மனிதகுலத்துக்கு, இயற்கை தந்த கொடைதான் நோனி.
மொரின்டா சிட்ரி ஃபோலியா மரத்தின் பழம்தான் நோனி. மோர்ஸ் இண்டிகஸ் என்னும் இலத்தீன் மொழியிலிருந்து வந்ததுதான் மொரிண்டா, என்னும் பெயர். மோர்ஸ் என்றால் மல்பெரி. இண்டிகஸ் என்றால் இண்டியன் என்று பொருள்.
அன்றாடம் நம் உடலுக்கு தேவைப்படும் 150 வகையான உயிர்ச்சத்துக்கள்
நோனி பழத்தில் உள்ளன. இந்த 150 வகையான உயிர்ச்சத்துக்களும், நோனி பழத்தில், சரியான விகிதத்திலும், உடம்பு அப்படியே ஏற்றுக்கொள்ளும் வகையிலும் உள்ளன. நோனி ஒரு சிறந்த நச்சு நீக்கி. நாம் சாப்பிடும் உணவினாலும், சுவாசிக்கும் காற்றினாலும், பருகும் நீரினாலும், சோப்பு, பற்பசை போன்றவற்றாலும் நம் உடலில் நச்சுத்தன்மை ஏற்படுகிறது. இந்த நச்சுப்பொருட்களையும், ரசாயனங்களையும் ஏற்றுக்கொள்ளும் விதத்தில் நம் உடல் அமைக்கப்படவில்லை. என்ன நேர்கிறது என்றால், இவை நம் உடம்பில்
உள்ள செல்களின் மேல் படிந்துவிடுகின்றன. செல்களுக்கு இடையே தொடர்பு இருக்கவேண்டுமானால் செல் சவ்வு மிருதுவாக இருக்கவேண்டும். செல் சவ்வு கடினமாவும், விரைப்பாகவும் இருந்தால் செல்களுக்கு இடையே உள்ள தொடர்பு பாதிக்கப்படும். நோனி பழச்சாறு, செல் சவ்வுகளின் மேல் படிந்திருக்கும் நச்சினை நீக்கிவிடுகிறது. அதனால் செல்களின் தொடர்பு பலப்படுத்தப்படுகிறது.
செல் சவ்வுகளின் மீது நச்சுப் பொருட்கள் படியும்போது, செல் சவ்வுகளில் உள்ள துளைகள் அடைபட்டுப் போகினறன. அதனால், நாம் சாப்பிடும் உணவில் இருக்கும் உயிர்ச்சத்துகள் செல்லுக்குள் போகமுடிவதில்லை. நாம் உடம்பு சரியில்லாதபோது, டாக்டரிடம் போகிறோம். சில சமயங்களில் டாக்டர் கொடுக்கும் மருந்து சரியான பலன் அளிப்பதில்லை. காரணம், மருந்துகள் செல்லுக்குள் செல்வதில்லை.
நோனி பழச்சாறு, செல்களின்
துளைகளை திறந்து, உணவில் இருக்கும் நுண் ஊட்டச்சத்துகள் செல்லுக்குள் செல்லும்படி செய்கிறது. அது போலவே மருந்தும் செல்லுக்குள் செல்வதால் நோய் குணமாகிறது. நோனி செல்களுக்கான ஒரு சிறந்த உணவு, செல்களை அது ஆரோக்கியமாக வைக்கிறது. செல்கள் ஆரோக்கியமாக இருந்தால், திசுக்கள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் உறுப்புகள் ஆரோக்கியமாக இருக்கும். உடல் இயக்கம் ஆரோக்கியம் பெறும். நாமும் ஆரோக்கியமாய் இருப்போம். ஆனால் செல்கள் ஆரோக்கியமாக இல்லை என்றால் திசுக்கள், உடல் உறுப்புகள், உடல் இயக்கம் எல்லாம் பலவீனம் அடைந்து, நாமும் ஆரோக்கியம் இழந்துவிடுவோம்.
நோனி பழச்சாறு சக்தி வாய்ந்தது. அது பாதுகாப்பான வலிநிவாரணி என்றும் நிரூபிக்கப்பட்டுள்ளது. கடைகளில் கிடைக்கும் வலிநிவாரணிகள் தொடர்ந்து பயன்படுத்தினால் அவை பக்கவிளைவுகள் ஏற்படுத்தும். காக்ஸ் என்சைம்களினால்தான் வலி ஏற்படுகிறது. காக்ஸ் ஒன்று, காக்ஸ் இரண்டு என்னும் இருவகை என்சைம்கள் உள்ளன. காக்ஸ் ஒன்று என்னும் என்சைம் நன்மை செய்யக்கூடியது. இது வயிறு, குடல் ஆகியவற்றின் உட்சுவரில் உள்ளது. காக்ஸ் இரண்டு என்னும் என்சைம்தான் வலி, வீக்கம் ஆகியவற்றுக்குக் காரணமாய் இருக்கிறது.
வலி நிவாரணியை உட்கொள்ளும்போது, நன்மை செய்யும் காக்ஸ் ஒன்று என்ற என்சைமும் இல்லாமல் போய்விடுகிறது. ஆனால் நோனி பழச்சாற்றினை உட்கொள்ளும்போது, வலிக்குக் காரணமாய் இருக்கும் காக்ஸ் இரண்டு என்சைமை அது நீக்கிவிடுகிறது. இவ்வாறு, நோனி பழச்சாறு, பக்கவிளைவுகளற்ற பாதுகாப்பான வலி நிவாரணி என்பது நிரூபணம் ஆகியுள்ளது. நோனி பழச்சாறு, நம் உடம்பில் செரோடோனின், எணடார்ஃ பின் என்னும் நல்ல ரசாயனத்தைப்
போதுமான அளவு சுரக்கச் செய்கிறது. நோனி பழச்சாறு, வேண்டிய அளவு செரொடோனின், எண்டார்ஃபின் ஆகியவற்றை நம் உடம்பில் தக்கவைப்பதால், மனஅழுத்தம் இருந்தாலும், அதை நாம் உணர்வதில்லை.
