காதில் வரும் நோய்கள்

காதில் என்ன நோய் வந்துவிடப் போகிறது என்று யாரும் நினைக்க வேண்டாம். வாய் வழியே, மூக்குத் துவாரம் வழியே மற்றும் காதின் துவாரம் வழியே உட்புகும் காற்று தொண்டையின் மேற்பகுதியில் ஒன்று சேர்ந்து மூச்சுக்குழாய் வழியே நுரையீரலுக்கு செல்கிறது. எனவே காதில் பல குறைபாடுகள் ஏற்பட வாய்ப்புகள் அதிகமாகவே உள்ளன.

 

1. காதில் வலி
2. காதில் சீழ் வருதல்
3. காதில் இரைச்சல்
4. காது மந்தம்
5. காது அடைப்பு
6. காதில் குடைச்சல்
7. காதில் இருந்து இரத்தம் வருதல்
8. காதில் எறும்பு பூச்சிகள் நுழைந்து விடுதல் ஆகிய பாதிப்புகள் ஏற்படுகின்றன. அவற்றுக்கு உண்டான வைத்திய முறைகளை பார்க்கலாம்.

காது வலி குணமாக:
குப்பைமேனி இலைகள் நெல்லிக்காயளவு பறித்து சுத்தம் செய்து அதை நசித்து மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும். இந்த சாற்றில் 2 சொட்டு வலியுள்ள காதில் விட்டு வர வலி நீங்கும்.

பூண்டுப்பல்லில் மிகவும் பெரியதாக உள்ள ஒரு பல்லின் தோலை உரித்து காலையில் காதில் சொருகிக் கொள்ள வேண்டும். மாலையில் எடுத்துவிட வேண்டும். வழியும் குறைந்திருக்கும். வலி குறையாமல் இருந்தால் அடுத்த நாளும் செய்ய வேண்டும்.

வாழை மட்டையை அனலில் வாட்டி முறுக்கினால் வரும் சாற்றைப் பிழிந்து அதில் 2 சொட்டு வலியுள்ள காதில் விட வலி நீங்கிவிடும்.
ஒரு பெரிய காய்ந்த மிளகாயை எடுத்து காம்புப் பக்கம் கிள்ளி விட்டு விதைகளை உதிர்த்து விட வேண்டும். மிளகாயின் ஓட்டை வழியே 1 ஸ்பூன் காய்ச்சிய நல்லெண்ணெயை மிளகாயின் உட்புறம் ஊற்றி சூடு ஆறியபின் வலியுள்ள காதில் விட வலி நீங்கிவிடும்.

பழுத்த எருக்கன் இலை ஒன்றைப் பறித்து மேலும் கீழும் நெய்யைத் தடவி அனலில் வாட்டி நசுக்கினால் வரும் சாற்றில் 2 சொட்டு வலியுள்ள காதில் விட வலி சரியாகும்.

ஒரு எலுமிச்சம் பழத்தைப் பிழிந்து வரும் சாற்றை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி வலியுள்ள ஒவ்வொரு காதிலும் 2 சொட்டு காலை, மாலை 2 நாட்கள் விட்டு வந்தால் வலி நீங்கும்.

காதில் சீழ் வடிதல் குணமாக:
நாயுறுவி இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தமான நீரில் கழுவி அம்மியில் நசித்து மேலே கூறியபடி ஒரு துணியில் வைத்து முறுக்கினால் வரும் சாற்றை எடுத்து சீழ் வரும் காதில் காலை, மாலை 2 சொட்டு வீதம் 2 நாட்கள் விட்டுவர குணம் பெறலாம்.

நாட்டு மருந்து கடையில் இந்துப்பு 1௦ கிராம் வாங்க வேண்டும். தோல் சீவிய சுக்கு 1௦ கிராம் இரண்டையும் நைசாக தூளாக்கி ஒரு சிறிய சட்டியில் 5௦ மில்லி நீர் விட்டு அதில் தூளைப் போட்டு காய்ச்சி, பின் இறக்கி ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி, கஷாயத்தை ஒரு சிறிய பாட்டலில் ஊற்றி வைத்துக் கொண்டு சீழ் வரும் காதில் காலை, மாலை 2 சொட்டு சீழ் நிற்கும் வரை விட்டு பஞ்சினால் காதை அடைத்துவர நிவாரணம் கிடைக்கும்.

