இந்தியாவின் பாதுகாப்பை உறுதி செய்தார் பிரதமர் மோடி: அமித்ஷா பேச்சு

இந்தியாவின் செழிப்பையும், பாதுகாப்பையும் பிரதமர் மோடி உறுதி செய்தார். வரும் சட்டசபை தேர்தலில் தேஜ கூட்டணி வெற்றி பெறும் என மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா பேசினார்.

புதுச்சேரி மாநிலம், காரைக்காலில் பாஜ பொதுக்கூட்டத்தில் அமித்ஷா பேசியதாவது: திருநள்ளாறு சனீஸ்வரன், பத்ரகாளியம்மனையும் வணங்கி உரையைத் தொடங்குகிறேன். உலகின் மிக தொன்மையான தமிழ் மொழியில் உரையாற்ற முடியவில்லை என்பதற்காக மன்னிப்பு கேட்கிறேன். இரண்டு நோக்கங்களுக்காக இங்கு வந்துள்ளேன். பிரதமர் மோடி, ரங்கசாமி தலைமையில் இத்தனை ஆண்டு புதுச்சேரியில் என்ன நடந்தது என்று சொல்ல வந்துள்ளேன். இண்டி கூட்டணியின் தீய நோக்கத்தை கிழித்து எறிய நான் இங்கு வந்துள்ளேன். புதுச்சேரியில் ஊழலை தேஜ கூட்டணி அரசு முடிவுக்கு கொண்டு வந்துள்ளது. தேஜ கூட்டணி அரசு வேண்டுமா? வேண்டாமா? மக்கள் முடிவு செய்வார்கள்.

தீய சக்தி புதுச்சேரியில் அரசியல் நிலைத்தன்மை, ஸ்த்திரத்தன்மையை உருவாக்கி இருக்கிறோம். 2019ல் புல்வாமா தாக்குதலில் 40 சிஆர்பிஎப் வீரர்கள் உயிரிழந்தனர். நாட்டை காத்த வீரர்களுக்கு இன்று அஞ்சலி செலுத்துகிறேன். காங்கிரஸ் ஆட்சியில் தினந்தோறும் பயங்கரவாத தாக்குதல் நடந்தது.

அன்றாட தாக்குதலை காங்கிரஸ் வாடிக்கையாக மாற்றி இருந்தது. இது குறித்து வாய் திறக்க மாட்டார்கள். காங்கிரஸ் ஆட்சியில் பயங்கரவாதிகள் ஆட்டம் போட்டனர். பிரதமர் மோடி பயங்கரவாதிகளை ஒடுக்கினார். எந்த தீய சக்தியும் நாட்டின் மீது கண் வைக்க முடியாது.

பாடம் பாகிஸ்தானுக்கு பிரதமர் மோடி பாடம் கற்பித்தார். மோடி ஆட்சிக்கு வந்த பிறகு முதன் முதலாக பயங்கரவாதிகள் மீது தாக்குதல் நடத்தப்பட்டது. பயங்கரவாதிகள் ஊடுருவல் குறித்து காங்கிரஸ் கட்சியினர் யாரும் வாய் திறக்கவில்லை. காங்கிரஸ் ஆட்சியில் ஒவ்வொரு நாளும் பாகிஸ்தானில் இருந்து பயங்கரவாதிகள் தாக்குதல் நடத்துவார்கள். இந்தியாவின் செழிப்பையும், பாதுகாப்பையும் பிரதமர் மோடி உறுதி செய்தார். நாட்டுக்கு வலுவான பாதுகாப்பை பிரதமர் மோடி அளித்துள்ளார். துல்லிய தாக்குதல் மூலம் பாகிஸ்தானுக்கு பதிலடி கொடுத்துள்ளோம்.

ஊழல் ஆப்பரேஷன் சிந்தூர் ராணுவ நடவடிக்கை வெற்றிகரமாக நடத்தி பாகிஸ்தான் தாக்குதலுக்கு மோடி முற்றுப்புள்ளி வைத்துள்ளார். புதுச்சேரியில் தேஜ கூட்டணி, ரங்கசாமி, பிரதமர் மோடி ஆகியோர் மீது மக்கள் நம்பிக்கை வைத்துள்ளனர். 2021ல் நடந்த புதுச்சேரி தேர்தலில் மக்கள் நமக்கு 44 சதவீத ஆதரவை அளித்துள்ளனர்.

வரும் தேர்தலில் 60 சதவீத ஓட்டுக்களை பெற்று 24 இடங்களுக்கும் மேல் தேஜ கூட்டணி வெற்றி பெறும். மோசமான காங்கிரஸ் ஆட்சியாளர் நாராயணசாமி அரசு. அவர்களது ஆட்சியில் ஊழல் நிரம்பி இருந்தது.

