பழம் அல்லது பழச்சாறு உட்கொள்வதன் மூலம் உறுப்புகள் நீர்த்துவம் பெறும். நோயாளிகள் பழங்களை உண்பதன் மூலம் நீரை கிரகித்துக் கொள்ள முடியும். அதே நேரத்தில் தேவையான சர்க்கரை மற்றும் தாதுச்சத்துக்களைப் பெற்றுவிடலாம்.
சிறுநீர் உற்பத்தியை அதிகரிக்கும். அதற்கான பொட்டாஷியம், மக்னீசியம் மற்றும் சோடியம் சத்துக்கள் பழங்களில் உள்ளன. பழம் அல்லது பழச்சாறு உண்பவர் அடிக்கடி சிறுநீர் கழிக்க முடியும். அவை சிறுநீரின் அடர்த்தியைக் குறைக்கும். கழிவுகளைத் துரிதமாக வெளியேற்ற உதவும். உப்பு நீக்க உணவாக அமையும்.
பழத்தில் உள்ள உப்புக்களின் அங்கக அமிலங்கள் அல்கலைன் கார்பனேட்டுகளை உற்பத்தி செய்யும். அவை உடம்பில் இருந்து நச்சுத்தன்மைகளை அகற்றும். பழங்களில் உள்ள கார்போஹைட்ரேட்டுகள் சர்க்கரை, டெக்ஸ்ட்ரின் மற்றும் அமில வடிவில் உள்ளன. அவை எளிதில் சீரணமாகும், முழுமையாக உட்கிரகிக்கப்படும். நோயாளிகளுக்குத் தேவையான சக்தி மற்றும் வெப்பத்தை வழங்கும்.
உடம்புக்கு அவசியமான தாதுச் சத்துக்களையும் பழங்கள் கொடுக்கும். ஆப்ரிகாட், உலர்ந்த திராட்சை, பேரீச்சை ஆகியவை கால்சியமும், அயச்சத்தும் நிரம்பியவை. வலிமையான எலும்புகளுக்கும், நல்ல இரத்தத்தைப் பெறுவதற்கும் இவை முறையே அவசியம்.
பழங்களில் உள்ள இழைப்பண்டம் சீரணப் பாதையில் உணவு மிருதுவாகச் செல்லவும், எளிதாக மலம் கழிக்கவும் உதவும். பழங்களிலுள்ள சர்க்கரைகள் மற்றும் அங்கக அமிலங்கள் மலமிளக்கித் தன்மையை மேம்படுத்தும். தொடர்ந்து பழங்களை உபயோகித்து வர மலச்சிக்கல் நீங்கும்.
உடம்புக்கு நலமளிக்கும் விளைவை பழங்கள் நமது உடம்புக்குள் ஏற்படுத்தும்.
கொய்யா, எலுமிச்சை, ஆரஞ்சுப்பழங்களில் 'வைட்டமின் சி' சத்து நிரம்ப உண்டு. இவற்றை புதிதாக பச்சையாக உண்பதால் வைட்டமின் சத்துகளை முழுமையாகக் கிரகித்துக் கொள்ள முடியும். 'வைட்டமின் ஏ' சத்தாக மாறக் கூடிய 'கரோடீன் அதிக அளவாக பல பழங்களில் உள்ளது. ஒரு நடுத்தர சைஸ் மாம்பழத்தில் 15,000 யூனிட் அளவு வைட்டமின் ஏ சத்து இருக்கும். இந்தச் சத்தை உடம்பில் சேமித்து வைத்துக் கொள்ள முடியும். 'வைட்டமின் சி' யின் சிறந்த மூலகமாக பப்பாளிப் பழத்தைச் சொல்லலாம்.
நோய்வாய்ப்பட்டவர்கள் பழத்தை சாறுவடிவில் உண்ண வேண்டும் என்பது மருத்துவப் பரிந்துரை. பழச்சாற்றை தயாரித்த உடனே அருந்த வேண்டும். இல்லையேல் அது சிதைவுற்று தனது குணங்களை இழக்கும்.
