குருவைக் கொண்டாடுவோம்

 ஆசிரியர்களைப் பெருமை படுத்துவதே குருவைக் கொண்டாடுவோம் எனப் பொருள்தரும் 'குரு உத்சவ்' என்பதன் நோக்கம் என்று தமிழக பாஜக தலைவர் தமிழிசை சவுந்தர ராஜன் தெரிவித்துள்ளார்..

ஆசிரியர் தினத்தையொட்டி அவர் வெளியிட்டுள்ள வாழ்த்துச்செய்தியில், "மாதா, பிதா, குரு, தெய்வம் என்று குருவை கொண்டாடி மகிழ்கிறோம் தமிழ் நாட்டில். அதற்கேற்ப சிறந்த ஆசிரியராகவும், ஆட்சியாளராகவும் இருந்த முன்னாள் குடியரசுத் தலைவர் டாக்டர். சர்வபள்ளி ராதாகிருஷ்ணன் பிறந்த நாளை ஆசிரியர் தினமாக கொண்டாடுகிறோம்.

நல்ல குடிமக்களை உருவாக்குவதில் பெரும் பங்கு வகிக்கும் ஆசிரியர்களின் தியாகத்தைப் போற்றுவோம். இதைத் தான் மத்திய அரசு 'குரு உத்சவ்', அதாவது 'குருவைக் கொண்டாடுவோம்' என்கிறது. ஆனால், அதையும் அரசியலாக்கி, எது அவசியம் எது அரசியல் என்றில்லாமல் இங்கே சிலர் விமர்சித்து கொண்டிருந்தாலும், நோக்கம் ஆசிரிய பெருமக்களை பெருமைப் படுத்துவதே ஆகும்.

ஆசிரியப் பணி, இறைப் பணிக்கு நிகரானது. அத்தகைய உன்னத பணியில் ஈடுபட்டிருக்கும் ஆசிரியர் பெருந்தகைகளுக்கும், அவர்களால் அறிவொளிபெறும் மாணவச் செல்வங்களுக்கும் உள்ளம்கனிந்த ஆசிரியர் தின நல்வாழ்த்துகளை பாஜக சார்பில் தெரிவித்து கொள்கிறேன்" என்று தமிழிசை சவுந்தரராஜன் கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வெண் தாமரைப் பூ

இதய நோய் இந்த இதழ்களைச் சாப்பிடுவதால் இருதய நோய்கள் நீங்கும். தொடர்ந்து சாப்பிட ஆண்மை ...

எட்டியின் மருத்துவ குணம்

எட்டிமரம் - புங்க மரம் போல் தோற்றமளிக்கும். ஆனால் இதில் ஆரஞ்சுப்பழ நிறத்தில் ...

தர்ப்பூசணியின் மருத்துவக் குணம்

வயிறு எரிச்சல், அடிவயிற்றுக் கோளாறுகளை உடனடியாகச் சரி செய்யும். சிறுநீரகக் கோளாறுகளையும், சிறுநீர்ப்பைக் ...