ஜாதிக்காயின் மருத்துவ குணம்

ஜாதிக்காய், சுக்கு, துளசி விதை, கடுக்காய்,  இவைகளை ஒரே அளவாக எடுத்து உரலில் போட்டு தூளாக இடித்து, மாச்சல்லடையில் சலித்து ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு மூடி வைத்துக் கொண்டு, காலை மாலை இரண்டு சிட்டிகையளவு தூளை எடுத்து, ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் போட்டுக் கலக்கி 40 நாட்கள் சாப்பிட்டு வந்தால் ஆண் மலடு நீங்கும்.

 

இது நல்ல பலம் தரும். ஆட்டு ஈரல், கோழி முட்டை, காரட் இவைகளையும் நல்ல கீரை வகைகளையும் சாப்பிட்டு வரவேண்டும்.

ஜாதிக்காய், சித்திர மூலவேர், இலவங்கம், ஏலக்காய், அசல் கற்பூரம், இவைகளில் வகைக்கு 1௦ கிராம் எடுத்து, உரலில் போட்டுத் தூள் செய்து மாச்சல்லடையில் சலித்து, ஒரு வாயகன்ற சீசாவில் போட்டு வைத்துக் கொண்டு தினசரி காலை மாலை ஒரு விரற்கடையளவு எடுத்து ஒரு டம்ளர் காய்ச்சிய பசும்பாலில் விட்டுக் கலக்கிக் குடித்து விட வாத நோய் சம்பந்தமான கோளாறுகள் குணமாகும். இதே மருந்து, சுவாசகாசம், பெரும்பாடு, பக்கவாதம், தலைவலி, வயிற்றுவலி இவைகளைக் குணப்படுத்தும்.

ஜாதிக்காய், சீரகம், சுக்கு இவைகளை நெல்லிக்காயளவு எடுத்து, அம்மியில் வைத்து மைபோல அரைத்து, அதை மூன்று சம உருண்டைகளாக உருட்டி வைத்துக் கொண்டு, காலை மாலை தினசரி ஒரு வேலைக்கு ஒரு உருண்டை வீதம் அரை யாழாக்குப் பச்சைப் பசும்பாலில் காய்த்துக் குடித்து வந்தால் மூன்றே நாட்களில் வயிற்றுப்போக்கு நிற்கும்.

ஜாதிக்காயை லேசான சூட்டில் நெய்யில்வறுத்து இடித்து பொடியாக்கி வைத்துக் கொள்ளவும். 5 கிராம் சூரணத்தை காலை, மாலை பசும் பாலில் காய்ச்சி குடிக்கவும். இது ஆண்மை குறைவை போக்கும். நரம்புதளர்ச்சியை போக்கும். நீர்த்துப் போன விந்தினை கெட்டிப்படுத்தும். விந்தில் உயிரணுக்களின் உற்பத்தியை அதிகரிக்கும்.

விந்து முந்துதலை தவிர்க்க மூலிகைகள் பலஉள்ளன, அதில் மிக எளிதாக மிகவும்பயனுள்ள மூலிகை ஜாதிக்காய். தாம்பத்தியம் தொடர்பான பிரச்சனைகளுக்கு ஜாதிக்காய் உபயோகித்தாலே போதும்.

எந்தக் கோளாறினால் பல் வலி ஏற்பட்டாலும் ஜாதிக்காயில் பட்டாணி அளவு எடுத்து நைத்து வலியுள்ள இடத்தில் வைத்து அழுத்திப் பிடித்து கால்மணி நேரம் வைத்திருந்தால் பல்வலி நீங்கும். காலை, பகல், மாலை ஆக ஒரு நாளைக்கு மூன்று வேளை வைக்க பல் வலி குணமாகும்.

ஜாதிக்காயை வாங்கி வந்து அதை உடைத்து கோலிக் குண்டளவு ஜாதிக்காயை சுத்தமான அம்மியில் பால்விட்டு மைபோல அரைத்து, இரவு படுக்கும் முன் கண்களைச் சுற்றிக் கனமாகப் பற்றுப் போட்டுப் படுத்துக் கொள்ள வேண்டும். காலையில் கண்களைக் கழுவிக் கொள்ள வேண்டும். இந்த விதமாக ஏழு நாட்களுக்குத் தொடர்ந்து செய்து வந்தால் கண்பார்வை தெளிவடைந்து விடும்.

ஜாதிக் காயை அரைத்து தொப்புளை சுற்றி வீட்டில் உள்ள சில பாட்டிமார்கள் தடவிக் கொள்ள அறிவுறுத்துவார்கள். ஏன் என்று கேட்கிறீர்களா? ஜாதிக் காய்க்கு பேதியை நிறுத்தும் குணம் உண்டு.

