பன்டிட். தீன்தயாள் உபாத்யாயாவை டாக்டர்.லோஹியா சந்தித்தபோது

 கடந்த 23, மார்ச், 2014 அன்று டாக்டர்.ராம் மனோஹர் லோஹியாவின் பிறந்த நாள் நூற்றாண்டு கொண்டாடப்பட்டது. இந்திய சுதந்திர போராட்டத்திலும் சோஷலிஸ்ட் இயக்கத்திலும் குறிப்பிடத்தக்க முக்கிய மாமனிதர்களில் ஒருவர் அவர். சுமார் 25 முறை அவர் சுதந்திர போராட்ட காலத்தில் அவர் கைதுக்குள்ளானார். பாராளுமன்ற மைய மண்டபத்துக்கு சென்று நான் அவர் படத்துக்கு மலர் தூவி அஞ்சலி செலுத்தினேன்.

 

1970ல், ராஜ்யசபை உறுப்பினராக, முதல் முறையாக பாராளுமன்றத்துக்குள் நுழைந்தேன். அதற்கு மூன்றாண்டுகளுக்கு முன்பே, 1967ம் ஆண்டே தனது 57வது வயதில் அவர் காலமாகிவிட்டார். ஆர்கனைசர் பத்திரிக்கையில் பத்திரிக்கையாளனாக பணியாற்றியபோதுதான் அவரிடம் அறிமுகமும் உரையாடும் வாய்ப்பும் கிடைத்தது. நீங்கள் அகன்ற பாரதத்தை பேசுவதால், முஸ்லிம்கள் பொதுவாக ஜனசங்கத்திற்கு எதிராக இருப்பதாக அப்போது அவர் என்னிடம் சொன்னார். அதற்கு என் பதில்: “நீங்கள் பன்டிட் தீன்தயாள் உபாத்யாய அவர்களை சந்தித்து அகன்ற பாரதத்தை பற்றிய ஜனசங்கத்தின் விளக்கத்தை கேட்கவேண்டும் என்று விரும்புகிறேன்.”

இரு தலைவர்களுக்கிடையே சந்திப்பும் நிகழ்ந்தது. அந்த சந்திப்பு எங்கள் கட்சியின் வரலாற்றில் குறிப்பிடத்தகுந்த நிகழ்வுகளில் ஒன்றானது. அகண்ட பாரதத்தை பற்றி ஜனசங்கம் சொல்வதை இரு தலைவர்களும் சேர்ந்து வரலாற்றின் முக்கிய கூட்டறிக்கை ஒன்றை வெளியிட்டார்கள். 12,ஏப்ரல், 1964 அன்று இருவரும் கையெழுத்திட்ட அந்த கூட்டறிக்கையில் கூறியதாவது: “இந்திய ஹிந்து, முஸ்லிம்களுக்கோ அல்லது பாகிஸ்தானிய ஹிந்து, முஸ்லிம்களுக்கோ பிரிவினை நல்லதல்ல என்று பாகிஸ்தான் ஒருநாள் உணரும் வாய்ப்பிருப்பதாகவும், இதன் விளைவாக இந்திய-பாகிஸ்த்தான் கூட்டணிக்கு இரு நாடுகளும் மனதளவில் தயாராகும் என்றும் கூறினார்கள்.”

மைய மண்டபத்தில் நடக்கும் இந்த மலரஞ்சலியை நான் டெல்லியிலிருந்தால் தவறவிட்டதேயில்லை. சிலமுறை நான் மட்டும் ஒரே எம்.பி.யாக அஞ்சலி செலுத்தியிருக்கிறேன். நேதாஜி சுபாஷின் பிறந்தநாளின்போதும் ஒரு முறை இப்படி ஆனது.

மூன்றாண்டுகளுக்கு முன் டாக்டர்.மன்மோஹன் சிங்கும்  டாக்டர்.லோஹியாவின் பிறந்தநாள் விழாவிற்கு வந்திருந்தது நினைவிற்கு வருகிறது. பிரதமர் சாதாரணமாக என்னிடம் கேட்டார்: “உங்களுக்கு டாக்டர்.லோஹியாவை எந்த அளவுக்கு தெரியும்?” நான் பதிலளித்தேன், “நன்றாகவே தெரியும். ஆனால் நான் அப்போது பத்திரிக்கையாளன்.” பின்னர் தீன்தயாள்ஜியுடனான சந்திப்பு மற்றும் இந்திய-பாக். கூட்டணி வாய்ப்பு போன்ற சம்பவங்களை நினைவுகூர்ந்தேன்.

