அதிமுக.வினர் மீது மக்களிடமிருந்த அனுதாபம் போய் விட்டது

 தமிழகத்தில் அதிமுக.வினர் நடத்திய சில போராட்டங்களால் மக்களிடமிருந்த அனுதாபம் போய்விட்டது. அ.தி.மு.க.வினர் செய்வதை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்துவருவதால் அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலைதான் உருவாகியுள்ளது என்று பா.ஜ.க.,வின் மூத்த தலைவர் இல.கணேசன் கூறியுள்ளார்.

ஈரோடு மாவட்டம் கோபியில் இன்று செய்தியாளர்களிடம் பேசிய இல கணேசன் கூறியதாவது: சொத்து குவிப்புவழக்கில் அதிமுக. பொதுச்செயலாளர் ஜெயலலிதா தண்டனைபெற்று சிறையில் இருந்துவருகிறார். இது வருத்த மளிக்கிறது. ஆனால் இந்தவழக்கு 18 ஆண்டுகளாக நடந்து தண்டனை கொடுக்கப்பட்டதால் தமிழகமக்களிடம் ஒரு அனுதாபம் இருந்தது.

அதே நேரத்தில் தமிழகத்தில் அ.தி.மு.க.வினர் நடத்திய சில போராட்டங்களால் மக்களிடம் இருந்த அனுதாபம் போய்விட்டது. சட்டம்-ஒழுங்கை காப்பாற்றுவது அ.தி.மு.க. அரசுதான். தற்போது அ.தி.மு.க.வினர் செய்வதை போலீசார் கைகட்டி வேடிக்கை பார்த்து வருகிறார்கள். இதனால் அ.தி.மு.க.வுக்கு எதிர்ப்பு அலைதான் உருவாகும். அனுதாபம் உருவாகாது.

கர்நாடக அரசு இந்த சொத்துகுவிப்பு வழக்கை நாங்கள் நடத்துகிறோம் என்று கேட்டு பெறவில்லை. இங்கிருந்துதான் கர்நாடக மாநிலத்துக்கு வழக்கு மாற்றப்பட்டுள்ளது. தமிழகத்தில் சில அதிமுக.வினர், கர்நாடக மக்களை பற்றிபேசுவதையும், சுவரொட்டி மூலம் சித்தரித்து வருவதையும் பா.ஜ.க கண்டிக்கிறது.

இந்தசெயலில் ஈடுபடுவோர் மீது இந்த அரசு நடவடிக்கை எடுக்கவேண்டும். ஆனால் தொடர்ந்து அதிமுக.வினர் இது போன்ற போராட்ட செயல்களில் ஈடுபட்டால் மக்களிடம் மதிப்பை இழப்பார்கள். இலங்கை பிரச்சினையில் பாஜக அரசு சரியாக செயல் பட்டு வருகிறது. காங்கிரஸ் ஆட்சியில்தான் தமிழக மீனவர்கள், இலங்கை கடற்படையினரால் சிறை பிடிக்கப்பட்டு, சித்ரவதை செய்யப்பட்டு கொல்லப் பட்டனர். பாஜக ஆட்சியில் சிறைபிடிக்கப்பட்ட தமிழக மீனவர்கள் 7 நாட்களில் விடுதலை செய்யப்பட்டு வருகிறார்கள். மீனவர் பிரச்சினை என்பது தொழில்ரீதியான பிரச்சினை ஆகும். இதனால் நாங்கள் மீனவர் பிரச்சினை குறித்து பேசிகொண்டு இருக்கிறோம். விரைவில் இதற்கு சுமூகதீர்வு கிடைக்கும் என்றும் இல.கணேசன் கூறினார்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

சித்த மருத்துவம்

சித்தர்களுக்கு சாதி, மதம், இனம், மொழி, தேசம் என்ற பாகுபாடு இல்லை. அகத்தியர், ...

இம்பூறல் மூலிகையின் மருத்துவக் குணம்

இம்பூறல் என்னும் இந்த மூலிகையை 'இம்புறா' என்றும் அழைப்பார்கள். சாதாரணமாகத் தோட்டங்களில் நன்கு ...

ஆண்மையை அதிகமாக்கும் வழிகள்

அரைக்கீரை 100 கிராம் –மிளகு 10 கிராம், கொத்தமல்லி இலை 50 கிராம், ...