உலக ஊழல் பட்டியலில் இந்தியாவை முன்னுக்கு கொண்டுவரும் முயற்சியோ!

உலக மக்கள் தொகையில் இரண்டாவது இடத்தை வகிக்கும் இந்தியாவால் லண்டன் ஒலிம்பிக்கில் ஜொலிக்க முடியவில்லை , உலக பதக்க பட்டியலில் 41வது இடத்தை பிடிக்கதான் முடிந்தது. இந்த விரக்க்த்தியினால் தானோ எண்ணவோ. இந்தியாவை எப்படியும் உலக ஊழல் பட்டியளிலாவது முன்னுக்கு கொண்டு வந்தே தீருவது என காங்கிரஸ் அரசாங்கம் கங்கணம் கட்டிக்கொண்டு செயல்படுவதாகவே தோன்றுகிறது.

இந்திய இராணுவத்தின் தியாகத்தை அவமானபடுத்திய ஆதர்ஷ் ஊழல் , உலக நாடுகளின் மத்தியில் இந்த தேசத்தை தலைகுனியவைத்த காமன்வெல்த் போட்டி ஊழல் , இந்த தேசத்தின் பாதுகாப்பையே கேள்விக்குறியாக்கிய 2G அலைக்கற்றை ஊழல், இப்போது இந்த தேசத்தின் மூலாதாரமாகிய இயற்க்கை வளங்களை அடிமாட்டு விலைக்கு தனியாருக்கு தாரைவார்த்த நிலக்கரி ஊழல், பெயர்கள் வேண்டுமானால் மாறியிருக்கலாம் ஆனால் இலக்கு மாறவில்லை .

கடந்த 1970-ம் ஆண்டு வரை நிலக்கரி வயல்கள் தனியார் மாஃபியா கொள்ளை கும்பலிடமே இருந்தது. அவர்கலோ அளவுக்கு அதிகமாக நிலக்கரியை வெட்டி எடுத்து அந்நிய தேசத்துக்கு கடத்தினர் . அதனை தொடர்ந்தே நிலக்கரி கண்டுபிடிக்கப்பட்ட நிலங்கள் அனைத்தும் தேசியமயமாக்கப்பட்டன. இந்த சுரங்கங்களை பொது துறை மின் உற்பத்தி நிறுவனங்​களே பயன்படுத்தி வந்தன , இதனால் மின்சாரத்தை மிக குறைவான விலைக்கு உற்பத்தி செய்யவும் முடிந்தது

கடந்த 2004-ம் ஆண்டு காங்கிரஸ் ஆட்சிக்கு வந்த பிறகு டாடா , ஜிண்டல் , எஸ்ஸார் , அதானி உளிட்ட 25 நிறுவனங்கள் தங்கள் இரும்பு எஃகு , மின்உற்பத்திக்கு முக்கிய மூலப்பொருளான நிலக்கரியை மத்திய அரசிடம் கோரியது. அப்போது, நிலக்கரித் துறைக்கு பொறுப்பு வகித்த பிரதமர் மன்மோகன் சிங் இதை ஏல முறையில் யார் அதிக பணம் தருகிறார்களோ அவர்களுக்கு ஒதுக்குவதா அல்லது நியமன அடிப்படையில் ஒதுக்குவதா என கேள்வி எழுப்பியபோது . இந்தத் துறையின் செயலாளர், 'இந்த நிறுவனங்களுக்கு ஏல முறையில் ஒதுக்க வேண்டும்' என்று குறிப்பு எழுதி அனுப்பியுள்ளார் . ஆனால் இது குறித்து 2006 ஆண்டு வரை பிரதமர் எந்த முடிவையும் எடுக்கவில்லை.

அதுவரை பல்வேறு துறை அதிகாரிகளை உள்ளடக்கிய ஸ்கிரீனிங் கமிட்டி என்ற ஒன்றுதான் யாருக்கு எவ்வளவு ஒதுக்கீடு செய்யவேண்டும் என முடிவெடுத்தது. ஆனால் இவர்கள் யாருக்கு எவ்வளவு ஒதுக்குகிறார்கள், எந்த அடிப்படையில் ஒதுக்கீடு செய்கிறார்கள் என்பதை யாரும் கேள்வி கேட்க முடியாது. அப்படி என்றால் கேட்க்கவா வேண்டும் இவர்கள் எந்த அளவுக்கு நேர்மையாக செயல்பட்டிருப்பார்கள் என்று , எனவே, இந்த முறையால் ஒரு சில குறிப்பிட்ட நிறுவனங்கள் மட்டுமே தொடர்ந்து பயன்பெற்று வருவதாக கூறி நிலக்கரி துறை செயலாளர்கள் இந்த முறையை எதிர்த்தார்கள். ஆனால், பிரதமர் அலுவலகமோ இந்த ஸ்கிரீனிங் கமிட்டி முறையைத்தான் ஆதரித்து இறுதி உத்தரவை பிறப்பித்தது. இன்றைய சிக்கலுக்கு இந்த உத்தரவே மூலகாரணமாகவும் அமைந்துவிட்டது!

