இந்தியா மீண்டும் எழுச்சி பெற புதுமையான முயற்சிகளை முன்னெடுத்துச் செல்லவேண்டும்

 இந்தியா மீண்டும் எழுச்சி பெற புதுமையான யோசனைகளையும், அதுதொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துச் செல்லவேண்டும் என்று மத்திய நகர்ப்புற மேம்பாடு மற்றும் நாடாளுமன்ற விவகாரத் துறை அமைச்சர் வெங்கய்ய நாயுடு தெரிவித்துள்ளார் .

டெல்லியில் அகில இந்திய மேலாண்மை கூட்டமைப்பின் சார்பில் நேற்று நடை பெற்ற கருத்தரங்கில் வெங்கய்யநாயுடு பேசியதாவது: புதுமையான யோசனைகளையும், அது தொடர்பான முயற்சிகளையும் முன்னெடுத்துச் சென்றால் தான் இந்தியா எழுச்சிபெறும். வழக்கமாக இருக்கும் முறையை கடைப்பிடிப்பது இனிபலன்தராது. பண்டைய காலத்தில் அறிவுத்தளத்தில் இந்தியர்கள் பிறநாட்டினருக்கு முன்னோடிகளாக இருந்தனர். ஆனால், காலனியாதிக்கத்தி லிருந்து விடுபட்டபிறகு, தொழில் நுட்பத்துறையில் இந்தியாவின் மதிப்பு குறைந்தது.

உலகுக்கே வழிகாட்டிய நாம், அறிவியல் மற்றும் தொழில்நுட்பத்தில் பிறநாட்டினரை பின்பற்ற வேண்டிய நிலைக்குத் தள்ளப்பட்டோம்.

நாட்டில் மனிதவள ஆற்றல் அபரிமிதமாக உள்ளது. அதை சரியானமுறையில் நாம் பயன்படுத்த வேண்டும். இப்போது இந்திய விஞ்ஞானிகளுக்கு உலகெங்கும் வரவேற்பு உள்ளது. 1960-களிலும், 1970-களிலும் அமெரிக்கா, ஐரோப்பியா கண்டங்களுக்குச்சென்ற நம் நாட்டினர், அங்குள்ள தொழில் நுட்பம்சார்ந்த நிறுவனங்களில் முக்கிய பங்கு வகித்தனர்.

அமெரிக்க விண்வெளி ஆய்வு நிறுவனமான நாஸாவில் இந்திய வம்சாவளியை சேர்ந்த விஞ்ஞானிகள் பணி புரிகின்றனர். அதேபோன்று, கம்ப்யூட்டர், சுகாதாரம், மருந்துதயாரிப்பு, வணிக மேலாண்மை நிறுவனங்களில் இந்தியர்களின் பங்களிப்பு அதிகரித்துள்ளது.

எங்களுக்கு முன்பு இருந்த ஆட்சியாளர்களின் தவறான நிர்வாகத்தால் நாட்டில் நிதிப்பற்றாக் குறையும், வர்த்தகத் துறையில் பின்னடைவும் ஏற்பட்டது. அந்நிலையை நாங்கள் மாற்றி வருகிறோம் இவ்வாறு வெங்கய்ய நாயுடு கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

வயிற்றுப்புண் குணமாக

நன்கு முற்றிய வெண்பூசணிகாயை தோல் பகுதிகளை நீக்கி விட்டு, சதைப்பற்றை மட்டும் எடுத்து ...

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...