தூதுவளை இலைகள் 2௦ பெரிய இலைகளாகப் பறித்து சுத்தம் செய்து அவற்றை அம்மியில் சிறிதளவு நீர் விட்டு நசித்து ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும் அவற்றை காலை, மாலை வேளைக்கு 2 சொட்டு சீழ் வரும் காதில் தொடர்ந்து 3 நாட்கள் விட்டுவர குணமாகும். ஒவ்வொரு முறையும் பஞ்சினால் காதை அடைத்துக் கொள்ள வேண்டும்.

ஜாதி மல்லிகை இலைகள் 3௦ஐப் பறித்து சுத்தம் செய்து லேசாக உணர்ந்த உடன் ஒரு நடுத்தர கரண்டியில் 2 ஸ்பூன் நல்லெண்ணெய் ஊற்றி அதில் இலைகளைப் போட்டுக் காய்ச்ச வேண்டும். சூடு ஆறியதும் ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி எண்ணெயை ஒரு சிறிய பாட்டலில் இருப்பு வைத்து தினமும் காலை, மாலை காதில் 2 சொட்டு தொடர்ந்து சீழ் நிற்கும் வரை விட்டு வர வேண்டும். அவ்வப்போது காதில் பஞ்சினால் அடைத்து கொள்ள வேண்டும்.

காதில் இரைச்சல் குணமாக:
சிறிய வெங்காயம் 4,5 எடுத்து தோலுரித்து நசுக்கி ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும். அந்த சாற்றில் 2 சொட்டு ஒவ்வொரு காதிலும் 2 நாட்கள் விட இரைச்சல் நின்று விடும்.

முசுமுசுக்கை இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தம் செய்து அத்துடன் 3 சிறிய வெங்காயம் தோலுரித்து இரண்டையும் அம்மியில் லேசாக நீர்விட்டு நசித்து சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கினால் சாறு வரும் அதை காலை, மாலை 2 சொட்டு 2 நாட்கள் விட சரியாகும்.

காது மந்தம் குணமாக:
துளசி இலைகள் எலுமிச்சை அளவு பறித்து சுத்தம் செய்து லேசாக நீர் விட்டு நசித்து மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்துக்கொள்ள வேண்டும். இதல் 2 ஸ்பூன் எடுத்து அதில் ஒரு சிட்டிகை அளவு நைசாக தூளாக்கி இந்துப்பை போட்டு குழப்பி, ஒவ்வொரு காதிலும் 2 சொட்டு வீதம் காது நன்றாக கேட்கும் வரை காலை, மாலை தினசரி விட்டு வந்தால் கேட்கும் திறன் அதிகரிக்கும்.

திருநீற்றுப் பச்சிலைச் செடியின் 2,3 கொம்புகளை ஒடித்து அதை தணலில் வாட்டி நசுக்கியும் இலைகளைப் பறித்து நசுக்கி இரண்டையும் ஒரு துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து அதில் ஒவ்வொரு காதிலும் 2 சொட்டு காலை, மாலை தொடர்ந்து 7 நாட்கள் செய்ய நல்ல பலனை எதிர்பார்க்கலாம்.

பத்துப் பூண்டுப் பற்களை தோலுரித்து, ஒரு பெரிய சில்வர் கரண்டியில் 5௦ மில்லி நல்லெண்ணெய் விட்டு அதில் பூண்டுப் பற்களை நசுக்கிப் போட்டு நன்கு காய்ச்சி எடுக்க வேண்டும். பின் எண்ணெயை ஒரு மெல்லிய துணியில் வடிகட்டி ஒரு சிறு பாட்டிலில் இருப்பு வைத்து தினமும் காலை, மாலை 2 சொட்டு வீதம் ஒவ்வொரு காதிலும் தொடர்ந்து 1௦ நாட்கள் விட்டு வர காது மந்தம் சரியாகிவிடும்.

காதடைப்பு குணமாக:
தூதுவளை இலைகளைப் பறித்து சுத்தம் செய்து நசுக்கி ஒரு மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து அடைப்பு ஏற்பட்டுள்ள காதில் 2 சொட்டு காலை, மாலை விட்டுவர ஒரே நாளில் சரியாகிவிடும்.