இவர்களது தவறான முடிவினால் கடந்த 2005-ம் ஆண்டிலிருந்து 2009-ம் ஆண்டு வரைஉலக ஊழல் பட்டியல் நாட்டின் பல மாநிலங்களில் பரவி இருக்கும் 142 நிலக்கரி சுரங்கங்களை நியமன அடிப்படையில் 25 தனியார் முன்னணி நிறுவனங்களுக்கு ஒதுக்கியதில் அரசுக்கு ரூ.1 லட்சத்து 86 ஆயிரம் கோடி இழப்பு ஏற்ப்பட்டுள்ளதாகவும் , இதன் மூலம் தனியார் நிறுவனங்கள் மிகப்பெரிய லாபம் அடைந்துள்ளதாகவும் தலைமை கணக்கு தணிக்கை துறை அதிகாரி தனது அறிக்கையில் தெளிவாக தெரிவித்துள்ளார்.

ஆனால் இவர்களோ காங்கிரஸ் அல்லாத ஆளும் மாநில அரசுகள் கொடுத்த நெருக்கடி காரணமாகத்தான் நாங்கள் இந்த முடிவை எடுத்தோம் என பிரச்சனையை திசைதிருப்ப முயற்சி செய்கின்றனர் , பொதுவாக மாநில அரசுகள் மின்திட்டங்களுக்கு நிலக்கரி வழங்க சிபாரிசை வேண்டுமானால் செய்யலாம். ஆனால், அதை முறையோடு வழங்கவேண்டிய பொறுப்பு மத்திய அரசுடையதே.

சரி ஒரு யூனிட் மின்சாரத்தை குறைவான விலைக்கு உற்பத்தி செய்யதான் நிலக்கரி சுரங்கங்கள் தனியாருக்கு சலுகை விலையில் தாரைவார்க்கப்பட்டது என்றால் ரிலையன்ஸ் மின் உற்பத்தி நிறுவனம் எப்படி ரூ. 29 ஆயிரம் கோடி எனும் அபரிதமான லாபத்தை ஈட்டியது?.

ரிலையன்ஸ் மின் நிறுவனம் 4 ஆயிரம் மெகாவாட் சாசன் மின் உற்பத்தித் திட்டத்தை மத்தியப் பிரதேசத்தில் செயல்படுத்தியது. ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 1.19 என மிக குறைவாக நிர்ணயிக்கப்பட்டதால் , மொகெர், மொகெர் அம்லோஹ்ரி, சத்ரசால் ஆகிய நிலக்கரி சுரங்கங்கள் சலுகைவிலையில் ஒதுக்கப்பட்டன. இந்நிலையில், சாசன் திட்டத்துக்குப் போக மீதியிருக்கும் நிலக்கரியை சித்ராங்கி மின் திட்டத்துக்கு கொண்டு செல்ல மத்திய அரசு விதிமுறையை மீறி அனுமதியளித்துள்ளது இங்கே தான் ஊழல் தனது தலையை நீட்டுகிறது .

சாசன் திட்டத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ. 1.196 என நிர்ணயித்ததால், சலுகை விலை நிலக்கரி என்பது சரியே , ஆனால் சித்ராங்கி திட்டத்தில் ஒரு யூனிட் மின்சாரம் ரூ.3.70 என நிர்ணயிக்கப்படும் போது சலுகை விலை நிலக்கரி என்பது சரிதான?. இதன் மூலம் அந்த நிறுவனம் ரூ. 29 ஆயிரம் கோடி அபரிதமான லாபத்தை அல்லவா ஈட்டியுள்ளது . பா,ஜ,க ஆளும் மாநில அரசுகளா இவ்வாறு விதிமுறைகளை மீறிய சலுகைகளை வழங்க வலியுறுத்தினர்?.

