பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கமே நிதீஷ்குமார் எங்களை விட்டு விலகக் காரணம்

 பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கம் காரணமாகவே நிதீஷ்குமார் எங்கள் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார் என்று பாஜக தேசியத் தலைவர் அமித் ஷா தெரிவித்தார்.

இது தெடார்பாக பிகார் மாநிலம், பாட்னாவில் செய்தியாளர்களிடம் கூறியதாவது:

ஒருகாலத்தில் லாலு பிரசாத்தும், நிதீஷ் குமாரும் கூட்டாக காங்கிரûஸ எதிர்த்தனர். பின்னர், பாஜக.,வுடன் அணி சேர்ந்த நிதீஷ் குமார் 17 ஆண்டுகளாக லாலுவை எதிர்த்து வந்தார். தற்போது அவர்கள் அனைவரும் கைகோக்கின்றனர். எனவே தான் இவர்கள் அனைவரும் இணைந்து ஜனதா கட்சியை உருவாக்க முற்படுவதை நேர்மையற்ற நடவடிக்கை என்று கூறுகிறேன்.

ஜனதா கட்சிகள் இணைவதை பற்றி எங்கள் கட்சி கொஞ்சமும் கவலைப்பட வில்லை. ஏனெனில் மக்கள் அவர்களை, எதிர்வரும் பிகார்பேரவை தேர்தலில் நிராகரிப்பார்கள். முதல்வர் பதவியில் இருந்து ஜிதன் ராம் மாஞ்சி நீக்கப்பட்டால், அப்போது அவருக்கு ஆதரவு அளிப்பதை பொருத்த வரை, அப்படிப்பட்ட சூழல் ஏற்பட்டால் அது குறித்துப் பரிசீலிப்போம்.

இந்த ஆண்டு நடைபெற உள்ள பிகார் சட்டப்பேரவைத் தேர்தலில் மொத்தமுள்ள 243 இடங்களில் எங்கள் கட்சி 185க்கும் மேற்பட்ட இடங்களில் வெற்றிபெற்று, ஆட்சி அமைக்கும். இத்தேர்தலில் யாரையாவது முதல்வர் வேட்பாளராக அறிவிக்கவேண்டுமா என்பது குறித்து கட்சியின் ஆட்சிமன்ற குழு முடிவுசெய்யும்.

பிகாருக்கு சிறப்பு அந்தஸ்து வழக்கப்படும் விவகாரத்தை பொருத்த வரை, பிகாரில் ஒரு நல்ல அரசு அமையும் போது அனைத்தும் வழங்கப்படும். நரேந்திர மோடி அரசு என்பது ஐந்து ஆண்டுகளுக்கானதே தவிர சில மாதங்களுக்கானது அல்ல. எனினும், பிகாரில் மாநில அரசின் பதவிக் காலம் முடிவதற்கு முன்பே தேர்தல் நடத்தப்படுவதை பாஜக எப்போதும் விரும்பிய தில்லை. பிரதமராக வேண்டும் என்ற தனிப்பட்ட நோக்கம் காரணமாகவே நிதீஷ்குமார் எங்கள் கட்சியுடனான கூட்டணியை முறித்துக்கொண்டார்.

நிதீஷ்குமார் கட்சியுடனான கூட்டணியில் இருந்து பாஜக வெளியேறியபின்பு, பிகார் மீண்டும் காட்டாட்சிக்குத் திரும்பிவிட்டது. மாநிலத்தில் தேசிய ஜனநாயகக் கூட்டணி ஆட்சியில் இருந்த போது மாநிலம் வளர்ச்சியடைந்தது பாஜகவால் தான் என்பதை இது நிரூபித்துள்ளது.

பிகாரில் 75 லட்சம் உறுப்பினர்களையும், நாடுமுழுவதும் 10 கோடி உறுப்பினர்களையும் பாஜகவில் சேர்க்க வேண்டும் என்று இலக்கு நிர்ணயித்துள்ளேன் என்றார் அவர்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை எ ...

அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால் வெளிநாடு தப்பியது ஏன்: உதயநிதிக்கு நயினார் கேள்வி 'அமலாக்கத்துறை மீது பயம் இல்லை என்றால், ஆகாஷ், ரத்தீஷ் ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக � ...

மாநிலங்களவைத் தேர்தலில் தமிழக பாஜக நிலைப்பாடு: நயினார் நாகேந்திரன் விளக்கம் “மாநிலங்களவைத் தேர்தல் விவகாரத்தில் கட்சித் தலைமை எடுக்கும் முடிவின்படி ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுந ...

பிரதமர் நரேந்திர மோடி நாளை மறுநாள் பீகார் பயணம் இந்தியா- நேபாளம் எல்லையில் பீகார் பகுதியில் இந்திய வான் ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற� ...

சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு உத்வேகம் அளிக்கிறது: பிரதமர் மோடி சுதந்திரப் போராட்ட வீரர் வீர சாவர்க்கரின் தியாகம் தேசத்திற்கு ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதம� ...

7 லட்ச நபர்களுக்கு TB நோய்… பிரதமர் மோடி வழங்கிய தகவல்களும் அறிவுரை முக்கியமான ஒரு ஆய்வு சந்திப்பின்போது, பிரதமர் நரேந்திர மோடி ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்� ...

பாகிஸ்தானின் போர் வியூகம் பயங்கரவாதம்: பிரதமர் மோடி பயங்கரவாதத்தை மறைமுகப் போா் என்பதையும் கடந்து, நன்கு திட்டமிட்ட ...

மருத்துவ செய்திகள்

உலகமயமாகும் இந்திய மூலிகைகள்!!!

உங்களுக்குத் தெரியுமா? அலோபதி மருத்துவம் என்பது மேல்நாடுகளில் இருந்து இறக்குமதியான மருத்துவமுறை.இந்த மருத்துவமுறையின் ...

முருங்கையின் மருத்துவக் குணம்

மலமிளக்கியாகவும் சிறுநீர் பெருக்கியாகவும் காமம் பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும் செயல்படுகிறது.

மலச்சிக்கல் நீங்க உணவு முறைகள்

புரோட்டீன் தினமும் இவர்கள் ஒரு கிலோ எடைக்கு 1கிராம் வீதம் புரோட்டீன் உணவைச் சாப்பிடலாம்.