இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவர்நலனில் ஒருவர் அக்கறை கொண்டு பல வெற்றிகளை கண்டுள்ளோம்

 ஐந்து நாள் அரசு முறைப்பயணமாக அமெரிக்கா சென்றடைந்த பிரதமர் நரேந்திர மோடிக்கு நியூயார்க்கின் கென்னடி விமான நிலையத்தில் சிறப்பான வரவேற்பு தரப்பட்டது.

இதனிடையே, அமெரிக்காவிலிருந்து வெளியாகும் "வால் ஸ்ட்ரீட்' பத்திரிகையில் மோடி எழுதியுள்ள கட்டுரை வெளியானது. அதில் கூறப்பட்டுள்ளதாவது:

அமெரிக்காவில் செழிப்பாகவாழும் அமெரிக்கவாழ் இந்திய சமூகம், இந்திய-அமெரிக்க கூட்டு பங்களிப்புக்கு சிறந்த உதாரணமாக விளங்குகிறது. இந்தியாவும், அமெரிக்காவும் ஒருவர்நலனில் ஒருவர் அக்கறை கொண்டதன் மூலமாக, இருநாடுகளும் பல வெற்றிகளை கண்டுள்ளோம்.

ஆசிய, பசிபிக் பகுதிகளில் அமைதி, பாதுகாப்பு, ஸ்திரத்தன்மை, தீவிரவாதத்தை ஒழித்தல், கடல்பகுதிகளை பாதுகாத்தல், இணையதள குற்றத்தடுப்பு, விண்வெளி ஆராய்ச்சி என பல்வேறு அம்சங்களில் இருநாடுகளும் வலிமை பெற்றுள்ளன.

இந்தியா, அமெரிக்கா ஆகிய இருநாடுகளின் வலிமையை பயன் படுத்தி உலகளாவிய வளர்ச்சியை ஏற்படுத்த முடியும். உலகளாவிய பிரச்னைகளை எதிர்கொள்வதற்கு சர்வதேச அளவில் மேலும் பல முயற்சிகளில் இரு நாடுகளும் ஈடுபடமுடியும்.

இன்றைய மின்னணு யுகத்தில், தகவல் தொழில்நுட்பத் துறையில் இருநாடுகளும் கொண்டுள்ள வலிமை, மக்களை வழிநடத்துவதற்கு முக்கியப்பங்கு வகிக்கிறது.

கல்வி, புதிய கண்டுபிடிப்புகள், அறிவியல், தொழில்நுட்பம் உள்ளிட்ட துறைகளில் இந்தியாவுக்கு அமெரிக்கா உந்துசக்தியாக விளங்குகிறது என்று அந்த கட்டுரையில் மோடி கூறியுள்ளார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

செங்கோல் என்ன செய்யும்?

செங்கோல் என்ன செய்யும்? கொடுங்கோன்மை' என்ற சொல்லுக்கு மாற்றாக 'செங்கோன்மை' என்ற சொல்லை ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக ...

ஆனந்த் பவனில் ‘வாக்கிங் ஸ்டிக்’காக இருந்ததை வெளிக்கொண்டு வந்துள்ளோம் புதிய பார்லிமென்டில் நிறுவப்பட உள்ள செங்கோல் பிரதமர் நரேந்திர ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட் ...

மோடி கைபட்டால் குற்றம், கால்பட்டால் குற்றம் பாரத பிரதமர் நரேந்திர மோடியின் கனவு திட்டங்களில் ஒன்று ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தி ...

கர்நாடக தேர்தல் முடிவு தேசத்தின் மனோநிலை ஆகாது நடந்து முடிந்த கர்நாடக மாநில சட்டமன்ற   தேர்தலில் காங்கிரஸ் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத் ...

ரூ.1.31 லட்சம் கோடி: திமுகவின் சொத்து பட்டியலை வெளியிட்டார் அண்ணாமலை! தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை இன்று ஆளும் தி.மு.க., ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவே ...

நமது ஆட்சிமுறையும் சுவாமி விவேகானந்தரால் ஈர்க்கப்பட்டதுதான் ஸ்ரீ இராமகிருஷ்ண பரமஹம்சா, மாதா ஸ்ரீ சாரதா தேவி ...

மருத்துவ செய்திகள்

தலை முடி உதிர்வதை தடுக்க குறிப்புகள்

முடி அதிகம் கொட்டினால் உணவில் அதிகம் முருங்கைகீரைக்கு அதிகம் இடம் கொடுங்கள்.இரும்பு சத்து ...

ரோஜாப் பூவின் மருத்துவக் குணம்

ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ...

கீரையின் மருத்துவ குணம்

கீரைகளில் உப்புச் சத்துக்களும், உலோகச் சத்துக்களும், வைட்டமின் என்னும் உயிர்ச் சத்துக்களும் உள்ளன. ...