பட்னாவிஸ் இன்று புதிய முதல்வராக பதவி ஏற்கிறார்

 மராட்டியத்தில் முதல் முறையாக பாஜக அரசு அமைய உள்ள நிலையில், பாஜக.,வை சேர்ந்த 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் இன்று புதிய முதல்வராக பதவி ஏற்கிறார். இந்த விழாவில் பிரதமர் , அமித்ஷா, அத்வானி உள்ளிட்ட தலைவர்கள் பங்கேற்கிறார்கள்.

288 தொகுதிகளை கொண்ட மராட்டிய சட்ட சபைக்கு கடந்த 15ந் தேதி தேர்தல் நடந்தது. இந்ததேர்தலில் பா.ஜ.க 122 தொகுதிகளை பெற்று தனிப் பெரும் கட்சியாக திகழ்கிறது. ஆனால் ஆட்சியமைக்க 145 இடங்கள் தேவை என்பதால், கூட்டணி ஆட்சி அமைக்க தனது பழைய நட்புகட்சியான சிவ சேனாவுடன் நடந்து வரும் பேச்சுவார்த்தையில், இதுவரை உடன்பாடு ஏற்படவில்லை. இதனால் பா.ஜனதா தனித்து அரசை அமைக்க முன்வந்தது. பாஜக சார்பில் முதல்-மந்திரியாக நாக்பூரை சேர்ந்த 44 வயது தேவேந்திர பட்னாவிஸ் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

இந்நிலையில் முதல்-மந்திரி பதவி ஏற்புவிழா இன்று (வெள்ளிக்கிழமை) மாலை 4.30 மணிக்கு மும்பை வான்கடே மைதானத்தில் கோலா கலமாக நடைபெற உள்ளது. மராட்டிய அரசியல் வரலாற்றில் 1995-ம் ஆண்டு சிவசேனா – பா.ஜ.க இணைந்து , காங்கிரஸ் அல்லாத கூட்டணி அரசை அமைத்தன. அப்போது சிவசேனா தலைமையில் அந்த அரசு அமைந்தது. ஆனால் தற்போது முதல் முறையாக பா.ஜ.க ஆட்சி அமைக்கிறது. இது மராட்டியத்தில் காங்கிரஸ் அல்லாத 2வது அரசு ஆகும்.

சிவசேனாவுடன் கூட்டணி உடன்பாடு ஏற்படாததால், பதவி ஏற்புவிழாவில் அக்கட்சி சார்பில் யாரும் மந்திரியாக பதவி ஏற்க வாய்ப் பில்லை என்று பா.ஜ.க பொதுச் செயலாளர் ராஜீவ் பிரதாப்ரூடி நிருபர்களிடம் தெரிவித்தார். வரும் நாட்களில் அரசில் சிவ சேனா பங்கேற்கும் என்று பா.ஜ.க நம்புகிறது. அப்போது மந்திரி சபையை முழுமையான அளவில் விரிவாக்கம்செய்ய அக்கட்சி திட்டமிட்டு உள்ளது.

பதவி ஏற்புவிழா பிரமாண்டமாக நடைபெறுகிறது. இதற்காக வான்கடே கிரிக்கெட் மைதானம் விழாக் கோலம் பூண்டுள்ளது. விழாவில் பிரதமர் நரேந்திர மோடி, பா.ஜ.க தலைவர் அமித்ஷா, மூத்த தலைவர் எல்.கே. அத்வானி, ஆர்.எஸ்.எஸ். தலைவர் மோகன்பகவத் மற்றும் பல மத்திய மந்திரிகள், பா.ஜனதா ஆளும் முதல்-மந்திரிகள், இந்தி திரைப்பட நட்சத்திரங்கள், பிரபல தொழில் அதிபர்கள் பங்கேற்கிறார்கள். 5 ஆயிரம் பேருக்கு சிறப்பு இருக்கைகள் ஒதுக்கப்பட்டுள்ளன. மேலும் 30 ஆயிரம் பேருக்கு அழைப்பிதழ்கள் அனுப்பப்பட்டு உள்ளன.

வான்கடே மைதானம் போலீஸ் பாதுகாப்பு வளைய த்துக்குள் கொண்டு வரப்பட்டுள்ளது. அங்கு பாதுகாப்பு பணியில் 2,500 போலீசார் ஈடுபடுத்தப்பட உள்ளனர். பாதுகாப்பு ஏற்பாடுகள் குறித்து மும்பை மாநகரபோலீஸ் கமிஷனர் ராகேஷ் மரியா வான்கடே கிரிக்கெட் மைதானத்தில் ஆய்வுபணியை மேற்கொண்டார். முக்கிய பிரமுகர்கள் விழாவில் கலந்து கொள்வதால், மைதானத்தில் வெடிகுண்டு நிபுணர்கள் தீவிரமாக சோதனை நடத்தி வருகிறார்கள். மோப்பநாய்களும் இந்த பணியில் ஈடுபடுத்தப்பட்டு வருகின்றன. மும்பை நகரின் எல்லைப் பகுதியில் போலீசார் தடுப்பு வேலிகளை அமைத்து இரவு&பகலாக தீவிர வாகன சோதனையில் ஈடுபட்டு வருகிறார்கள்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கோழிக்கறியின் மருத்துவக் குணம்

சேவல் இறைச்சி அதிக சூடு உண்டாக்கும். அன்றியும் தாது நஷ்டம் உண்டாகும். ஆகையால் ...

மூலிகை பற்பொடி தயாரிக்கும் முறைகள்

1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ...

காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் ...