5 ஆண்டுகளில் நாராயணசாமி ஆட்சியில் ஊழல் மட்டுமல்லாமல் நிர்வாக சீர்கேடும் இருந்தது. தற்போது சிறப்பான ஆட்சியை முதல்வர் ரங்கசாமி அளித்து வருகிறார். புதுச்சேரியில் 5 ஆண்டுகள் சட்டம் ஒழுங்கை சீர் செய்துள்ளோம். வளர்ச்சி பயணத்தை தொடர வேண்டும். அடுத்த ஐந்து ஆண்டுகளில் புதுச்சேரி மேலும் வளர்ச்சி பெறும். புதுச்சேரியை வளர்ச்சி அடைந்த மாநிலமாக மாற்றுவோம்.

அக்கறை 3 துறைகளில் கவனம் செலுத்தி புதுச்சேரியை மேம்படுத்த உள்ளோம். மீனவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உள்ளோம். புதுச்சேரி மீனவர்கள் நலனில் கவனம் செலுத்துவோம். இளைஞர்களை மனதில் கொண்டு புதுச்சேரியை தகவல் தொழில்நுட்ப மையமாக மாற்ற வேண்டும். இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை ஏற்படுத்தி தரும் பணியில் ஈடுபடுவோம். ஐடி, ஏஐ புரட்சியில் புதுச்சேரி மையமாக வேண்டும். தமிழ், தமிழர்கள் மீது பிரதமர் மோடி அக்கறை கொண்டுள்ளார்.

புத்துயிர் திருவள்ளுவர் பெயரில் ஊக்கத்தொகை திட்டத்தை அறிவிப்பதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். ராஜீவ் குடும்பத்தின் ஏடிஎம் ஆக புதுச்சேரியை காங்கிரஸ் ஆக்கி இருந்தது. மலேசியாவில் தமிழ் மொழிக்கு சிறுபான்மை மொழி என்ற அந்தஸ்து கிடைத்துள்ளது.

புதுச்சேரியில் கடந்த கால ஆட்சியில் ஒரு தொழில் கூட புதிதாக துவங்கப்படவில்லை. தற்போது இங்கு தயாரிக்கப்படும் லேப் டாப்கள் உலக நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகின்றன. ஜவுளி துறைக்கு புத்துயிர் ஊட்டியுள்ளோம்.

வர்த்தக ஒப்பந்தம் பொய் பேசுவதையே தொழிலாக கொண்டுள்ளார் ராகுல். பிரதமர் மோடி மேற்கொண்டுள்ள வர்த்தக ஒப்பந்தங்களால் நிறைய பலன்கள் கிடைக்கும். வர்த்தக ஒப்பந்தங்களில், விவசாயிகள், மீனவர்கள் மற்றும் சிறு, குறு தொழில் நிறுவனங்களின் 100 சதவீத பாதுகாப்பு உறுதி செய்யப்பட்டுள்ளன. விவசாயிகள், மீனவர்களை ராகுல் தவறாக வழிநடத்த முயற்சி செய்கிறார். இவ்வாறு அமித்ஷா பேசினார்.

Comments are closed.

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப ...

ஆயுதக் குழுக்களை வேட்டையாட கோப்ரா கமாண்டோ மணிப்பூர் மலைகளில் கோப்ரா கமாண்டோக்கள்: ஆயுதக் குழுக்களை வேட்டையாட ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத ...

நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன் "நான் மாறமாட்டேன்; மக்களில் ஒருத்தியாகவே நீடிப்பேன்" – வீட்டுப் ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை ...

குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள் குறைவாக பேசுங்கள், அதிகமாக வேலை செய்யுங்கள், மேற்கு வங்காள ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அ ...

ராமர் கோவில் உத்தரவை திருத்தி அமைக்க நினைத்தார் ராகுல் காந்தி தலைப்பை படித்தவுடன்.... சுப்ரீம்கோர்ட் தீர்ப்பை எல்லாம் திருத்தி அமைக்க ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF ...

வங்கதேச எல்லையில் வேலி அமைக்க BSF-க்கு நிலத்தைமாற்ற ஒப்புதல் – மேற்கு வங்க முதல்வர் அறிவிப்பு வங்கதேச எல்லையோரம் வேலி அமைப்பதற்காக, எல்லைப் பாதுகாப்புப்படைக்கு (BSF) ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை ...

594 கிமீ கங்கை எக்ஸ்பிரஸ் சாலையை திறந்து வைத்த பிரதமர் மோடி உத்தரப் பிரதேசத்தின் மேற்கு, கிழக்கு மாநிலப் பகுதிகளை இணைக்கும் ...

மருத்துவ செய்திகள்

கோரைக் கிழங்கு மருத்துவக் குணம்

உடல்பலம் பெருக்கியாகவும் தாதுவெப்பு அகற்றியாகவும், சிறுநீர், வியர்வை பெருக்கியாகவும், சதை நரம்புகளைச் சுருங்கச் ...

ஜலதோஷம் குணமாக

கடுகு, திப்பிலி, சீரகம், மிளகு மற்றும் சுக்கு இவற்றில் சிறிதளவு எடுத்து கொள்ள ...

அரச இலையின் மருத்துவக் குணம்

அரச இலைக் கொழுந்தை விழுதாக அரைத்து நெல்லிக்காய் அளவும் பாலில் கரைத்து, காலையில் ...