சலுகை விலையில் பல நிறுவனங்கள் அபரிதமான ஆதாயத்தை பெற்றது என்றால் , அதற்க்கு சலுகை காட்டிய அரசு ஆதாயத்தை பெறாமலா போயிருக்கும்?. 2ஜி ஸ்பெக்ட்ரம் ஊழலில் அத்துறைக்கு பொறுப்பு வகித்த தொலை தொடர்பு துறை அமைச்சர் ராஜா பதவி விலகினார் . அதே போன்று பிரதமர் மன்மோகன் சிங்கும் பதவி விலக வேண்டியதுதானே . தனக்கு கீழ் 14 ஊழல் கரை படிந்த அமைச்சர்களை வைத்திருக்கும் இவர் எப்படி ஒரு நேர்மையானவராக இருக்க முடியும் ?.

நிலக்கரி ஊழலில் மன்மோகன் சிங் வேண்டுமானால் ஆதாயம் பெறாமல் போயிருக்கலாம் , ஆனால் காங்கிரஸ் கட்சியோ , அந்த கட்சியை சேர்ந்த தலைமையோ அல்லது ஒருகூட்டமோ பெரும் ஆதாயம் பெற்றிருக்கலாம் , அதற்ககு பிரதி பலனாக கூட அவர் பிரதமர் பதவியில் நீடித்து கொண்டும் இருக்கலாம் . தனக்கு கீழே இருக்கும் பலர் கொள்ளை அடிக்க அதை கண்டும் காணமல் இருப்பது எப்படி நேர்மையாகும் .

காங்கிரஷின் ஊழல் எனும் சேறு இந்த தேசத்தை மூழ்கடித்து கொண்டிருக்கிறது, முழ்கும் வரை மூழ்கட்டும் இந்த சேற்றிலிருந்து தாமரை மலரபோவது மட்டும் நிச்சயம், தாமரை சேற்றில் இருந்து கிளம்பினாலும் அது ஒரு மாசுபடாத மலர் என்று பகவத்கீதையே கூறுகிறது

தமிழ் தாமரை VM .வெங்கடேஷ்

நிலக்கரி ஊழல், நிலக்கரி வயல்கள், நிலக்கரி தனியார்

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந் ...

உங்களிடம் ஆசிர்வாதம் பெறவே வந்துள்ளேன் கோவையில் கஸ்தூரி நாயக்கன்பாளையம் பகுதியில் பிரச்சாரம் மேற்கொண்ட அண்ணாமலை ...

இது சாதாரண தேர்தல் அல்ல

இது சாதாரண தேர்தல் அல்ல பாஜக மற்றும் கூட்டணி வேட்பாளர்கள் ஒவ்வொருவரும் வெற்றிபெற்று, நாடாளுமன்றத்தில் ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாதத ...

60 ஆண்டில் காங்கிரசால் முடியாததை 10 ஆண்டுகளில் செய்து முடித்தேன் காங்கிரஸ்கட்சி பிரிவினைவாதத்தை தூண்டியது. ஆனால், நான் பிராந்தியத்தில் அமைதி ...

பால் மற்றும் மின் கட்டண உயர்வே ...

பால் மற்றும்  மின் கட்டண உயர்வே திமுக -வின் சாதனை இந்தியாவின் பாதுகாப்பை பிரதமர் மோடி உறுதி செய்துள்ளார்'' என ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் வ ...

இந்திய கல்வி முறையில் மாற்றம் விரும்பும் மோடி பிரதமர் நரேந்திரமோடி மற்றும் மைக்ரோசாப்ட் நிறுவனர் பில்கேட்ஸ் இடையே ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் த ...

மற்றவர்களை அச்சுறுத்துவதும் தொல்லை கொடுப்பதும் காங்கிரஸின்  கலாச்சாரம் நீதித்துறையின்மீது அழுத்தம் தரப்படுவதாகவும் நீதிமன்றங்கள் அவமதிப்படுவதாகவும் நூற்றுக்கணக்கான வழக்குரைஞர்கள் ...

மருத்துவ செய்திகள்

கொடிமுந்திரிப் பழத்தின் பயன்

கொடிமுந்திரியோ பழத்திற்குச் சுரம், அருசி, அதிக தாகம், உடல்புண்கள், இரைப்பு, கஷாயம், இரத்த ...

உடல் சூட்டை தணிக்கும் எலுமிச்சை

மஞ்சள் நிறத்துல இருக்குற எலுமிச்சையை உங்களுக்கு நன்றாக தெரிஞ்சிருக்கும். எலுமிச்சை பழம், காய்,இலை ...

புற்றுநோயை குணபடுத்தும் ஒட்டக பால்

அரபு நாடுகளை சேர்ந்த விஞ்ஞானிகள் ஒட்டகப் பால் மற்றும் அதன் சிறுநீரில் இருந்து ...