ஜி 20 மாநாட்டில் மோடி- இன் உரை

தொழில்நுட்பத்தை ஆக்கப்பூர்வமானதாக ஆக்குங்கள் என்றும்; அழிவுகரமானதாக அல்ல என்றும் ஜி7 உச்சி மாநாட்டில் பிரதமர் மோடி உரையாற்றியுள்ளார்.

பின்னர் அமெரிக்க அதிபர் ஜோ பைடனுடன் உலகத் தலைவர்களுடன் குழு புகைப்படம் எடுத்துக்கொண்டார்.

‘’ ஜோ பைடன்  சந்திப்பது எப்போதும் மகிழ்ச்சி அளிக்கிறது. உலகளாவிய நன்மைக்காக இந்தியாவும் அமெரிக்காவும் தொடர்ந்து ஒன்றிணைந்து செயல்படும்” என்று பிரதமர் மோடி, தனது எக்ஸ் தளப் பதிவில் தெரிவித்து இருந்தார்.

ஜி 7 உச்சிமாநாட்டில் பிரதமர் மோடி பேசியதாவது:

ஜி 7 உச்சிமாநாட்டின் புரவலரான இத்தாலியால் அழைக்கப்பட்ட 12 நாடுகள் மற்றும் ஐந்து சர்வதேச அமைப்புகளில் இந்தியாவும் ஒன்றாகும். செயற்கை நுண்ணறிவு மற்றும் எரிசக்தி ஆகியவற்றில் கவனம் செலுத்துவதால், கிடைக்கும் நன்மை, அணுகல், மலிவு மற்றும் ஏற்றுக்கொள்ளும் தன்மை ஆகிய நான்கு கொள்கைகளை பிரதமர் மோடி இந்த மாநாட்டில் எடுத்துரைத்தார்.

2,600-க்கும் மேற்பட்ட அரசியல் கட்சிகள், ஒரு மில்லியனுக்கும் அதிகமான வாக்குச் சாவடிகள், ஐந்து மில்லியனுக்கும் அதிகமான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள், 15 மில்லியனுக்கும் அதிகமான வாக்குச்சாவடி ஊழியர்கள் மற்றும் 640 மில்லியன் வாக்காளர்கள் தங்கள் வாக்குரிமையைப் பயன்படுத்திய இந்திய தேர்தல்களின் அளவை பிரதமர் மோடி  அங்கு எடுத்துரைத்தார்.

நியாயமாக நடந்த தேர்தல் என்று பேசிய பிரதமர் மோடி:

பிரதமர் மோடி,, ‘’தொழில்நுட்பத்தின் நிறைந்த பயன்பாட்டால் முழு தேர்தல் செயல்முறையும் நியாயமாகவும் வெளிப்படையாகவும் செய்யப்பட்டுள்ளது. இது உலகின் மற்றும் மனிதகுல வரலாற்றில் மிகப்பெரிய ஜனநாயக திருவிழா. தொடர்ந்து மூன்றாவது முறையாக அவர்களுக்கு சேவை செய்ய இந்திய மக்கள் எனக்கு வாய்ப்பளித்திருப்பது எனது அதிர்ஷ்டம்” என்று அவர் கூறினார்.

’’கடந்த ஆண்டு ஜி 20 தலைமையின்போது செயற்கை நுண்ணறிவில் சர்வதேச ஆளுகையின் முக்கியத்துவத்தை இந்தியா வலியுறுத்தியது. மேலும் செயற்கை நுண்ணறிவை வெளிப்படையான மற்றும் பொறுப்பானதாக மாற்ற எதிர்காலத்தில் அனைத்து நாடுகளுடனும் தொடர்ந்து பணியாற்றும்’’ என்று பிரதமர் மோடி கூறினார்.

