மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னை வெள்ளப் பகுதிகளை பார்வையிட்ட TN CM. வெள்ளத்திற்கான காரணத்தை Press கேட்டபோது “அதிமுக ஆட்சியின்போது ஸ்மார்ட் சிட்டி திட்டத்திற்காக ஒதுக்கப்பட்ட பல கோடி ரூபாய் என்ன ஆனது என்று கேட்டிருக்கிறார்.

முதல்வரே அதற்கு தனியாக லஞ்ச ஒழிப்புத்துறை வைத்து ரெய்டு நடத்திக்கலாம். விசாரணை கமிஷன் நியமிக்கலாம் உங்கள் பழிவாங்கும் நடவடிக்கை பிறகு பார்க்கலாம். நீங்கள் கூறிய கருத்து உங்கள் கட்சிகாரர்கள் திருப்தி அடைய வேண்டுமானால் பயன்படும். இப்பொழுது மக்களை மழை வெள்ளத்தில் இருந்து விரைவில் காப்பாற்றும் வழியை பாருங்கள்.
மழை வருவதற்கு ஒரு மாதத்திற்கு முன்பே வடகிழக்குப் பருவமழையை எதிர்க்கொள்ள தமிழகம் தயாராக இருக்கிறது என்றீர்கள். மத்திய அரசின் காலநிலை அறிவிப்பு துறையும் 3 மாதத்திற்கு முன்பே எச்சரித்ததற்கு ஆதாரம் உள்ளது. இதையெல்லாம் கருத்தில் எடுத்து முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் ஏதும் எடுக்காததால் கடந்த மூன்று நாட்களாக மக்கள் வீட்டைவிட்டே வெளியே வர முடியாமல் தெருவிலும் வீட்டுக்குள்ளும் வெள்ளம் புகுந்து மக்கள் தத்தளித்துக் கொண்டிருக்கிறார்கள்.

முதன் முதலில் 2015ம் ஆண்டு சென்னை வெள்ளத்தால் பாதிக்கப்பட்டது. அன்றிலிருந்து சென்னையின் பலதொகுதிகள் திமுக வசம் இருந்தது.
எதிர்கட்சியாக இருந்த நீங்கள் ஆளுங்கட்சிக்கு அழுத்தம் கொடுத்து மழைநீர் வடிகால் கொண்டு வராமல் இருந்தது ஏன்? கொளத்தூரில் இன்றைக்கும் மக்கள் பாதி உடல் மூழ்கும் அளவு தண்ணீரில் கஷ்டப்பட்டுக் கொண்டிருக்கிறார்கள்
.எத்தனை முறை மழைநீர் வடிகால் அமைக்கவில்லை என்று சட்டமன்றத்தில் சுட்டிக்காட்டினீர்கள் ?

சென்ற ஆண்டு கஜா புயலை அதிமுக அரசு திறமையாக கையாண்டது.
. அவர்கள் ஒரு முறை செய்த தவறில் இருந்து பாடம் கற்றுக் கொண்டார்கள்.
ஆனால் நீங்கள் எந்த பாடத்தையும் கற்கவில்லை என்பது தெரிகிறது.
எதிர்க்கட்சியாக இருக்கும்போது ஆளுங்கட்சியை வற்புறுத்துவதில்லை. ஆளுங்கட்சியாக வரும்போது கடந்த ஆட்சிக்காலத்தை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது

சென்னையை பொருத்தமட்டில் ஒரு முறை தவிர தொடர்ந்து திமுகவே மேயர் ஆக இருந்துள்ளது. கடந்த 6 மாதத்தில் எந்த திட்டமிடல், முன் தயாரிப்பு இல்லாமல் அரசியல் மட்டும் பேசி வீணடித்ததால் சென்னை மக்கள் மீண்டும் இன்று வெள்ளத்தில் அவதியுறுகிறார்கள். எந்த உதவி கேட்டாலும் உதவத் தயார் என பிரதமர் மோடி உதவிக்கரம் நீட்டியுள்ளதை விரைவாக பயன்படுத்திக்கொள்ளுங்கள்.

பாரதிய ஜனதா கட்சி பேரிடர் காலங்களில் தாமாக முன்வந்து மக்களுக்கு உதவுது வழக்கம். அதை முழுவீச்சில் இப்போது செய்துகொண்டு இருக்கிறது. பேரிடர் பணியில் அரசோடு ஒத்துழைக்க தயாராக இருக்கிறது.

SR.சேகர்
மாநிலப் பொருளாளர்

251 responses to “மற்றவர்களை குறை சொல்லி தப்பிப்பதே உங்கள் வழக்கமாகிவிட்டது”

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

மாற்றம் வேண்டும் என்பதில் மக்க ...

மாற்றம் வேண்டும் என்பதில் மக்கள் உறுதி தமிழக பாஜக தலைவர் அண்ணா மலை என் மண், ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை த ...

ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை தனது நண்பன் என கூறுகிறது ஒட்டுமொத்த உலகமும் இந்தியாவை நண்பனாக கருதுகிறது’ என பிரதமா் ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வரு ...

அயோத்தி என்றால் நினைவுக்கு வருவது அசோக் சிங்ஹல் அயோத்தி என்றால் ஶ்ரீ ராமனுக்கு அடுத்து நினைவுக்குவருவது அசோக் ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர ...

அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்த நாடாக மாறும் அடுத்த 25 ஆண்டுகளில் இந்தியா வளர்ந்தநாடாக மாறும் என்று ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணி ...

111 பதக்கங்கள் என்பது சிறிய எண்ணிக்கை அல்ல ஆசியபாரா விளையாட்டில் இந்தியாபெற்ற 111 பதக்கங்கள் என்பது சிறிய ...

தேசியக் கொடி அவமதிப்பு திமுக ம ...

தேசியக் கொடி அவமதிப்பு  திமுக மன்னிப்பு கேட்க வேண்டும் சேப்பாக்கம் கிரிக்கெட் மைதானத்திற்கு இந்திய தேசியக் கொடியை கொண்டு ...

மருத்துவ செய்திகள்

தியானமும் தற்சோதனையும்

தற்சோதனை இல்லாத தியானம், கைப்பிடி இல்லாத கூர்மையான கத்தி போன்றது. தற்சோதனையின்றி தியானம் ...

தொட்டாற்சுருங்கியின் மருத்துவ குணம்

தொட்டாற்சுருங்கி இலைச் சாற்றை எடுத்துக் காலையிலும், மாலையிலும் தேமலின் மேல் தடவி வைத்துக் ...

வெங்காயத்தின் மருத்துவ நன்மை

பல நாடுகளில் வெங்காயம் மருந்து பொருளாக பயன்படுகிறது. வெங்காயம் நமது வைத்தியதிலும் முக்கிய ...