இந்தியாவில் அதிக சாலை விபத்து நேரிடும் மாநிலங்கள் பட்டியலில் தமிழ்நாடு இரண்டாவது இடத்தை பிடித்துள்ளது.
இந்தியாவில் அதிக சாலை விபத்து நேரிடும் மாநிலமாக உத்தர பிரதேசம் (23, ஆயிரம் பேர்)உள்ளது. எனவே உத்தரப்பிரதேசம் சாலை விபத்துகளின் உயிரிழப்புகளில் முதல் இடத்தை பிடித்துள்ளது.
ஆண்டுக்கு 10.6 சதவீதம் (18,000 பேர்) சாலை விபத்துகளுடன் தமிழகம் இரண்டாவது இடத்தில் உள்ளது. சாலை விபத்துகளில் 3வது இடத்தில் மகாராஷ்டிராவும் 4வது இடத்தில் மத்திய பிரதேசமும் உள்ளது.
இந்திய நகரங்களில் டெல்லி ஆண்டுக்கு 1,400க்கும் மேற்பட்ட உயிரிழப்புகளுடன் முதலிடத்தில் உள்ளது. சாலை விபத்து உயிரிழப்பில் பெங்களூர் (915) இரண்டாவது இடத்திலும் ஜெய்ப்பூர் 850 உயிரிழப்புகளுடன் மூன்றாம் இடத்திலும் உள்ளன.
இதுகுறித்து மத்திய அமைச்சர் நிதின் கட்கரி கூறுகையில், “அதிக சாலை விபத்துகளால் சர்வதேச மாநாடுகளில் பங்கேற்கும்போது வெட்கப்படுகிறேன். இந்தியாவில் மக்களின் நடத்தையை மேம்படுத்த வேண்டும். சமூகம் மாற வேண்டும். அதிவேகம் பிரச்சினை இல்லை. சாலையில் ஒழுங்கின்மைதான் இந்தியாவில் பிரச்சினை. வரையறுக்கப்பட்ட பாதையை பயன்படுத்தாதது, விதிகளை பின்பற்றாததே அதிக விபத்துக்கு காரணம். மக்களுக்கு குறிப்பாக இளைஞர்களுக்கு போக்குவரத்து ஒழுக்கத்தை கற்பிக்க வேண்டும். இந்தியாவில் ஆண்டுக்கு சுமார் 1.79 லட்சம் பேர் சாலை விபத்துகளில் உயிரிழக்கின்றனர். சாலை விபத்துகளில் உயிரிழப்போரில் 60% பேர் 18 முதல் 34 வயது உடையவர்கள்தான்” எனத் தெரிவித்துள்ளார்.
நல்ல சூழ்நிலை தியானம் குறித்த நூல்களைப் படித்தல் மகான்களின் வரலாறுகளைப் படித்தல் தியாகத்திற்கான பொருள் தியானம் மந்திரம் குறியீடு (அடையாளம்) குரு.தியானம் ... |
1. மஞ்சள் கரிசலாங்கன்னித் தழைகள் கைப்பிடி அளவு 2. புதினாத் தழைகள் இரண்டு கைப்பிடி ... |
செம்பரத்தை பூவை நல்லெண்ணெயிலிட்டுக் காய்ச்சித் தலைக்குத் தடவிவரத் தலைமுடி நன்கு நீண்டு வளரும். |