குடியரசு தின விழா கொண்டாட்டத்தின் போது ராஜ பாதையில் கிடந்த குப்பையை பிரதமர் மோடி எடுத்து போட்ட நிகழ்வு அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.
குடியரசு தினத்தை முன்னிட்டு, டில்லியில் தேசியக் கொடியை ஜனாதிபதி திரவுபதி முர்மு ஏற்றினார். ஒவ்வொரு மாநிலத்தின் பாரம்பரியங்களை விளக்கும் வகையில் அலங்கார ஊர்தி அணிவகுப்பு நடைபெற்றது. தொடர்ந்து, இசைக்கருவிகள் முழங்கிய படி 300 கலைஞர்கள் அணிவகுப்பு மரியாதை செலுத்தினர்.
இந்த விழாவில் பிரதமர் மோடி மற்றும் சிறப்பு விருந்தினர் இந்தோனேசிய அதிபர் பிரபோவோ சுபியாண்டோவும் அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொண்டனர்.
இந்த நிகழ்ச்சியில் பிரதமர் மோடி செய்த செயல் தற்போது சமூகவலைதளங்களில் வைரலாகி வருவதுடன், பலரது பாராட்டுக்களையும் பெற்றுள்ளது.
குடியரசு தினவிழா நிகழ்ச்சியில் பங்கேற்பதற்காக, துணை ஜனாதிபதி ஜக்திப் தன்கர் வருகை புரிந்தார். அவரை வரவேற்பதற்காக சென்ற பிரதமர் மோடி, ராஜபாதையில் குப்பை கிடப்பதை பார்த்துள்ளார். உடனே, சற்றும் யோசிக்காத அவர், அதனை எடுத்து, பாதுகாவலரிடம் கொடுத்து, குப்பைத் தொட்டியில் போடச் சொல்லியுள்ளார்.
இது தொடர்பான வீடியோ சமூகவலைதளங்களில் வைரலாகி வருகிறது. பிரதமர் மோடியின் இந்த செயல், மத்திய அரசின் முதன்மை திட்டமான, தூய்மை இந்தியா திட்டத்திற்கு சான்றாக இருப்பதாக பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.
எந்தப் பிரச்னைகளைப் பற்றியும் பேசாமல், ஆனந்தமாக ருசித்துச் சாப்பிடுவது, நல்ல விஷயங்களைப் பேசுவது ... |
ரோஜாப் பூ வாய்ப்புண், சிறுநீர், வயிற்றுப் புண், தொண்டைப் புண், மார்புச்சளி, காது ... |
சீன தேசத்தில் தோன்றிய அக்குபஞ்சர் மருத்துவத்தில் கூறியபடி மனித உடலில் உள்ள முக்கியமான ... |