அதிகரித்து வரும் கொலை சம்பவங்கள் தொடர்பாக அமைச்சர் ரகுபதி கூறும் பதிலைக் கேட்டு சிரிப்பதா? அழுவதா? என தெரியவில்லை, ” என்று தமிழக பா.ஜ., தலைவர் அண்ணாமலை கூறியுள்ளார்.
அண்ணாமலை நிருபர்களிடம் கூறியதாவது: போலீஸ் மீதான அச்சம் போய் விட்டதால், நாள்தோறும் 15 கொலை நடக்கிறது. தற்போது கொலை சம்பவங்கள் அதிகரித்து உள்ளது. இதற்கு, போலீசாரின் கைகள் கட்டப்பட்டதே காரணம். போலீஸ் ஸ்டேசனில் போலீசார் வேலை செய்வதில்லை. அதிக கொலை நடப்பது தான் எங்களின் குற்றச்சாட்டு. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு கெட்டுவிட்டது என்பது தெளிவாகி உள்ளது. கொலை தொடர்பாக கேள்வி எழுப்பினால், அமைச்சரின் பதிலை கேட்டு சிரிப்பதா? அழுவதா? எனத் தெரியவில்லை.
காவிரி விவகாரத்தில் மத்திய அரசு மீது சந்தேகம் உள்ளதாக அமைச்சர் துரைமுருகன் கூறுகிறார். ஆனால், துரைமுருகன், தி.மு.க., கர்நாடக அரசிடம் பணம் வாங்கிவிட்டதா என்பது எனது சந்தேகம். இதுவரை கர்நாடகா காங்கிரஸ் அரசை ஒரு வார்த்தை கூட அவர்கள் விமர்சிக்கவில்லை. அறிக்கை விடவில்லை.
சிவக்குமார் உள்ளிட்டோர் சொல்வது தவறு என சொன்னது அறிக்கை விட்டது கிடையாது. அவர்கள் தவறு செய்துவிட்டார்கள் என விமர்சனம் செய்யவில்லை. கர்நாடகாவில் தி.மு.க.,வினருக்கு தொழில் உள்ளது. விமர்சித்தால் அதற்கு பாதிப்பு வரும் என அஞ்சுகின்றனர். காங்., அரசு செய்யும் தப்பை ஏன் தி.மு.க., கேட்கவில்லை என மக்கள் நினைக்கின்றனர். இவ்வாறு அண்ணாமலை கூறினார்.
சிலருக்கு மூலம் வெளியே வரும் உள்ளே போகும். இப்படிப்பட்டவர்கள் அத்தி இலையில் ... |
சர்க்கரை வியாதி உடையவர்களுக்குக் கணையத்திலிருந்து குறைந்தளவு "இன்சுலின்" சுரப்பதாலோ அல்லது போதுமான இன்சுலின் ... |
இயற்கையின் மிகச் சிறந்த ஆயுதம் பட்டினி. நோயை எதிர்க்கவும், குணமாக்கவும் இயற்கையாகவே உடல் ... |