ஜாதிக்காயை + சந்தனத்துடன் அரைத்து பருக்கள் மீதும், முகத்தில் உள்ள கருமதழும்புகள் மீதும் பூசி வந்தால் அது நாளடைவில் மறையும் என்று கூறுகிறது சித்தமருத்துவம்.

காலரா என்னும் வாந்தி பேதியைக் குணப்படுத்தும் அரிய சக்தி ஜாதிக்காய்க்கு உண்டு. ஒரு ஜாதிக்காயை உடைத்து ஒரு புதுச் சட்டியில் போட்டு இரண்டு டம்ளர் தண்ணீர் விட்டு அடுப்பில் வைத்து நன்றாக கொதிக்க வைத்து இறக்கி, அதிலுள்ள ஜாதிக்காயை எடுக்காமல் அப்படியே வைத்து, தண்ணீரை மட்டும் அரை டம்ளர் அளவு இறுத்து உடனே குடிக்கக் கொடுத்து விடவேண்டும். இந்த விதாமாகக் கால் மணிக்கு ஒருமுறை கொடுத்து வந்தால் வாந்தி பேதி குணமாகும். கஷாயம் தீரும் சமயம் அதே அளவு போட்டுக் கொள்ள வேண்டும். இந்த விதமாகக் கொடுத்து வந்தால் நோயாளி பிழைத்துக் கொள்வான்.

ஜாதிக்காய் ,ஜாதிக்காய் சாப்பிடும் முறை , ஜாதிக்காய் சூரணம்
, ஜாதிக்காய் பயன்கள் , ஜாதிக்காய் பலன்கள், ஜாதிக்காய் பவுடர், ஜாதிக்காய் பொடி, ஜாதிக்காய் மருத்துவம், ஜாதிக்காய் மாசிக்காய், ஜாதிக்காய் லேகியம், 

ஜாதிக்காய் , ஜாதிக்காய்யின்  மருத்துவ குணங்கள், ஜாதிக்காய்யின்  பயன்கள் , ஜாதிக்காய்யின்  நன்மை, மருத்துவ குணம், பயன் , ஜாதிக்காய்யின்  நன்மைகள், ஜாதிக்காய்யின்  பயன், ஜாதிக்காய் மூலிகை , இலை, ராசம்,

2 responses to “ஜாதிக்காயின் மருத்துவ குணம்”

  1. Paramasivam says:

    Jathikkai maruthuvagunam I am happy

  2. Paramasivam says:

    Thole noikku jathikkai payanpaduma

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள ...

தமிழகத்தில் 47 லட்சம் விவசாயிகள் பயனடைந்துள்ளனர் 'பிரதான் மந்திரி கிஸான் சம்மான் நிதி' எனப்படும், விவசாயிகளுக்கு ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந ...

ஜம்மு – காஷ்மீருக்கு மாநில அந்தஸ்து வழங்கப்படும் -அமித் ஷா உறுதி ஜம்மு, ''சட்டசபை தேர்தலுக்குப் பின், ஜம்மு - காஷ்மீருக்கு ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களி ...

எழுத்தறிவு தின கொண்டாட்டங்களில் ஜக்தீப் தன்கர் பங்கேற்பு நமது வாழ்வில்குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ஒவ்வொருவரும் ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற ...

புதிய கல்விக்கொள்கை சிறந்த மாற்றத்தை ஏற்படுத்தும் -குடியரசுத்துணைத்தலைவர் நமது வாழ்வில் குறைந்தபட்சம் ஒருவரையாவது எழுத்தறிவு பெற்றவராக மாற்ற ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளி ...

மாநிலத்தில் பயங்கரவாதிகள் அளித்த கோவிலை மீண்டும் கட்டுவோம்-அமித்ஷா உறுதி ஜம்மு காஷ்மீர் சட்டசபை தேர்தலை முன்னிட்டு, பா.ஜ.,வின் தேர்தல் ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பக ...

தெலுங்கானாவில் வெள்ள நிவாரண பகுதிகளை மத்திய அமைச்சர் பார்வையிட்டார் மத்திய வேளாண் மற்றும் விவசாயிகள் நலன் மற்றும் ஊரக ...

மருத்துவ செய்திகள்

குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா - குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே ...

சம்பங்கிப் பூவின் மருத்துவக் குணம்

தலைவலி குணமாக தேவையான பூக்களைக் கொண்டு ஆலிவ் எண்ணெய் சேர்த்து அரைத்து, அரைத்த விழுதை ...

ஜீரண சக்தி பெற

அதிகமாக உணவை உண்ணுதல், காலம்தவறி உண்ணுதல் ஆகியவற்றை தவிர்க்கவேண்டும் சரியான விருந்தை சாப்பிட்டால், குளிர்ந்த ...