குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க

வயிற்றில் பூச்சியா – குழந்தையின் வயிற்றில் பூச்சி இருக்கிறது என்ற சந்தேகம் வந்தவுடனேயே வசம்பைச் சுட்டுப் பொடியாக்கித் தேனில் குழைத்துக் குழந்தையின் நாக்கில்
தடவி கொஞ்சம் கொஞ்சமாக உள்ளுக்குக் கொடுத்தால் வயிற்றில் பூச்சிகள் எளிதில் இறந்து விடுகின்றன.

சிறு குழந்தைகள் இனிபபு வகைகள்  போன்றவற்றை  அதிகம்   சாப்பிடுவதால் பூச்சிகள்
உண்டாகும். இதற்கு ஒரு எளிய வைத்தியம். தித்திப்பு மாதுளையை முதல் நாள் சாப்பிடக்
கொடுத்து மறுதினம்  பாலில் சிறிது விளககெண்ணையைக் கலந்து கொடுத்தால் பூச்சிகள்
வெளியேறும்.

கொக்கிப் புழுக்கள் தொந்தரவிலிருந்து விடுபட, துளசிச் சாற்றுடன் எலுமிச்சைச் சாற்றைக்
கலந்து  குடித்து   வரவும்  தினமும்  சில  இலைகளை  மென்று  வந்தாலே புழுக்கள்
வெளியேறும்.

கொட்டைப் பாக்கை சந்தனம் போல் இழைத்து சுமார் ஒரு ஸ்பூன் அளவு காலை வெறும்
வயிற்றில்  சிறிது பாலில் அல்லது தண்ணீரில் கலந்து குழந்தைகளுக்குக் கொடுக்க, குடல்
பூச்சிகள்  மொத்தமும் அன்றே வெளிவரும்.  கடும்   பத்தியம்  கிடையாது குழந்தைகளின்
வயதுக்கேற்ப அளவைக் கூட்டியோ குறைத்தோ கொடுக்கலாம்.

வேப்பிலைக் கொழுந்துடன் சிறிது உப்பைச் சேர்த்து   மையாக அரைத்து   சுண்டைக்காய்
அளவு உருண்டைகளாக்கி இரண்டு உருண்டைகளை (ஒரு குழந்தைக்கு) வெறும் வயிற்றில்
சாப்பிடச் செய்யவும் பூச்சிகள் செத்து வெளியில் வந்துவிடும்.

Tags; குழந்தையின், வயிற்றில், பூச்சி தொல்லை, நீங்க , வயிற்றில் பூச்சி

One response to “குழந்தையின் வயிற்றில் பூச்சி தொல்லை நீங்க”

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பாஜக கூட்டணி வெற்றிக்கான காரணம ...

பாஜக கூட்டணி வெற்றிக்கான  காரணம் பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமையிலான தேசிய ஜனநாயகக் ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேச ...

பீகார் ஆட்சியைத் தக்கவைத்த தேசிய ஜனநாயகக் கூட்டணி பீகார் சட்டமன்ற தேர்தலில் பாஜக தலைமை யிலான தேசிய ...

நான் தொழில் செய்வதில் என்ன தவறு

நான் தொழில் செய்வதில் என்ன தவறு "நான் தொழில் செய்வதில் என்ன தவறு இருக்கிறது? எனக்கு ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி ச ...

பழைய சாமான்களை விற்று Rs.4,100 கோடி சம்பாதித்தது மத்திய அரசு மத்திய அரசு கடந்த ஐந்துஆண்டுகளில் தனது அலுவலகங்களில் இருந்து ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வே ...

வீடுதோறும் இ-ஸ்கூட்டர் புதிய வேரியண்ட்டை அறிமுகப்படுத்திய நிதின் கட்கரி ஹீரோ மோட்டோகார்ப் (Hero Motocorp) நிறுவனத்தின் துணைநிறுவனமான விடா ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத் ...

பொருத்தமற்ற விஷயங்களில் நேரத்தை வீணடிக்க வேண்டாம் வாக்குதிருட்டு தொடர்பாக ராகுல் காந்தி முன்வைத்த குற்றச் சாட்டுக்கு ...

மருத்துவ செய்திகள்

தலைக்கு ஷாம்பு அவசியம் தானா?

இயற்கையே நம் தலையில் ஆயிலை சுரக்க வைக்கிறது. அந்த ஆயில் நம் ...

நல்லெண்ணெய் நல்ல மருந்தாகும்

எள்ளிலிருந்து எடுக்கப்படும் நல்லெண்ணெயால் நம்முடைய புத்திக்குத் தெளிவு உண்டாகும். கண்களுக்கு நல்ல குளிர்சியுண்டாகும். ...

ஆரைக்கீரை தரும் மருத்துவக் குணங்கள்

நான்கு இலைகளையும் ஒரு காலையும் கொண்டு நன்கு நீருள்ள இடங்களில் சிறப்பாக வளர்ந்து ...