குறிப்பிட்ட நோயில் இருந்து குணம்பெற குறிப்பிட்ட பழத்தை உண்ணவேண்டும் என்கிறது இயற்கை மருத்துவம். சிகிச்சையின் போது அந்தப்பழத்தை மட்டுமே உண்டு ஏனையவைகளைத் தவிர்க்க வேண்டும் என்று அது வலியுறுத்தும்.
இருதயத்திறனை தரவாரியாகப் பிரிக்கும் நிலையை பழத்தில் உள்ள வைட்டமின், கால்ஷியம், அயம் மற்றும் சர்க்கரைச் சத்துக்கள் கட்டுப்படுத்தும். இருதய இயக்கத்தை முறைப்படுத்துவதற்கு ஆப்பிள், எலுமிச்சை, ஆரஞ்சுப் பழங்கள் உதவும். அதனை (இருதயம்) முதுமையிலும் ஆரோக்கியமாக வைத்து இருக்கும். ஆப்பிள், பேரீச்சை மற்றும் மாம்பழம் மத்திய நரம்பு மண்டலத்திலும், நேரடியாக வேலை செய்யும். பாஸ்பரஸ், குளுடாமிக் அமிலம் மற்றும் பழத்தில் உள்ள வைட்டமின் ஏ,பி சத்துக்கள் ஒரு பாதுகாப்பு விளைவை உண்டு பண்ணும். பழங்களைத் தொடர்ந்து உபயோகித்துவர ஞாபகசக்தி கூர்மைப்படும், நரம்புச் சோர்வு, மனஇறுக்கம், உறக்கமின்மை தீரும்.
விதைகள் உள்ள பழங்கள் அனைத்தும் இரத்த விருத்திக்கும், நரம்புகளை வலிமைப்படுத்துவதற்கும் பயன்படும்.
கல்லீரல் உபாதைகளிலும் அசீரணம் மற்றும் கீல்வாதத்திலும் எலுமிச்சை சிறந்த பரிகாரமாக அமையும். முலாம்பழம் சிறுநீரகத்தை சுத்தம் செய்யும்.
நாட்பட்ட மார்பு, நாசி உபாதைகளுக்கும், நீர்க்கோர்ப்பு தொல்லைக்கும் அன்னாசி, மாதுளம்பழங்கள் சிறந்த நிவாரணமாக அமையும். திராட்சைப் பழம் சளி நீக்கும். இதன் சாறு கழிவு உறுப்புக்களைத் தூண்டுவதன் மூலம் நோயை முறியடிக்கும்.
நன்கு பழுத்த புத்தம் புது ஆப்பிள், வாழை, திராட்சைப் பழங்கள் மூளையின் பற்றாக் குறைகளை நீக்கும். மூளைக்குப் புத்துணர்ச்சி ஊட்டும் சக்தியாக மாறக்கூடிய, எளிதில் தன்மையமாகக்கூடிய சர்க்கரைகள் பழத்தில் உண்டு. அக்ரோட்(Walnut) மூளை பலவீனத்துக்கு சிறந்த நிவாரணி.
சாப்பாட்டில் பழங்களை தாரளமாக சேர்த்துக் கொள்கிறவர் ஆரோக்கிய வாழ்வு வாழ முடியும். பழங்கள் எல்லா நோய்களையும் வரவொட்டாமல் தடுக்கும். அது ஒருவரை வாழ்நாள் நெடுக்கவும் சுறுசுறுப்பும், செயல் வேகமும் உடையவராய் வைத்து இருக்கும்.
நன்றி : நரேந்திரன்
வெந்தயத்தைத் தோசையாய் செய்து சாப்பிடலாம். இதனால் உடல் வலுவாகும். மெலிந்திருப் பவர்கள் பருமனாகலாம். ... |
உங்கள் நிரிழிவை கட்டுப்பாட்டில் வைத்திருக்காவிடில் எதிர்காலத்தில் அது பலவிதமான பாதிப்புகளை ஏற்படுத்தும். உதாரணமாக, கண்பார்வை ... |
பன்றிக்காய்ச்சல் இன்புளூயன்சியா எச்1 என் 1 என அழைக்கப்படுகிறது. இதில் மூன்று வகை ... |
Leave a Reply
You must be logged in to post a comment.