சவாலான சூழலில் நேபாளத்தில் இருந்து 1935 பேர் மீட்பு

 நேபாளத்தில் நேற்று முன்தினம் காலை சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டது. இது ரிக்டர் அளவு கோலில் 7.9 ஆக பதிவானது. இதில், பல்வேறு கட்டிடங்கள் இடிந்து தரைமட்டமாயின.

குறிப்பாக, தலைநகர் காத் மாண்டுவில் 12-ம் நூற்றாண்டு முதல் 18-ம் நூற்றாண்டு வரையிலான காலத்தில் கட்டப்பட்ட பல்வேறு கோயில்கள் மற்றும் நினைவுச் சின்னங்கள் இடிந்து விழுந்தன.

தர்பார் சதுக்கத்தில் சுற்றுலாப் பயணிகளை மிகவும் கவரும் வகையில், 9 தளங்கள் மற்றும் 200 சுருள் வளைவு படிக்கட்டுகளைக் கொண்டிருந்த தரஹரா கோபுரமும் இடிந்து விழுந்தன.

நிலநடுக்கம் ஏற்பட்ட சில மணி நேரங்களிலேயே மீட்புப்பணியில் இந்திய விமானப்படை முழு வீச்சில் இறங்கியது. ஆபரேஷன் மைத்ரி என்று பெயரிடப்பட்ட மீட்பு நடவடிக்கை கடுமையான சவால்களுக்கு இடையே நடந்துவருகிறது. இமாலயத்தில் ஏற்பட்ட நிலநடுக்கம் புவியியல் ரீதியில் மிட்புப்பணிகளை மிகவும் சவாலானதாக மாற்றியுள்ளது.

மீட்புப்பணிகள் குறித்து இந்திய விமானப் படை மற்றும் பாதுகாப்பு அமைச்சக வட்டாரம் அவ்வப்போதைய நிலவரத்தை ட்விட்டர் குறும்பதிவு தளத்தில் தெரிவித்துவருகிறது.

அதன்படி, நேபாளத்தில் சனிக் கிழமை அன்று நிலநடுக்கம் ஏற்பட்ட சிலமணி நேரத்தில் அதன் விளைவுகள் குறித்து யூகித்து அடுத்து 4 மணி நேரத்துக்குள் C-17 ரகவிமானம் 96 வீரர்களுடன் 15 டன் எடையில் நிவாரணப் பொருட்களுடன் புறப்பட்டு சென்றது. அடர்ந்த உயரிய மலை பிரதேசமான நேபாளத்தில், நில நடுக்கத்தால் ஏற்பட்ட பெரும் இடிபாடுகளில் சிக்கிய மக்களை கண்டறிவதே மிகப் பெரிய சவாலாக இருந்தது. இதற்காக மோப்பநாய்கள் மற்றும் அதிநவீன சென்சார் கருவிகள் பயன்படுத்தப் பட்டன.

அடுத்தகட்டமாக 24 மருத்துவ அதிகாரிகள் அடங்கிய அவசரக்குழு வினருடன் அடுத்தடுத்து 2 விமானங்கள் காத்மண்டு சென்றடைந்தன. இந்த முதற் கட்ட நடவடிக்கையில் 546 பேரை பேரிடர் மீட்புக்குழு மீட்டது. இதனைத் தொடர்ந்து பல்வேறு கட்டமாக நடந்த மீட்புப்பணியில் 1,935 பேர் இதுவரை மீட்கப்பட்டுள்ளனர். மீட்கப்பட்ட 1935 பேர் தாயகம் திரும்பினர்.

இந்திய விமானப்படையின் விமானங்கள் 10 விமான ங்களின் மூலம் 500 டெண்ட்டுகள், 14 டன் நூடுல்ஸ் பொட்டலங்கள், 100 ஸ்ட்ரெச்சர்கள், ஒருடன் மருந்துவ பொருட்கள் என உதவிப் பொருட்களை கொண்டு சென்றது. மீட்புப்பணீயில் இருக்கும் ஹெலிகாப்டர்களை சிறப்புக்குழு கண்காணித்து வழி நடத்தி வருகிறது.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

முருங்கை விதை | முருங்கை விதையின் மருத்துவ குணம்

முற்றிய முருங்கைக் காய் விதைகளை தனியாக எடுத்து அதை நன்றாக காய வைத்து ...

சர்க்கரை வியாதி

சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ...

பொடுதலையின் மருத்துவக் குணம்

பற்களுடைய இலைகளையும் மிகச்சிறிய வெண்ணிற மலர்களையும் உடைய தரையோடு படரும் சிறு செடி. ...