என் பேச்சை கூர்ந்து கேட்ட பின்னர் அவர் கேட்டார், “இன்னும் அதற்கு வாய்ப்பிருப்பதாக நீங்கள் நினைக்கிறீர்களா?” நான் அழுத்தமாக பதிலளித்தேன், “இல்லவே இல்லை. பாக்கிஸ்தானின் தீவிரவாத தந்திரங்களை நாம் மென்மையாக அணுகும் வரை சாத்தியமில்லை!”

*****

1952லிருந்து எல்லா பொதுத்தேர்தல்களிலும் பங்குபெற்றிருக்கிறேன். இதுவரை நடந்த 15 தேர்தலில்களிலும் இல்லாத வகையில் காங்கிரஸ் தோல்வியை சந்திக்கும் என்று தீர்மானமாக என் கட்சித்தோழர்களிடம் சொல்லிவருகிறேன்.

1970ல் ராஜ்யசபையில் நுழைந்ததில் இருந்து என் பாராளுமன்ற ஆட்டம் தொடங்கியது.இரு முழு பதவிக்காலங்களும் ராஜ்யசபையில் கழிந்தது. பின் வந்த ஆறு தேர்தல்களிலும் காந்திநகரிலிருந்து வெற்றிபெற்று (9, 10, 12, 13, 14 மற்றும் 15வது) லோக்சபையில் இருந்துள்ளேன். என் மீது பொய்யாக சாட்டப்பட்ட ஹவாலா குற்றச்சாட்டிலிருந்து சட்டப்பூர்வமாக விடுவிக்கப்படும் வரை பாராளுமன்றத்துக்கு செல்லமாட்டேன் என அறிவித்து விட்டதால் 11வது தேர்தலில் போட்டியிடவில்லை. 1996 லோக்சபை தேர்தலில் முதல்முறையாக பாராளுமன்றத்தில் பெரிய கட்சியாக பாஜக வெற்றிபெற்ற தேர்தலில் நான் போட்டியிடவில்லை. ஏப்ரல், 8, 1997 அன்று டெல்லி உயர்நீதிமன்ற நீதிபதி மொஹம்மத் ஷம்மிம் அவர்கள் வழங்கிய தீர்ப்பு, என் மீதான ஹவாலா குற்றச்சாட்டை தவிடுபொடியாக்கியது.

பயோனீர் பத்திரிக்கையின் கருத்து இது:

“பரிசுத்தமான நேர்மையான அரசியல்வாதியின் மீது சதியால் விழுந்த கறை நீதிமன்றத்தால் துடைக்கப்பட்டுள்ளது. பாஜக தலைவரின் அரசியல் வாழ்க்கையை முடிக்கவும் அல்லது அடக்கவும், இதன்மூலம் அவருடைய கட்சியின் தொடர் நடவடிக்கைகளை நிறுத்தவும் பின்னப்பட்ட சதி பூஜ்யமாகிவிட்டது. உயர்ந்த சட்ட ஒழுக்கத்தையும், வழக்கத்துக்கு மாறாக சத்தியத்தில் நம்பிக்கையும் ஏற்படுத்திய, நீதிபதி ஷம்மிமின் 70 பக்க தீர்ப்பானது, ஸ்ரீ அத்வானி மீதான குற்றச்சாட்டை தள்ளுபடி செய்தது மட்டுமல்லாமல், விசாரணைக்கு கூட லாயக்கற்றது என்றும் கூறியுள்ளது. அரசுதரப்பு சொன்ன வகையில் தொழிலதிபர் ஸ்ரீ SK ஜெய்ன் ஹவாலா பணம் கொடுத்ததற்கும், ஸ்ரீ அத்வானி வாங்கியதற்கும் எந்த ஆதாரமும் தான் காணவில்லை என்கிறார் நீதிபதி.

****

பத்து மாதங்களுக்கு முன் (மே,2013), என்னுடைய வலைப்பூவில் இந்தியாவின் 14 பிரதமர்களை பற்றி எழுதியிருந்தேன். அந்தப்பதிவில் நான் குறிப்பிட்டவை:

“யாராவது ஒரு அரசியல் ஆய்வாளர், விருப்புவெறுப்பின்றி அடல்ஜியின் ஆராண்டுகால ஆட்சியை எடைபோட்டால், 1998-2004 வரையான தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி காலம் சாதனைகளால் நிரம்பியது என்றும் குறையாக சொல்ல ஒன்றுமே இல்லை என்றும், உடனே முடிவு செய்வார். அந்த காலத்தின் முக்கிய சாதனைகளை கூட்டிப்பார்த்து பட்டியலிட்டால் இவைகளை சொல்லமுடியும்:

  • பிரதமரான சில மாதங்களிலேயே இந்தியா அனுசக்தித்திறன் கொண்ட நாடானது.
  • பொருளாதாரத்துறையில் இந்த அரசு, நெடுச்சாலைகள், கிராமப்புற சாலைகள், நீர்ப்பாசனம், மின்சக்தி போன்ற கட்டுமானப்பணிகளில் கவனம் செலுத்தியது.
  • கணினி மென்பொருளில் இந்தியா சக்திமிக்க நாடானது.
  • நமக்கெதிராக அமெரிக்கா விதித்த பொருளாதார தடை, சுதந்திர இந்தியாவின் மிக மோசமான பேரழிவுகளில் ஒன்றான கட்ச் பகுதி பூகம்பம், போன்ற இடர்பாடுகளை தாண்டி, தே.ஜ.கூட்டணி அரசு பணவீக்கத்தை ஆறாண்டுகள் கட்டுக்குள் வைத்திருந்தது.

நல்லரசுக்கும், வளர்ச்சிக்கும், கூட்டணி தர்மத்திற்கும் உதாரணமாக விளங்கியது அந்த ஆறாண்டு கால ஆட்சி. ஊழல் என்று அரசுக்கெதிராக யாரும் முணுமுணுக்கக்கூட இல்லை.
நதிகள் இணைப்புக்கு அடிக்கல் நாட்டப்பட்டு, இதற்கென தனி முழு நேர காபினட் மந்திரி ஒதுக்கப்பட்டு அவர் மேற்பார்வையில், சிறப்பு குழு அக்கறையுடன் பணி செய்தது.

அடல்ஜியிடம் வெளிப்படையாக தெரியும், நான் மெச்சும் குணாதிசயம் என்னவென்றால், எவ்வளவோ சாதனைகள் அவருக்கு அணி சேர்ப்பதுபோல் அமைந்திருந்தாலும், துளியும் அவரிடம் தான் எனும் அகங்காரமோ, மூர்க்கமோ இல்லாததுதான். ஆரம்பத்தில் சொன்னபடி, 1947லிருந்து இருந்த பிரதமர்களை சீர்தூக்கி பார்த்தால், அடல்ஜி ஒருவரைத்தான் மற்றவர்களிடமிருந்து தனித்துவமான பிரதமர் என்று சொல்வேன்!

சோனியா-மன்மோஹன் அரசை 2004லிருந்து கூர்ந்து கவனித்து வரும் நான் என் கூட்டாளிகளிடம் கூறுவேன், “2014ல் மறுபடியும் பாஜக அரசு அமைவதற்கு, அமைப்புரீதியாகவும் சீரான வேகத்திலும் உழைக்கும் ஐ.மு.கூட்டணி அரசுக்கு நாம் மிகவும் நன்றி செலுத்த வேண்டும்,” என்று. இந்த அரசு போல் முன்னிருந்த எந்த அரசும் லஞ்சம் மற்றும் ஊழல்கள் புரிந்ததில்லை. ஊழலை முக்கிய குணாதிசயமாக கொண்ட இந்த அரசை வெகு சீக்கிரத்தில் தூக்கியெறிய மக்கள் ஆவலுடன் எதிர்பார்த்திருக்கிறார்கள்.

1951ல் பிறந்து, ஜனசங்கமாக இருந்து இன்று பாஜகவாக செயல்படும் நம் கட்சி 63 ஆண்டுகளாக நிலைத்து நிற்கிறது. அற்பணிப்பும் திறமையும் கொண்ட செயல்வீரர்களின் உழைப்பு, இந்திய அரசியலில் இன்று பாஜகவுக்கு தனி இடம் கிடைக்க வைத்துள்ளது.

அதில் முக்கிய நான்கு முன்னோடிகளை நான் குறிப்பிட வேண்டுமென்றால்,தீன்தயாள் உபாத்யாய, நானாஜி தேஷ்முக், அடல் பிஹாரி வாஜ்பாயி மற்றும் குஷாபாவ் தாக்கரே ஆகியோரை தான் உதாரண புருஷர்களாக நான் குறிப்பிட விரும்புகிறேன்,

நன்றி; ஸ்ரீ.L.K.அத்வானி

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.

குழந்தை வளர்ப்பு முறை

குழந்தை பிறந்த மூன்றாம் நாள் ஒரு சொட்டு விளக்கெண்ணெயை உள்ளங்கையில் விட்டு, சிறிது ...