்துவ கருவிகள், முகக்கவசங்கள் உள்ளிட்ட தட்டுப்பாடு நிலவியது. இந்தகாலகட்டத்தில் ஸ்டார்ட் அப் மற்றும் தனியார் நிறுவனங்களின் செயல்பாடு மிகவும் குறிப்பிடத்தக்கதாக இருந்தது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

மருதாணிப் பூவின் மருத்துவக் குணம்

மணமிக்க சிறு பூக்கள் மலர்வதைப் பார்க்க அழகாக இருக்கும். பூஜைக்கும் உதவும் இப்பூக்கள். ...

செம்பரத்தையின் மருத்துவக் குணம்

செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும்.

அருகன்புல்லின் மருத்துவ குணம்

அருகன்புல்லின் வேர் ஒரு கைபிடியளவும், கானாம் வாழையிலை கைப்பிடியளவு, இதே அளவு அசோக ...