ரூ.15 ஆயிரம்கோடி மதிப்பிலான வெடிபொருள் தயாரிப்பு திட்டத்தை இந்திய ராணுவம் இறுதி செய்தது

நீண்டகால ஆலோசனைக்கு பிறகு ரூ.15 ஆயிரம்கோடி மதிப்பிலான வெடிபொருள் தயாரிப்புதிட்டத்தை இந்திய ராணுவம் இறுதி செய்துள்ளது.

மத்தியகணக்கு தணிக்கையாளர் (சிஏஜி) கடந்த ஆண்டு நாடாளுமன்றத்தில் சமர்ப்பித்த அறிக்கையில், “152 வகையான வெடிபொருட்களில் வெறும் 61 மட்டுமே கையிருப்பில் உள்ளன. பக்கத்து நாடுகளுடன் போர்மூண்டால் வெடிபொருட்கள் 10 நாட்களில் தீர்ந்து விடும்” என்று கூறப்பட்டிருந்தது.

நாட்டின் பாதுகாப்பு விதிமுறைப்படி ஒரு மாதத்துக்கான வெடிபொருட்கள் கையிருப்பில் இருக்க வேண்டும். ஆனால், இவற்றை இறக்குமதி செய்வது தொடர்பான நடைமுறைகளில் காலதாமதம் ஏற்படுவதே இதற்குக் காரணம் என தெரியவந்தது.

இதையடுத்து, இதுபோன்ற பொருட்களின் இறக்குமதியை படிப்படியாக குறைத்துக் கொண்டு, உள்நாட்டிலேயே தயாரிக்க மத்திய அரசு முடிவுசெய்தது. இதன் அடிப்படையில், 10 வகையான வெடிபொருட்களை நேரடியாக கொள்முதல் செய்ய ராணுவத்துக்கு கடந்த ஆண்டு அதிகாரம் வழங்கப்பட்டது.

இந்நிலையில், நீண்ட ஆலோசனைக்குப்பிறகு ரூ.15 ஆயிரம் கோடி மதிப்பிலான வெடிபொருட்களை தயாரிக்கும் திட்டத்தை ராணுவம் இறுதிசெய்துள்ளது. இந்த திட்டத்தின்படி 11 தனியார் நிறுவனங்கள் உற்பத்தியில் ஈடுபடுத்தப்படும். இதை ராணுவ தளபதியும், பாதுகாப்பு அமைச்சரும் கண்காணிப்பார்கள் என கூறப்படுகிறது.

இதன்படி, முதல்கட்டமாக பல்வேறு ராக்கெட்கள், வான் வழி பாதுகாப்பு சாதனங்கள், பீரங்கிகள், துப்பாக்கிகள், கையெறிகுண்டுகளை ஏவும் சாதனங்கள் ஆகியவற்றுக்கான வெடி பொருட்கள் தயாரிக்கப்படும்.-

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில� ...

பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் குழு கூட்டம் பிரதமா் நரேந்திர மோடி தலைமையில் நீதி ஆயோக் நிா்வாகக் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் ...

பிரதமர் மோடி எந்த நாட்டுக்கும் மிரட்டலுக்கும் அடிபணிபவர் இல்லை “பிரதமர் மோடி எந்தவொரு நாட்டுக்கும், எந்தவொரு மிரட்டலுக்கும் அடிபணிபவர் ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர� ...

பாகிஸ்தானுக்கு ஆதரவாக பேசுபவர்கள் பாகிஸ்தானுக்கே சென்று விடலாம் ஆபரேஷன் சிந்தூரை பாரட்டி தமிழ்நாடு பாஜக சார்பில் தேசியக்கொடி ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் � ...

நீதி வழங்க நீதிமன்றத்துக்கும் வரையறைகள் உள்ளன அ.தி.மு.க.,வுடனான கூட்டணியை இறுதி செய்வதற்காக அமித் ஷா தமிழகம் ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தே ...

முதல்வரை குறை சொல்ல அதிகாரம் தேவையில்லை – அண்ணாமலை ''தமிழக முதல்வரை சாமானியராக இருந்து குறை சொல்லலாம். அதற்கு ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அம� ...

ஆப்கன் அரசுடன் முதல்முறையாக அமைச்சர் ஜெய்சங்கர் பேச்சு பஹல்காம் தாக்குதலுக்கு கண்டனம் தெரிவித்த ஆப்கானிஸ்தானின் தலிபான் அரசுக்கு ...

மருத்துவ செய்திகள்

பேரீச்சம் பழத்தின் மருத்துவ குணம்

இயற்கை அன்னையின் கொடையான பழங்களில் பலவற்றை அப்படியே நேரடியாக சாப்பிட்டுவிடலாம் , சில ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...

காக்கை வலிப்பு குணமாக

சிவப்பு சித்ர மூல வேர்ப்பட்டையை நன்கு உலர்த்தி பொடித்து தேன் அல்லது பாலில் ...