மத்தியப் பிரதேச அரசுக்கு கடும்நெருக்கடியை ஏற்படுத்தியுள்ள 'வியாபம்' மோசடி குறித்தும், இதில் தொடர்பு டையோர் மர்மமான முறையில் இறப்பது குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உயர்நீதிமன்றத்தை அணுகுவோம் என மத்தியப் பிரதேச முதல்வர் சிவராஜ்சிங் சவுகான் தெரிவித்தார்.
மத்தியப் பிரதேசத்தில் பல்வேறு நுழைவுத் தேர்வுகளை நடத்தும் மத்தியப்பிரதேச தொழில்கல்வி வாரியத்தில் (வியாபம்) கடந்த 2004ம் ஆண்டு முதல் நுழைவு தேர்வுகளில் பல்வேறு முறைகேடுகள் நடந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இந்நிலையில் இந்த மெகா மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்தனர்.
மாநில ஆளுநர் ராம்நரேஷ் யாதவின் மகன் சைலேஷ் யாதவ் உள்பட இந்த மோசடியில் தொடர்புடைய பலர் மர்மமான முறையில் இறந்தது அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இது வரை 47 பேர் இவ்வாறு இறந்துள்ளனர். இந்த அதிர்ச்சியில் இருந்து மத்திய பிரதேச மக்கள் மீளவில்லை. இந்த மெகாமோசடி குறித்தும், மர்ம மரணங்கள் குறித்தும் சிபிஐ விசாரணைக்கு உத்தரவிடவேண்டும் என்று காங்கிரஸ் உள்ளிட்ட கட்சிகள் கோரிக்கை விடுத்தன. ஜபல்பூர் உயர்நீதிமன்றம் மற்றும் உச்சநீதிமன்றத்தில் வழக்கு நடைபெற்று வருவதால், சிபிஐ விசாரணைக்கு மாநில அரசு உத்தரவிட முடியாது என்று அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது. இந்த நிலையில் தலைநகர் போபாலில் முதல்வர் சிவராஜ் சிங் சவுகான் நேற்று கூறியதாவது:
மக்களின் கோரிக்கையை ஏற்று, இந்தமோசடி வழக்கில் அரசின் தலையீடு எதுவும் இல்லை என்பதை நிரூபிக்கும் வகையில் சிபிஐ விசாரணை நடத்தப்பட வேண்டும். சி.பி.ஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தை அணுகுவோம். ஜனநாயக நாட்டில் மக்களின் கருத்து ஏற்றுக்கொள்ளப்பட வேண்டும். அவர்களுடைய உணர்வுகள் மதிக்கப்பட வேண்டும். அந்தவகையில் மக்களின் கோரிக்கை மற்றும் எதிர் பார்ப்புக்கு ஏற்ப வியாபம் மோசடி குறித்து சிபிஐ விசாரணைக்கு உத்தரவிட கோரி உயர் நீதிமன்றத்தை அணுக உள்ளோம். இவ்வாறு சவுகான் தெரிவித்தார். –
காய்ச்சல் அகற்றியாகவும், பசி உண்டாக்கியாகவும், தாது பலம் உண்டாக்கியாகவும் செயல்படுகிறது. |
வெள்ளரி காயை, தினசரி காலையில் எழுந்ததும் முகத்தில் தேய்த்துவர முகத்தில் அதிகமாக எண்ணெய் ... |
அகத்திக் கீரையைப் போல, அகத்திப் பூவும் மருத்துவத்தில் சிறந்த குணம் உடையது. |
Leave a Reply
You must be logged in to post a comment.