“எல்லோரும் தங்கள் தாயை நேசிக்கிறார்கள். இந்த உணர்வுடன், மரம் நடுதலை தனிப்பட்ட தொடர்பு மற்றும் உலகளாவிய பொறுப்புடன் கூடிய மக்கள் இயக்கமாக மாற்ற நாங்கள் விரும்புகிறோம். அதில் அனைவரும் இணைய வேண்டும் என்று கேட்டுக் கொள்கிறேன்

2047ஆம் ஆண்டுக்குள் சமூகத்தின் எந்தவொரு பிரிவினரும் பின்தங்கிவிடக்கூடாது என்ற அர்ப்பணிப்பு சர்வதேச ஒத்துழைப்பிலும் முக்கியமானது. உலகளாவிய நிச்சயமற்ற தன்மை மற்றும் பதற்றங்களின் சுமையைத் தாங்குகின்றன. உலகளாவிய தெற்கில் உள்ள நாடுகளின் முன்னுரிமைகள் மற்றும் கவலைகளை உலக அரங்கில் வைப்பது தனது பொறுப்பு என்று இந்தியா கருதுகிறது”என்று அவர் கூறினார்.

இந்த முயற்சிகளில், ஆப்பிரிக்காவுக்கு இந்தியா உயர் முன்னுரிமை அளித்து வருவதுடன், ஆப்பிரிக்காவில் உள்ள அனைத்து நாடுகளின் சமூக-பொருளாதார வளர்ச்சி, நிலைத்தன்மை மற்றும் பாதுகாப்புக்கு பங்களிப்பு செய்து வருகிறது.

உச்சிமாநாட்டிற்கு தன்னை அழைத்ததற்காக இத்தாலி பிரதமர் மெலோனிக்கு, பிரதமர் மோடி நன்றி தெரிவித்ததோடு, ஜெர்மன் சான்சலர் ஓலாஃப் ஷோல்ஸுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளையும் தெரிவித்தார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்க ...

பக்திக்கு எல்லை இல்லை ! தலைவர்களை வரவேற்போம்!! தமிழக மக்களிடம் முருக பக்தர்கள் மாநாட்டிற்கான ஆதரவு பல்கி ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தம ...

மாம்பழ விவசாயிகளை வதைக்கும் தமிழக அரசு: நயினார் நகேந்திரன் குற்றச்சாட்டு மாம்பழ விவசாயிகள் வயிற்றில் அடிக்காமல், கொள்முதல் விலையை உயர்த்த ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்கா ...

முருக பக்தர்கள் மாநாடு அருட்காட்சிக்கு அறுபடை வீடுகளில் இருந்து வந்த வேல் மதுரை, வண்டியூர் டோல் கேட் அருகே ஜூன், 22ல் ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவ ...

பயங்கரவாதத்தின் புகலிடமாக கோவை மாறிவருவது ஏன்: நயினார் நாகேந்திரன் கேள்வி கோவை பயங்கரவாதத்தின் புகலிடமாக மாறிவருவது ஏன்? என தமிழக ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள் ...

கோவில் சிலைகள் பாதுகாப்பு கேள்விக்குறியானது ஏன்? – நயினார் நாகேந்திரன் கோவை சின்னியம்பாளையத்தில் பிளேக் மாரியம்மன் கோவில் சிலைகளை, மர்ம ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசா ...

காவலர்களுக்கு பதவி உயர்வு அரசாணை: முதல்வருக்கு நயினார் நகேந்திரன் வலியுறுத்தல் 2011-ஆம் ஆண்டுக்கு முன்பு பணியில் சேர்ந்த காவலர்களுக்கு, சிறப்பு ...

மருத்துவ செய்திகள்

இதய நோயாளிகளுக்கு உணவு முறைகள்

இவர்கள் தினமும் ஒரு கிலோ எடைக்கு ஒரு கிராம் விதம் உணவு உட்கொள்ள ...

பப்பாளியின் மருத்துவக் குணம்

கல்லீரல் கோளாறுகளுக்கு பப்பாளி மருத்துவரீதியாக உதவி செய்யும். முறையான மாதவிலக்கு ஒழுங்குக்கு பப்பாளி ...

அறுசுவை உணவின் பயன்

உணவில் சிறந்தது அறுசுவை உணவாகும். சுவைகள் ஆறு வகைப்படும். கசப்பு, துவர்ப்பு, இனிப்பு, ...