நோனி பழச்சாறு, நோய் எதிர்ப்பு சக்தியைக் கொடுக்கிறது. 1960-களில் மக்களுக்கு இருந்த நோய் எதிர்ப்பு சக்தியில் 60மூ தான் இப்போதுள்ள மக்களுக்குகு இருப்பதாக விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். நோய் எதிர்ப்பு சக்தி என்பது வைரஸ், பாக்டீரியா, தொற்று நோய்கள் ஆகியவற்றிலிருந்து நம்மைப் பாதுகாப்பது ஆகும். நோய்க்கிருமிகளை அழிப்பதற்குப் பதிலாக, நோய் எதிர்ப்பு செல்கள், நம் உடம்பில் இருக்கும் செல்களைத் தாக்கும். இதனால் auto immune நோய்கள் வருகின்றன. நீரிழிவு, முடக்குவாதம் போன்ற நோய்கள் auto immune நோய்கள் எனப்படுகி;ன்றன.
நோனி பழச்சாறு auto immune நோய் ஏற்பட்டுவிடாமல், நோய் எதிர்ப்பு சக்தியை சீராக்குகிறது. நம்மைத் தினமும் நோய்க்கிருமிகள் தாக்கினாலும், நாம் எப்போதும் ஆரோக்கியமாக இருக்கும் அளவுக்கு, நம் உடலில் நோய் எதிர்ப்பு சக்தியை உண்டாக்குகிறது. நம்முடைய உடம்பை, ஒரு ரசாயன உற்பத்திசாலை என்று சொல்லலாம்.
நாம் பேசும்போதும், நடக்கும்போதும், கேட்கும்போதும் ரசாயன மாற்றங்கள் நிகழ்ந்துகொண்டே இருக்கின்றன. ஒரு பொருள் மற்றொரு பொருளாய் ரசாயன மாற்றம் பெறுகிறது. நம் உடல் இயக்கத்திற்குத் தேவையான Nitric Oxide என்னும் வாயு, மாலிக்யூலை நம் உடல் உற்பத்தி செய்கிறது. நோனி பழச்சாறு நம் உடலில் போதுமான Nitric Oxide உற்பத்தியாவதற்கு உதவுகிறது. நம் உடம்பில் ரசாயன மாற்றங்கள் சரியாக நிகழும்போது நம் உடல்
ஆரோக்கியமாக இருக்கிறது. நாம் நோனி பழச்சாற்றை உட்கொள்ளும்போது, பழச்சாற்றில் இருக்கும் proxeronine நம் உடம்பில் இருக்கும் Proxeronase உடன் சேர்ந்து, Xeronine உருவாகிறது. இது, புரோட்டீன் செல்களை செம்மையாக வேலை செய்ய உதவுகிறது.
நோனி பழச்சாறு ஆரோக்கியமான செல்களை ஆரோக்கியமாகவும், ஆரோக்கியமற்ற செல்களை ஆரோக்கியமாகவும் வைக்கிறது. அந்த வகையில் நோனி பழச்சாறு, ஆரோக்கியம் உள்ளவர்களுக்கும், ஆரோக்கிய குறைபாடு உள்ளவர்களுக்கும் பலனளிக்கிறது.
நோனி பழச்சாறு சக்திவாய்ந்த adopt gin ஆக செயல்படுகிறது. Adopt gin என்பது, உடல் இயக்கத்தை சீராக வைக்கும் ஒரு பொருள். நம்முடைய உடம்பில், தானாகவே குணமாகும் சக்தி இருக்கிறது. அதனால்தான் நம் உடம்பில் காயம் ஏற்பட்டால், காயம் தானாகவே ஆறிவிடுகிறது. இந்த சக்தி நம் உடம்பில் இருந்தால், நாம் உட்கொள்ளும் மருந்தும் நன்றாக வேலை செய்யும். இந்த சக்தி இல்லையென்றால் எந்த மருந்தும் நல்ல பலனைத்தராது. நோனி பழச்சாறு, இந்த தானாகவே குணமாகும் சக்தினை வலுப்படுத்துகிறது. அந்த வகையில், மருந்துகள் நம் உடம்பில் நன்றாக வேலை செய்ய உதவுகிறது. நோனிப்பழச்சாறு ஜீரண சக்தியைப் பெருக்குகிறது, மலச்சிக்கலைப் போக்குகிறது. உடலின் சக்தியை அதிகரிக்கிறது. நல்ல தூக்கத்தைக் கொடுக்கிறது. உங்களை ஆரோக்கியமாக வைக்கிறது.
Tags; மருத்துவ குணம், நோனி, நோனி பயன்கள். நோனி பழரசம், நோனி பழம், உயிர்ச் சத்துக்கள், நோனி பழத்தில்,
தினமும் எட்டுமுறை 8 அவுன்ஸ் டம்ளரில் தண்ணீர்குடியுங்கள். தண்ணீர் அதிகமாக குடிப்பது கொழுப்பைகரைத்திட ... |
நீரிழிவுநோய்க் கட்டுப்பாட்டில் உணவுமுறை ஒரு முக்கியப்பங்கு வகிக்கிறது. அதனால் நீரிழிவுநோய் உள்ளவர்கள் சரியான, ... |
உங்கள் கன்னம் அழகாக இருக்க வேண்டுமா? உங்களது முகம் மற்றவர்களை-வசீகரிக்க வேண்டுமா? கவலை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.