இந்தியாவின் 67-வது குடியரசுதினத்தை கொண்டாடும் விதமாக புதுடெல்லி ராஜபாதையில் குடியரசு தலைவர் பிரணாப் முகர்ஜி, 21 குண்டுகள் முழங்க தேசியக்கொடியை ஏற்றி வைத்தார். பின்னர், விழாவின் முக்கிய அம்சமான முப்படைவீரர்களின் அணிவகுப்பு தொடங்கியது.
இந்த அணிவகுப்பில் நாட்டின் வலிமையை பறைசாற்றும் ஆயுதங்களான பீஷ்மாபீரங்கி, பிரமோஸ் ஏவுகணை, ஆகாஸ் ஏவுகணை வாகனங்கள் அணி வகுந்து வந்தன. இதைத்தொடர்ந்து, பாராசூட் ரெஜிமென்ட் படைப்பிரிவினர், காலாட்படை வீரர்கள், விமானப்படை வீரர்கள், கப்பற்படை வீரர்கள், குதிரைப்படை வீரர்கள், எல்லைப்பாதுகாப்பு படையின் ஒட்டகப் படை வீரர்களின் அணிவகுப்புகள் தொடர்ந்து நடைபெற்றன.
இந்த அணிவகுப்பில் முதன் முறையாக பிரான்ஸ் நாட்டை சேர்ந்த ராணுவத்தினரும் இடம்பெற்றிருந்தனர். மேலும், ராணுவத் தினரால் பயிற்சி யளிக்கப்பட்ட 36 ஜெர்மன் ஷெப்பர்டு, லேபரடார் வகை மோப்பநாய்களும் முதன் முறையாக இந்த அணிவகுப்பில் இடம்பெற்றிருந்தன. 26 ஆண்டுகளுக்கு பிறகு குடியரசு தின அணிவகுப்பில் நாய்கள்படை இடம்பெற்றது குறிப்பிடத்தக்கது.
நம்ம தமிழ் நாட்டுல ரசத்தையும், சாம்பாரையும் 'கமகமக்க' வைப்பதில் பெருங்காயத்தின் பங்கு அதிகம் ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
கண்ணில் எப்பொழுதும் எரிச்சல் இருந்து கொண்டே இருக்கும். அப்பொழுது எள்ளுப் பூவைக் கொண்டுவந்து, ... |
Leave a Reply
You must be logged in to post a comment.