தியானம் என்றால் என்ன?

 தியானம் என்றால் எண்ணுதல் அல்லது நினைத்தல் என்று பொருளாகும்.

மனம் ஒரே பொருளின் மேலேயே ஓடி கொண்டிருக்கும் நிலைக்குத் தியானம் என்று பெயர்.

மனம் சுறுசுறுப்பாக இயங்கிக் கொண்டிருக்கக் கூடியது. சுட்டிக் குழந்தையைப் போல அல்லது குட்டி நாயைப் போல ஒரு கன்று குட்டிப் போல செயல்படுவது மனம்.

எதையாவது அர்த்தமில்லாமல் செய்து கொண்டும், குறிக்கோளின்றி அலைந்து கொண்டும் தன் இச்சைப்படி சுற்றிக் கொண்டிருப்பது மனம். எனவே மனதைப் பொருளோடு வேலையில் ஈடுபடுத்துவதும் ஒரு குறிக்கோளில் இயங்க வைப்பதும், அடங்கி இயங்கிச் செய்வதும் மிகக் கடினமாகும்.

தன் போக்கில் விரைவாக அதிவேகமாக இயங்கிக் கொண்டிருக்கும் ஒரு மனிதனின் எண்ணங்கள் பல்வேறு செய்திகளில் நாலா பக்கங்களிலும் சிதறிக் கொண்டிருக்கின்றன.

இவை அடக்கப்பட்டால் அல்லது ஒரு பொருளில் குவிக்கப்பட்டால் அளவற்ற மின்சக்தி வீணாக்காமல் சேமிக்கப்படும். அப்படிப்பட்ட மனம் கூர்மையானதாகவும் வலுமையானதாகவும் ஆகிறது. குறிப்பிட்ட வேலையில் மட்டும் ஈடுபடுவதாகவும் வெற்றியைத் தருவதாகவும் இருக்கும்.

இதுபோல வீணாகும் மனசக்தியைச் சேமித்து வலிமை மிக்கதாக மனதை வலுவடையதாகக் செய்ய ஒரு பயிற்சி தேவை. அப்பயிற்சிதான் தியானம்.

ஒரு பொருளை முழுதும் அறிந்து கொள்ள வேண்டும் என்ற துடிப்போடு ஆன்மாவை குரங்குப்பிடியாகப் பிடித்துக் கொள்வது தியானமாகும்.

இடைவிடாத நினைவே தியானம் எனப்படும். ஒரே பொருளைப் பற்றிய தொடர்ச்சியான நினைவே தியானம் எனப்படுகிறது. ஒரு பொருளில் மட்டுமே குவிக்கப்பட்ட மனம் வேறு செய்திகளைப் பற்றிய குறுக்கீடு இல்லாமல் ஒரு குறிப்பிட்ட நேரத்திற்கு அதே நிலையில் இருக்கும் என்றால் அதற்குத் தியானம் என்று பெயர்.

தியானம் – தவம் – Meditation எல்லாம் ஒன்றுதான். தவம் : தன்னை அறிந்து தலைவனாகிய இறைநிலையை அறிதல். இதைத்தான் வள்ளலார் "தலைவா நினை பிரியாத நிலையையும் வேண்டுவனே" என்றார்.

'தீ' என்றால் அறிவு. தியானம் என்றால் பயணம். நம் மனதை அறிவை நோக்கிச் செலுத்துதல் தானமாகும். ஞானமே வடிவமாகக் கொண்ட ஆன்ம ஸ்வருபத்தில் மனதை நிலைக்கச் செய்வது தியானமாகும்.

புலன்களை நோக்கி மனிதன் ஒட்டத்தைத் தடுத்து அதை உள்முகமாகச் செலுத்தி அதற்கு ஒளியைத் தந்த ஆன்மாவில் இரண்டறக் கலக்கச் செய்வதே தியானமாகும்.

எண்ணம், சொல், செயல் மூன்றும் ஒன்றேயாகத் தூயதாக, சிதறாததாக, வலிமையுடன், தெளிவுடன் இருக்கும் மனநிலைக்கு தியானம் என்று பெயர். இது அஷ்டாங்க யோகத்தில் ஏழாவது படியாகும்.

விஞ்ஞானத்தில் தொட முடியாத அடிப்படை பிரச்சனை தியானம் தான். அது வசமானால் உங்கள் ஆளுமை அங்கீகாரம் பெரும். அதனுடைய நறுமணம் எங்கும் எதிலும் பரவும்.

தன்னை அறிவது தியானமா? அல்லது தன்னை அறிவதன் மூலம் தன் ஆன்மாவை அறிவது தியானமா? அல்லது தன் ஆன்மாவை உணர்வதின் மூலம் வெட்ட வெளியில் தன்னை தொடர்புபடுத்திக் கொள்வது தியானமா? அல்லது ஜீவாத்மாவை பரமாத்வாவோடு இணைத்துப் பிறவி என்னும் பெருங்கடலை கடப்பது தியானமா? என்றால் இவை அனைத்தும் தியானம் என்று பொருளாகும்.

Leave a Reply

Tamilthamarai

தற்போதைய செய்திகள்

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்க ...

தூண்டிவிடும் பாகிஸ்தான்: பயங்கரவாதம் வீழ்த்தப்படும்: மோடி உறுதி பயங்கரவாதத்தை பாகிஸ்தான் தூண்டி விடுகிறது. அதனை இரும்புக்கரம் கொண்டு ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு மோட ...

9-வது நிர்வாக கூட்டத்திற்கு  மோடி தலைமை தாங்குகிறார் பிரதமர் திரு நரேந்திர மோடி ஜூலை 27, 2024 ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் ...

இந்தியாவின் கிராமப்புறங்களில் வறுமை ஒழிப்பு திட்டம் கிராமப்புற மக்களின் பொருளாதார நிலையை மேம்படுத்துவதற்காக, வாழ்வாதார வாய்ப்புகளை ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழா ...

கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை வெளியிடப்பட்டது கார்கில் வெற்றி தின வெள்ளிவிழாவையொட்டி நினைவு தபால்தலை இன்று ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பி ...

25-வது கார்கில் தினத்தையொட்டி பிரதமர் மரியாதை 25-வது கார்கில் வெற்றி தினத்தை முன்னிட்டு லடாக்கில் இன்று ...

பிரதமரின் வீட்டுவசதி திட்டம்

பிரதமரின் வீட்டுவசதி திட்டம் நாடு முழுவதும் நகர்ப்புறங்களில் அடிப்படை வசதி கொண்ட வீடுகளை ...

மருத்துவ செய்திகள்

அறுகம்புல்லின் மருத்துவ குணம்

அறுகம்புல் ஒரு இராஜ மூலிகையாகும் , அறுகம்புல்  நோய்களை வேருடன் அறுப்பதால் இதற்குச் ...

எலுமிச்சையின் மருத்துவக் குணம்

உடல்சூடு தணிக்கவும், பசித்தூண்டியாகவும் செயல்படுகிறது. பழச்சாறு, கரிசலாங்கண்ணிச்சாறு, பால் வகைக்கு அரைலிட்டர் வீதம் எடுத்து ...

கூந்தல் பளபளப்பாகவும் மிருதுவாகவும் இருக்க

வாரம் ஒருமுறை மருதாணி இலையை அரைத்து தலையில்தேய்த்து குளித்து வந்தால், கூந்தல் பளபளப்பாகவும், ...