ஜன சங்கம் வரலாறு

 பிரிட்டிஷார் பாரதத்தைத் துண்டாடி விடுதலை அளித்துச் சென்ற பின் நேரு பிரதமரானார். அவரது மந்திரி சபையில் டாக்டர் .அம்பேத்கர் மற்றும் டாக்டர். ஷ்யாமா பிரசாத் முகர்ஜி போன்றவர்களையும் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று காந்திஜியும், சர்தார் படேலும் விரும்பினர்.

இத்தலைவர்கள் நேருவுடன் கருத்து வேறுபாடு கொண்டிருந்தனர். ஆனால் சர்தார் படேல் போன்ற காங்கிரஸ் தலைவர்களுடன் இணக்கமாக் இருந்தனர். படேல் அவர்களது உடல் நலக் குறைவிற்குப் பின் நிலைமை மோசமாகியது. நேரு-லியாகத் அலி உடன்படிக்கையால் கிழக்கு வங்காளத்தில் இருந்த ஹிந்துக்கள் பாகிஸ்தான் அரசின் தயவில் விடப்பட்டனர்.பாகிஸ்தான் அரசால் அவர்கள் துன்புறுத்தப் பட்டது, பலவந்தமாக பாரதத்துக்கு அனுப்பப்பட்டது இவை ஷ்யாமா பிரசாத் முகர்ஜியைப் பொறுமை இழக்க வைத்தது.

அவர் ஏப்ரல் 8, 1950 அன்று நேரு அமைச்சரவையிலிருந்து விலகினார்.ஏப்ரல் 14 ம் நாள் தனது ராஜினாமா பற்றிய ஒரு உரையை மக்களவையில் நிகழ்த்தினார்.அது சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த ஒன்றாகும்.. அதில் அவர் ‘நேருவின் கொள்கைகள் நாட்டை அழிவுப் பாதையில் எடுத்துச் செல்லும் என்றும் ,நம் தாய்நாடு பிரிவினைக்கு முன்பிருந்த நிலையை விட மோசமான நிலைக்குத் தள்ளப்டும்’ என்றும் கூறியிருந்தார்.

ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினரும் அதைப் பாராட்டினர். அவரது துணிச்சலான , சரித்திர முக்கியத்துவம் வாய்ந்த முடிவைப் பாராட்டி டில்லி நகர வாசிகள் அவருக்கு ஒரு வரவேற்பு கொடுத்தனர். தனது முத்தாய்ப்பான பேச்சில் முகர்ஜி அவர்கள் ‘நேருவின் காங்கிரசுக்கு மாற்றாக நாட்டுக்கு ஒரு தேசிய வாத , ஜனநாயக மாற்று தேவை ‘என்று குறிப்பிட்டார். ஹிந்துக்களின் எல்லாப் பிரிவினருக்கும் குறிப்பாக ஆர்ய சமாஜ் மற்றும் ராஷ்ட்ரிய ஸ்வயம் சேவக் சங்கத்துடன் தொடர்புடையவர்களைத் தான் ஆரம்பிக்க எண்ணிய கட்சிக்கு ஆதரவு அளிக்க கோரிக்கை விடுத்தார்.

 இந்நிலையில் அரசியல் அமைப்புச் சட்டம் நிறையது. 1951 ல் தேர்தல் வரலாம் என்று எதிர்பார்க்கப் பட்டது.. முகர்ஜியின் கோரிக்கைக்கு ஆர்ய சமாஜத்திடமிருந்து நம்பிக்கையூட்டும் பதில் கிடைத்தது. ஆனால் ஆர் எஸ் எஸ்ஸிடமிருந்து எந்த பதிலும் இல்லை.
syama prasad1ஆர் எஸ் எஸ் ன் இயக்க ரீதியான அமைப்பையும் ,அதற்கு இளைய தலைமுறையினரிடையே இருந்த வரவேற்பையும் அறிந்திருந்த முகர்ஜி அதனிடமிருந்து ஒரு சாதகமான பதிலை எதிர்பார்த்தார்.

ஆனால் எந்தப் பதிலும் வராததால் முகர்ஜி அவர்கள் மேலும் கால தாமதம் செய்ய விரும்பாமல் திட்டமிட்டபடி புதிய கட்சியைத் தொடங்க முடிவு செய்தார். அவர் கொல்கத்தா சென்று தனது ஆதரவாளர்களுடன் கலந்தாலோசித்து புதிய கட்சியை ஆரம்பித்தார். அதற்கு ‘இந்திய மக்கள் கட்சி’ என்று பெயரிடப்பட்டது. இது ஆர் எஸ் எஸ் இல் சிறிது சலனத்தை ஏற்படுத்தியது. முன்பு காந்தி படுகொலையில் ஆர் எஸ் எஸ்ஸை தொடர்பு படுத்தி அதைத் தடை செய்த போது அரசியல் ஆதரவு இல்லாத குறை உணரப்பட்டது.

ஆகவே அது இப்போது இந்திய மக்கள் கட்சிக்கு ஆதரவு அளிக்க முன்வந்தது . கட்சிக்கு வேறு பெயரையும் பரிந்துரை செய்தது. அதன்படி பாரதீய ஜன சங்கம் என்ற பெயர் சூட்டப்பட்டது.
1951 அக்டோபர் 21 அன்று ஜனசங்கத்தின் ஸ்தாபகக் கூட்டம் நடைபெற்றது. முகர்ஜி அவர்கள் தேசியத் தலைவராகவும் , பால்ராஜ் மதோக் அவர்கள் தேசியச் செயலாளராகவும் தேர்ந்தெடுக்கப் பட்டனர்.

கட்சி துவக்கப் பட்ட இரண்டு மாதங்களுக்குள்ளேயே பொதுத் தேர்தல் அறிவிக்கப் பட்டது. முகர்ஜியின் செல்வாக்கை உணர்ந்த நேரு அவரையும், ஜன சங்கத்தையும் தேர்தல் கூட்டங்களில் தனது தாக்குதலுக்கு இலக்காக்கினார். இது ஒரு வகையில் ஜன சங்கத்திற்கு நன்மை செய்து நல்ல விளம்பரத்தைப் பெற்றுத் தந்தது. ஜன சங்கம் நாடு முழுக்க 3 மக்களவைத் தொகுதிகளை வென்றதுடன் 3 சதவிகித வாக்குகளைப் பெற்று தேசியக் கட்சி என்ற அந்தஸ்தையும் பெற்றது.

ஜன சங்கத்தின் தேசியக் கட்சி என்ற தகுதியும், மக்களவையின் உள்ளேயும், வெளியேயும் முகர்ஜி அவர்களின் வளர்ந்து வரும் புகழும் ஜன சங்கத்தை காங்கிரசுக்கு ஒரு உண்மையான தேசீய , ஜனநாய மாற்றாக எழுந்ததைச் சுட்டிக் காட்டியது. இதுவே காங்கிரசுக்கு மிகச் சரியான மாற்றாக மெல்ல மெல்ல வளர்ந்த ஜன சங்கம் அமைந்த வரலாறாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

யோக முறையில் தியானத்திற்குரிய இடம்

பிறவிப் பெருங்கடலைக் கடந்து அழியாத பேரின்ப நிலையைப் பெற, வழிகள் உள்ளன. இறை ...

சின்னம்மை ( நீர்க்கோளவான் )

சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ...

‘எலும்பு வங்கி’ என்றால் என்ன?

உடலுறுப்புகளிலேயே இரண்டாவதாக, அதிகமாக கொடை (தனம்) செய்யப்படுவது எலும்புதான் (Bone Donation). ரத்தம்முதலாவது. ...