சிறுதேள் கொடுக்கு இலைகளைப் பறித்து நசித்து மேலே கூறிய முறைப்படி சாறு எடுத்து 3௦ மில்லி நல்லெண்ணெயைக் கலந்து ஒரு கரண்டியில் விட்டுக் காய்ச்சிய பின் ஆறியதும் மெலிதான துணியில் வடிகட்டி அடைப்புள்ள காதில் காலை, மாலை 2 சொட்டுவிட குணமாகும். சரியாகவில்லைஎனில் அடுத்த நாளும் மேலே கூறியவாறு செய்துவிட அடைப்பு நீங்கி குணமாகும்.

காதில் இரத்தம் வருதல் குணமாக:
வெள்ளை முள்ளங்கி இலைகளை லேசாக நீர் விட்டு நசித்து மெலிதாக உள்ள சுத்தமான வெள்ளைத் துணியில் வைத்து முறுக்கி சாறு எடுத்து அதில் 2 சொட்டு இரத்தம் வரும் காதில் காலை, மாலை விட்டு காதில் பஞ்சை அடைத்துக் கொள்ள வேண்டும். 2 நாட்கள் செய்ய இரத்தம் வருவது நின்றுவிடும்.

காதில் சீழ் வடிதல் என்ற தலைப்பில் உள்ள சிகிச்சைகளில் ஏதேனும் ஒன்றைச் செய்தாலும் குணம் பெறலாம்.

காதில் ஈ, எறும்பு அல்லது பூச்சிகள் புகுந்துவிட்டால்:
இரண்டு ஸ்பூன் நீரில் அரை ஸ்பூன் உப்புத்தூளைக் கலக்கி காதில் ஊற்றி விரலால் நீர் வெளியே வராதபடி சிறிது நேரத்திற்கு அடைத்து 5 நிமிடம் கழித்து தலையை ஒரு பக்கமாக சாய்க்க உள்ளே புகுந்தது எதுவாயிருந்தாலும் அவை இறந்து நீருடன் வெளியே வந்து விடும்.

நன்றி : சித்த மருத்துவத்தில் காதுகள் பாதுகாப்பு
– க. சின்னசாமி

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென் ...

56- ஆண்டுகளுக்கு பிறகு கயானா சென்ற முதல் இந்தியப் பிரதமர் மோடி பிரேசிலில் ஜி20 மாநாட்டை முடித்த பின், கயானா அதிபர் ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நா ...

விஜய் மல்லையா, நீரவ் ஆகியோரை நாடு கடத்த மோடி பிரிட்டன் பிரதமரிடம் வலியுறுத்தல் பொருளாதார குற்றங்களில் ஈடுபட்டுள்ள தொழிலதிபர்கள் விஜய் மல்லையா, நீரவ் ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசி ...

G-20 உச்சி மாநாடு வெற்றி – பிரேசில் அதிபருக்கு மோடி நன்றி பிரேசிலில் நடைபெற்ற ஜி 20 உச்சி மாநாட்டை வெற்றிகரமாக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருக ...

ரஷ்ய அதிபர் புடின் இந்தியா வருகிறார் ரஷ்யா மற்றும் உக்ரைன் நாடுகளுக்கிடையே போர் தொடங்கிய பின், ...

ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறு ...

ஜி -20 மாநாட்டில் பசி மற்றும் வறுமைக்கு எதிரான தலைப்பில் பிரதமர் மோடி ஆற்றிய உரை பிரேசிலில் நடக்கும் 'ஜி - 20' உச்சி மாநாட்டில், ...

அரசு முறைப்பயணமாக நைஜீரியா சென ...

அரசு முறைப்பயணமாக நைஜீரியா சென்ற மோடிக்கு உற்சாக வரவேற்பு அரசு முறை பயணமாக நைஜீரியா சென்றுள்ள பிரதமர் மோடிக்கு, ...

மருத்துவ செய்திகள்

வாசனைத் திரவியங்கள்

பொதுவாக இயற்கை மருத்துவர்கள் உணவுக்கு வாசனையூட்டும் மசாலாப் பொருட்களை ஒத்துக்கொள்வதில்லை. ஆனால் இதே ...

நாடி சுத்தி பயிற்சி

தியானம் பழகுவதற்கு பிரானயாமப் பயிற்சியும், நாடி சுத்தி பயிற்சியும் அவசியமாகும். நாடிகளில் உள்ள ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...