இந்தியாவின் நலனுக்கு எதிரான கொள்கைகளை ஏற்றுக் கொண்டுள்ள பாகிஸ்தான், வெளிப்படையாகவே இந்திய இறையாண்மைக்கு சவால்விடுத்து வருகிறது. அதேநேரத்தில், இந்திய துணைக் கண்டத்தில் சீனா, பொருளாதாரபோரை ஏவி, திட்டமிட்டே செயல்பட்டு வருகிறது என்று ஆர்எஸ்எஸ். இயக்க தலைவர் மோகன்பகவத் கருத்து தெரிவித்துள்ளார்.
ஒடிசாவில் நடந்த ஒரு பொதுக்குட்டத்தில் கலந்துகொண்டு அவர் மேலும் பேசியதாவது; பாகிஸ்தான் இராணுவம் தீவிரவாதிகளை பயன்படுத்தி, இந்திய ராணுவத்தினரின் தலையை வெட்டுகிறது. இந்தியாவுக்கு எதிரான கொள்கைகளை கொண்டு, பாகிஸ்தான் எல்லையில் அத்துமீறி நடந்துகொள்கிற போது அதற்கு எதிரான கடுமையான நடவடிக்கைகளை எடுக்க சர்வதேசசமூகம் கேட்டுவருகிறது.
ஆனால், இதுபோன்ற நடவடிக்கைகளை, நிறுத்த இந்தியா பாகிஸ்தானை கேட்காதது ஏன்? இந்தியா, பாகிஸ்தானின் அத்து மீறல்கள் குறித்து பேசிவருகிறதே தவிர, அதைநிறுத்துவதற்கு நடவடிக்கை எடுக்காதது ஏன்?. நாட்டின் பாதுகாப்பு பற்றி , மக்கள் கவலையடைந்து வருகின்றனர்.
இந்தியா இருஎதிரிகளின், சவால்களை சந்தித்துவருகிறது. ஒன்று வெளிப்படையானது. இன்னொன்று மறை முகமானது. இந்தியாவின் வலிமையை, சீர்குலைக்க சீனா பக்கத்துநாடுகளுடன் செல்வாக்கை பெருக்கிவருகிறது.
மேலும் மலிவானபொருட்களை இந்தியாவிற்குள் விட்டு, இந்திய பொருளாதாரத்தை சீர்குலைத்துவருகிறது. பிரம்மபுத்திரா நதியில் வரும் இந்தியாவுக்கான நீரை அவர்களின் நாட்டிற்கு திருப்பிவிடும் வேலைகளையும் சீனா செய்துவருகிறது. இது மறைமுகமான ஒருதாக்குதல் ஆகும என்றார்.
தேன் மிகசிறந்த உணவு பொருளாகும். தேன் மூலம் எல்லா நோய்களையும் குணப்படுத்த முடியும். ... |
வியர்வை பெருக்கியாகவும், கோழையகற்றியாகவும், காய்ச்சல் தணிக்கும் மருந்தாகும் செயல்படுகிறது. |
சின்னம்மைக்கு காரணம் 'வேரிசெல்லா' என்கிற வைரசாகும், இது காற்றின் மூலம் பரவ கூடியது. ... |
Leave a Reply
You must be logged in to post a comment.