ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள்

 ஜவுளித் துறையை மேம்படுத்தும் நோக்குடன் புதியதிட்டங்கள் அறிமுகப்படுத்தப்படும் என்று மத்திய ஜவுளித்துறை இணை அமைச்சர் சந்தோஷ் குமார் கங்குவார் தெரிவித்துள்ளார் .

தில்லியில் புதன்கிழமை நடைபெற்ற மாநில ஜவுளித்துறை அமைச்சர்களின் வருடாந்திர மாநாட்டுக்கு தலைமைவகித்து அவர் பேசியதாவது: ஜவுளித் துறையை மேம்படுத்த மத்திய, மாநில அரசுகள் ஒருங்கிணைந்து பணியாற்ற வேண்டும்.

ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள ஜவுளிவளங்களைக் கண்டறிந்து அதன் தயாரிப்பு, ஏற்றுமதி நடவடிக்கைகளை ஊக்குவிக்க வேண்டும்.

பிரதமரின் "அனைவரின் வளர்ச்சியும் அவரவர் கையில்', "திறன், மதிப்பீடு, வேகம்', "இந்தியாவில் உருவாக்குவோம்', "சுற்றுச் சூழலுக்கு கோளாறும் இல்லை; விளைவுகளும் இல்லை' ஆகியசிந்தனையை மனதில் கொண்டு இப்பணியை நாம் மேற்கொள்ளவேண்டும்.

இதைக் கருத்தில்கொண்டு சிறு தொழிற்சாலைகள் வளர்ச்சிவங்கி உதவியுடன் ரூ.35 கோடி அளவுக்கு "ஜவுளி முதலீடு நிதியம்' உருவாக்க மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. இந்த நிதி வரும்காலங்களில் படிப்படியாக அதிகரிக்கப்படும். கைத்தறி தயாரிப்புகளின் விநியோக நடவடிக்கைகளை மேம்படுத்துவதற்காக "ஃபிலிப்கார்ட்' இணைய தளம் மூலம் ஆன்லைன் விற்பனைக்கான சேவையை தொடங்கவுள்ளோம். கூட்டுறவு சங்கங்கள், கைத்தறி சங்கங்கள் ஆகியவற்றின் சேவையை மத்திய சுற்றுலாத்துறையுடன் ஒருங்கிணைத்து விற்பனையை ஊக்குவிக்கவும் திட்டமிட்டுள்ளோம்.

இதன் ஒருபகுதியாக நெசவாளர்கள் அதிகம் வசிக்கும் கிராமத்தை "மாதிரி கிராமம்' ஆக மாற்றும் திட்டத்தை தயாரித்துவருகிறோம்' என்றார் சந்தோஷ் குமார் கங்குவார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

ஓமம் ஒப்பற்ற ஒரு மருந்தாகும்

குளிர்ச்சியின் காரணத்தால் ஏற்படும் சுரம், இருமல், அஜீரணத்தால் ஏற்படும் தொல்லைகள், வயிற்று உப்பிசம், ...

தியானம் செய்யும் நேரம்

முதன் முதலில் தியானம் கற்பவர்கள், நேரத்தைத் தேர்வு செய்வதில் கவனம் செலுத்த வேண்டும். ...

தேனின் மருத்துவ குணங்கள்

தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ...