முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டவை , அரசின் வழிகாட்டுதல்படிதான் செயல்படுவோம் என முப்படை தலைமை தளபதி பிபின்ராவத் கூறியுள்ளார்.
முப்படைகளின் தலைமை தளபதியாக நியமிக்கப்பட்ட பிபின் ராவத் இன்று (ஜன.,1) பொறுப்பேற்று கொண்டார். முன்னதாக அவர். டில்லியில் உள்ள தேசியபோர் நினைவிடத்தில் மரியாதை செலுத்தினார். அப்போது, ராணுவதளபதி நரவானே, விமானப்படை தளபதி பதூரியா, கடற்படைதளபதி கரம்பிர் சிங் மற்றும் உயரதிகாரிகள் உடனிருந்தனர்.
பின்னர் பிபின் ராவத் கூறுகையில், முப்படைகளும் அரசியலுக்கு அப்பாற்பட்டு இருக்கும். அரசியல் எங்களுக்குவேண்டாம். அரசின் வழிகாட்டுதல் படி மட்டுமே செயல்படுவோம். முப்படைகளையும் ஒருங்கிணைத்து ஒரேஅணியாக செயல்பட தலைமை தளபதியாக கவனம் செலுத்துவேன். முப்படைகளுக்கு ஒதுக்கப்படும் நிதியை ஆக்கப் பூர்வமாக பயன் படுத்த முயற்சி செய்வேன். இவ்வாறு அவர் கூறினார்.
முப்படை தளபதி பிபின் ராவத்திற்கு வாழ்த்துதெரிவித்து பிரதமர் மோடி டுவிட்டரில் வெளியிட்ட பதிவு: இந்த புதிய ஆண்டு துவங்கும்போது, இந்தியாவிற்கு முதல் முப்படை தலைமைதளபதி கிடைத்துள்ளார் என்பதில் மகிழ்ச்சி அடைகிறேன். அவருக்கு நான் வாழ்த்துகளை தெரிவித்துகொள்கிறேன். மிகப்பெரிய பொறுப்பு கிடைத்ததற்கு வாழ்த்துகளை தெரிவித்து கொள்கிறேன். மிகுந்த ஆர்வத்துடன், இந்தியாவுக்காக உழைத்த சிறந்தஅதிகாரி என தெரிவித்துள்ளார்.
2016-ம் ஆண்டின் டிசம்பர் மாதம் 31-ம் தேதியன்று, இந்திய ராணு வத்தின் 27-வது தலைமைத் தளபதியாக நியமிக்கப் பட்டார் பிபின் ராவத். தலைமை தளபதியாகப் பதவியேற்பதற்கு முன்பு, துணை தலைமை தளபதியாகப் பணியாற்றிவந்தார். உத்தரகாண்ட்டில் பிறந்த பிபின் ராவத்தின் குடும்பம், பலதலைமுறைகளாகத் தொடர்ந்து ராணுவத்தில் பணியாற்றுகிறது. டெஹ்ராடூன், சிம்லா, தமிழகத்தின் வெலிங்டன் ஆகிய பகுதிகளில் உள்ள ராணுவக் கல்வி நிறுவனங்களில் கல்வி பயின்ற பிபின் ராவத், அமெரிக்காவில் ராணுவம் குறித்த பட்டப்படிப்பு முடித்துள்ளார்.
தனது தந்தை பணியாற்றிய அதே படையில், 1978-ம் ஆண்டு டிசம்பர் மாதம் பதவியேற்றார் பிபின் ராவத். உயர்ந்த மலைகளின்மீது போர் புரிதலிலும், ஆட்சிக்கு எதிரான ஆயுதக் குழுக்களை ஒடுக்குவதிலும் கை தேர்ந்தவர், இவர். நாடு முழுவதும் பல்வேறு ராணுவப் படைகளுக்குத் தலைமை தாங்கியதோடு, ராணுவம் குறித்த கல்வியில் ஆர்வம்கொண்டவர். ராணுவ போர்த்திறன் குறித்த தனது ஆய்வுக்காக, கடந்த 2011-ம் ஆண்டு, மீரட்டிலுள்ள சௌத்ரி சரண்சிங் பல்கலைக்கழகத்தில் முனைவர் பட்டம்பெற்றார், பிபின்.
2008-ம் ஆண்டு, காங்கோ நாட்டுக்கு ஐக்கிய நாடுகள் சார்பாக அனுப்பப்பட்ட அமைதிக் குழுவில், இந்தியாவின் பிரதிநிதிகளுள் ஒருவராகச் சென்றார். அவரது தலைமையின் கீழ் அமைதிக் குழு மிகச்சிறப்பாகச் செயல்பட்டதாகவும், அதுவரை அமைதியாக இருந்த இந்தியாவின் அணுகுமுறை, அவரின் தலைமைக்குப் பின் இரும்புக்கரம் கொண்டதாக மாறியதாகவும் அந்த அமைதிக்குழுவில் இருந்தவர்கள் அவரைப் பற்றி கருத்து தெரிவித்துள்ளனர்.
கருவேலன் கொழுந்துடன் அதற்கு பாதியளவு சீரகத்தை சேர்த்து நெகிழ அரைத்து வடைபோல் தட்டி ... |
அகத்தை சுத்த படுத்துவதால் அகத்தி என பெயரை வைத்துள்ளனர்..சுமார் 50பது ஆண்டுகளுக்கு முன்பு ... |
பழங்களில் உள்ள சர்க்கரைச்சத்து நம் உடலில் உள்ள தசைநார்களை உறுதிப்படுத்துகின்றன. ஆரஞ்சு, சாத்துக்குடி, ... |